ரஜினி முகம் பதித்த வெள்ளி நாணயங்கள், 'கபாலி' சிறப்பு ஆப் அறிமுகம்!

0

வரும் ஜூலை 22-ந் தேதி வி-க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் வெளியாக இருக்கையில், இந்தியாவின் பெரிய தங்க நிதி நிறுவனமான முத்தூட் பினான்சு, கபாலி திரைபடத்திற்கு விற்பனை பங்குதாரராக இணைந்துள்ளது. "லக்கி சூப்பர்ஸ்டார் காயின்" என்ற கபாலி ரஜினி அவர்களின் முகம் பதித்த வெள்ளி நாணயங்களை முத்தூட் பினான்சு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படம் : ஒரிசாடைரி.காம்
படம் : ஒரிசாடைரி.காம்

முத்தூட் பினான்சு லக்கி சூப்பர்ஸ்டார் வெள்ளி நாணயங்களின் விலை கீழ்வருமாறு,

5 கிராம் நாணயம் - ரூ.300/-

10 கிராம் நாணயம் - ரூ.750/-

20 கிராம் நாணயம் - ரூ.1400/-

10 கிராம் பெண்டேன்ட் - ரூ.750/-

படம்:தி இந்து பிஸ்னெஸ்லைன்
படம்:தி இந்து பிஸ்னெஸ்லைன்
"இந்த வெள்ளி நாணயங்களுக்கான முன்பதிவு எல்லா முத்தூட் பினான்சு கிளைகளிலும் செய்யப்படும். ஆனால், படம் வெளியான பின்பு தான், நாணயங்கள் டெலிவரி செய்யப்படும்" என்று முத்தூட் பாப்பச்சன் குரூப் தலைமை அதிகாரி கேயூர் ஷா தெரிவித்து கொண்டார்.

"மக்களின் நம்பிக்கை தான் எங்களுக்கு ஆதாயம். ரஜினிகாந்த் அவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், இந்த நாணயங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் எங்கள் சேவைகள் பற்றின விவரங்கள் சென்றடையும் என்று நான் நம்புகிறேன்", என்று முத்தூட் ஃபின்கார்ப்பின் இயக்குனர் தாமஸ் ஜார்ஜ் முத்தூட் கூறினார்.

"யாவரும் மலைக்கதக்க அளவிற்கு, வியக்கத்தக்க அளவிற்கு சூப்பர்ஸ்டார் இந்த கபாலி படத்தை செய்து முடித்து கொடுத்திருக்கிறார்" என்றும், "இந்த படத்திற்கு விற்பனை பங்குதாரராக இணைந்துள்ள முத்தூட் பினான்சு மென்மேலும் வெற்றிகள் காண என் வாழ்த்துக்கள்" என்றும் கபாலி பட தயாரிப்பாளர் கலைபுலி தாணு அவர்கள் கூறினார்.

மேலும், கபாலி படத்திற்கான ஆப் ( Kabali App) வெளியிடப்பட்டுள்ளது. கபாலி பட குழு விவரங்கள் மற்றும் படத்தை பற்றின அண்மை செய்திகள், இந்த ஆப்பில் வெளியிடப்படும். ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த கபாலி வரைப்படங்களை இதில் அப்லோட் செய்யலாம். வாரந்தோறும் வெற்றி பெறுபவர்களுக்கு பிரத்தியேக கபாலி விற்பனை பொருட்கள் பரிசாக அளிக்கப்படும்.