பேராசிரியர் பணியை துறந்து பல கோடி மதிப்பு ஹோட்டல் சாம்ராஜ்யத்தை நிறுவிய 'ஹாட் பிரட்ஸ்' மஹாதேவன்! 

8

60 வயதை தாண்டிய எம்.மஹாதேவன், சென்னையின் மிக பிரபலமான ஹோட்டல்களின் உரிமையாளர் மற்றும் ஒரு சிறந்த கேக் பேக்கர். ரெஸ்டாரன்ட்'கள் பிரபலம் இல்லாத காலக்கட்டத்திலேயே, 'ஹாட் பிரட்ஸ்' (Hot Breads) என்ற பிராண்டை நிறுவி மக்களிடம் பிரபலாமாகி, பல கோடிகள் மதிப்பிலான ஹோட்டல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். இவரது இந்த அசாத்திய வளர்ச்சியின் ஆரம்பம் மிக எளிமையாகவே இருந்தது. 

கோவையில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர் மஹாதேவன். இவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்களாக இருந்த போதும் மஹாதேவனின் விருப்பம் தொழில் செய்வதில் இருந்தது. இவர் வர்த்தகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 

1979 இல் சென்னை பல்கலைகழக்கத்தில் துணை பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். அப்போதே அவருக்கு ரெஸ்டாரன்ட் தொழில் புரியும் எண்ணமும் அதில் கூடுதல் விருப்பமும் பிறந்தது. அதற்காக, ஹோட்டல் ஒன்றின் டேபிள் துடைக்கும் பணி, உணவு பரிமாறுதல் என்று பல பணிகளை செய்து அந்தத்துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டதாக ரெடிஃப் பேட்டியில் கூறியுள்ளார். 

"ஆர்தர் ஹெய்லி எழுதிய 'ஹோட்டல்' என்ற புத்தகத்தை படித்த பின்னரே எனக்கு ரெஸ்டாரன்ட் துறை மீது ஓர் ஈர்ப்பு வந்தது. எனக்கு புதிய மக்கள சந்திக்க பிடிக்கும், அதன் காரணமாகவே இந்த ஹோட்டல் துறையும் எனக்கு பிடித்துப் போனது. என் பெற்றோர்களும் பலவித மக்களை தினமும் சந்தித்தனர், ஆனால் அவர்கள் சந்தித்தவர்கள் வலியிலும் கஷ்டத்திலும் இருந்தனர். எனக்கு மகிழ்வுடன் இருக்கும் மக்களை சந்திக்கவே விருப்பம். என் பேக்கரிக்கு வருபவர்கள் அனைவரும் ஜாலி மூடில் இருப்பவர்கள்," என்றார். 

சிறிய தொடக்கதுடன் இருந்தாலும் இன்று மஹாதேவன், தெற்கில் மூன்று நிறுவனங்களின் அதிபதி; 'ஹாட் பிரட்ஸ்', 'காப்பர் சிம்மிணி-சவுத் இந்தியா' மற்றும் 'ஓரியன்டல் குவிசயின்ஸ்'. தற்போது சுமார் 30 ஹாட் பிரட்ஸ் கிளைகள் சென்னையில் மட்டும் உள்ளது, புதுச்சேரியில் இரண்டும் மேற்கு ஆசியாவில் 14 கிளைகளும், ஐரோபாவில் ஒரு கிளையுடன் விரிவடைந்து வளர்ந்துள்ளது என்று ஹிந்து செய்திகள் குறிப்பிட்டுள்ளது. 

காப்பர் சிம்மிணி சவுத் இந்தியாவின் கீழ் பல ரெஸ்டாரன்ட்கள் இயங்கி வருகிறது. அதில் 'காப்பர் சிம்மிணி', 'க்ரீம் சென்டர்', மற்றும் 'மரினா' பிரபல ரெஸ்டாரன்ட்கள் ஆகும். 'பென்ஜராங்', 'சாரா', 'என்டே கேரளம்', 'வாங்ஸ் கிட்சென்', 'தேப்பன்', 'ப்ரென்ச் லோஃப்' மற்றும் 'ப்ளானட் யம்' போன்றவை ஓரியன்டல் குவிசய்ன்ஸ் கீழ் இயங்கி வருகிறது. மொத்தத்தில் மக்களின் மனம் கவர்ந்த சுவைமிக்க ரெஸ்டாரன்ட்கள் அத்தனையுமே மஹாதேவனின் பிராண்டின் கீழ் இயங்குவதாகவே உள்ளது. 

அவரை பொருத்தவரை, "வானவே எல்லை" என்கிறார்... 

ஆங்கில கட்டுரை: Think Change India