ஐபோன் X தள்ளுபடி விலையில் வேண்டுமா? குடியரசுத் தினம் வரை காத்திருங்கள்!

0

விழாக்காலங்கள்/ பண்டிகை நாட்களில் மின்வணிக நிறுவனங்கள் சலுகைகளை அளிப்பது போலவே, குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியை அறிவித்துள்ளன. மின்வணிக சந்தையாக விளங்கும் ஃபிளிப்கார்ட் மற்றும்  அமேசான் ஆகிய தளங்களில் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை மீது தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.

ஆப்பிளின் சமீபத்திய போனான ’ஐபோன் எக்ஸ்’ போனுக்கு ஃபிளிப்கார்ட்டில் 3 முதல் 4 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறிய தொகையாக தோன்றினாலும், ஐபோன் எக்ஸ்- 64 ஜிபி மாதிரியின் விலையை இது ரூ.89,000 ல் இருந்து ரூ.85,000 ஆக குறைக்கிறது. ஐபோன் எக்ஸ்-256 ஜிபி விலையை ரூ.1,02,000 ல் இருந்து ரூ.98,000 ஆக குறைக்கிறது. 

முதல் மாதிரி அமேசான் இணையதளத்திலும் இதே விலையில் கிடைக்கிறது. ஆனால் இரண்டாவது மாதிரி சலுகையில் பட்டியலிடப்படவில்லை. ஃபிளிப்கார்ட் தளத்தில், ஐபோன் 6 எஸ் 22 சதவீத சலுகையில் ரூ.37,999, ஐபோன் 7 32 ஜிபி 16 சதவீத சலுகையில் ரூ.41,000 விலையில் கிடைக்கிறது. ஐபோன் 8 64 ஜிபி 14 சதவீத சலுகையில் ரூ.54,999 மற்றும் 256 ஜிபி மாதிரி 9 சதவீத சலுகையில் ரூ.69,499 விலையில் கிடைக்கிறது.

இந்த இரண்டு மாதிரிகளும் அமேசான் தளத்திலும் ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 7, 32 ஜிபி ஃபிளிப்கார்ட்டில் 16 சதவீத சலுகையில் ரூ.41,000  விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் 256 ஜிபி மாடல் 25 சதவீத சலுகையில் (ரூ.74,499 ) , ரூ.52,999 விலையில் கிடைக்கிறது.

ஃபிளிப்கார்ட்டில் இதே மாதிரி ரூ.63,999 க்கு கிடைக்கிறது. ஆப்பிளின் போட்டி நிறுவனமான சாம்சங் போன்களும் இரண்டு தளங்களிலும் சலுகையில் கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட்டில், சாம்சங் எஸ் 7 எட்ஜ், ரூ.6,000 சலுகையில் ரூ.35,900 விலையில் கிடைக்கிறது. எஸ் 7 ரூ,19,010 சலுகையில் ரூ. 26,990 விலையில் கிடைக்கிறது. ரெட்மி, மோட்டோ, ஒப்போ மற்றும் எல்ஜி ஆகிய பிராண்ட்களும் சலுகையில் கிடைக்கின்றன.

இணைய விற்பனை தளங்களுக்கு மொபைல் போன்கள் விற்பனையே பெரிய அளவில் மொத்த விற்பனையில் கைகொடுக்கின்றன. ஆனால் இவற்றில் லாபம் அதிகம் இல்லை. மொபைல் போன்கள், பேஷன் மற்றும் மின்னணு சாதனங்கள் பிரிவில் 70 சதவீத சந்தையுடன் முன்னணியில் இருப்பதக ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது. இந்த மூன்று பிரிவுகளும் அமேசான் தளத்திலும் முன்னணி பிரிவுகளாக இருக்கின்றன. ஸ்மார்ட்போன் பிரிவில் 100 சதவீத ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது.