சரிதா சுப்ரமணியத்தின் கேக் பேக்கிங் மீதான காதல்!

0

சரிதா சிறு பிள்ளையாக இருந்த போது ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைக்காக பொறுமையிழந்து காத்திருப்பார். ஏனெனில் வாரத்தில் அந்த நாளை தான் தன்னுடைய தாயார் தனக்கும் தன் சகோதரனுக்கும் இனிப்புப் பண்டம் (டெசர்ட்) சாப்பிடுவதற்காக ஒதுக்கி இருந்தார். அது ஒரு புறம் என்றாலும், எங்களுடைய பிறந்தநாளின் போதும், பெரும்பாலும் குடும்பத்தின் அனைத்து பண்டிகைகளிலும் கேக் முக்கிய இடம் பிடிக்கும். பேக் செய்யப்படும் அந்த கேக்கள் மிகவும் ருசியாகவும், யம்மியாகவும் இருக்கும்.

“அநேகமாக அவர் கேக் தயாரிக்கும் ஒவ்வொரு நேரமும், எங்களுக்கு சிற்பபான பண்டிகைக் காலம் என்றே சொல்லலாம்” என்கிறார் சரிதா சுப்ரமணியம். சரிதா சென்னையின் புகழ்பெற்ற "தி பேக்கர்’ஸ் நூக்" (The Baker’s Nook) பேக்கரி பிராண்டின் நிறுவனர்.

சரிதாவும் அவருடைய சகோதரரும் வளர்ந்த பின், தங்களுடைய தாயாருக்கு பேக்கிங்குக்கு உதவி செய்தனர். “நவீன கேட்ஜட்கள் இல்லாத காலத்தில் நாங்கள் எங்களுடைய ஒட்டுமொத்த சக்தியை மட்டுமே நம்பி இருந்தோம் – நானும் என்னுடைய சகோதரனும் கேக்களுக்கு வெண்ணெய் மற்றும் சர்க்கரை தடவி தாயாருக்கு உதவி செய்தோம். ஒரு கலவை பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் மிதக்கும் அசுத்த நுரையை வேகமாக அகற்றி அதில் மாவை கலக்குவோம் - அது ஒரு இனிப்பான சன்மானம்” என்று நினைவுகூறுகிறார் சரிதா.

சரிதா தன்னுடைய தாயாரின் கரம் பிடித்துக்கொண்டு பேக்கிங் உலகில் அடிஎடுத்து வைத்தார், இன்றைய தினத்தில் அவர் ஒரு தேர்ந்த கேக் தயாரிப்பாளராக விளங்குகிறார்.

தொழில்ரீதியில் முன் எடுத்து செல்லுதல்

குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தாயாருக்கு பேக்கிங்குக்கு உதவியதால், உணவுத்துறையில் சரிதாவுக்கு ஆர்வம் இருப்பதை உணர அதுவே போதுமானதாக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கேட்டரிங் கல்லூரியில் சேர முயன்றதாகக் கூறுகிறார் சரிதா, ஆனால் அந்தப்படிப்பில் சேர ஓரளவு கணித பயிற்சி தேவை என்ற விதி இருந்தது. சரிதா ஹுமானிட்டீஸ் தொடர்பாக படித்ததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும் அவர் வீட்டிலேயே பல விதங்களில் சமைத்தும், பேக்கிங் செய்தும் அவற்றை சிறப்பான உணவாக மாற்றி மகிழ்ந்தார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில், ஏராளமான நேரம் வீணடிக்கப்படுவதை உணர்ந்தார் சரிதா. “என்னுடைய மகள் பள்ளிக்குச் செல்ல துவங்கிவிட்டாள், என் மகனை கவனித்துக் கொள்ள என் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் நான் மீண்டும் என்னுடைய பழைய, எனக்கு மிகவும் பிடித்த பேக்கிங் பக்கம் திரும்பியதாக” சொல்கிறார் சரிதா.

1994ல் தன்னுடைய குடும்பத்தினரின் உந்துதலால் சரிதா வீட்டிலிருந்தபடியே செய்யும் ஒரு கேட்டரிங் தொழிலைத் தொடங்கியுள்ளார். கிரன்ச் என் மன்ச் (Crunch N Munch)என்ற அந்த கேட்டரிங் மூலம் சென்னையின் அண்ணாநகர் மற்றும் கீழ்பாக்கம் பகுதிகளில் சைனீஸ் மற்றும் கான்டினென்டல் உணவுகள், கேக்கள், பிஸ்கட்கள் மற்றும் டெசர்ட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்திருக்கிறார் சரிதா. இவ்வகை உணவுகள் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை, சென்னையில் இவ்வகை உணவுகள் அப்போது தான் அறியப்படத் தொடங்கிய காலம்.

“புத்துணர்ச்சி தரும் கிரீம் கேக்களைத் தந்து கேக்ஸ் என் பேக்ஸ் நகரத்தில் ஒரு பரபரப்பை ஏறப்டுத்தியது. அதைத் தொடர்ந்து பிளாக் ஃபாரஸ்ட், பைன்ஆப்பிள் ஃப்ரெஷ் கிரீம், நௌகட் இன்னும் பலவற்றின் சுவையை மக்கள் சுவைக்கத் தொடங்கினர். இதன் விளைவாக என்னுடைய சிறிய தொழிலும் நல்ல நிலையில் இருந்தது, ஏனெனில் போட்டிக்களம் என்பது மிகவும் சிறியதே” என்று விளக்குகிறார் சரிதா.

அதே சமயம் மக்கள் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினருக்கும் வீட்டிலேயே பல வகை உணவுகளை சமைப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள நினைக்கும் எண்ணம் வளர்ந்து வருவதை நான் கண்டேன். அதனால், சரிதா சமையல் வகுப்புகளைத் தொடங்கும் அடுத்த அடியை எடுத்து வைத்தார். சிறிய அளவில் பேக்கிங் வகுப்புகளைத் தொடங்கிய சரிதா, எளிமையான கேக்கள், குக்கிஸ்கள், கான்டினென்டல் மற்றும் சைனீஸ் ரெசிபிக்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

1996 வரை எல்லாம் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தது, திடீரென அவருடைய குடும்பச் சூழலில் மாற்றம் வந்ததால் வியாபாரத்துக்குத் தடை போட வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிதாவின் கணவர் வெளிநாடு சென்றார், அதனால் சரிதாவுக்கு விருப்பமான தொழிலுக்கு விடைகொடுத்துவிட்டு வேறு வியாபாரத்தை கையில் எடுக்க வேண்டியதாகவிட்டது.

தன்னுடைய விருப்பத்தை மட்டும் அவரிடம் இருந்து பிரிப்பது கடினமாக இருந்தது, சரிதா தொடர்ந்து தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக புது வகைகளை சமைத்துக் கொண்டே இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் “முகநூல் பக்கத்தில் ஹோம் பேக்கர்ஸ் கில்ட்டை (Home Bakers Guild) உருவாக்கினார், இது அவரை மீண்டும் பேக்கிங் பக்கம் இழுத்தது. முகநூலில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் என் ஆழ்மனதில் உணவுத் துறையின் மீதிருக்கும் காதலை மறுஊக்கப்படுத்தின. ஆனால் எனக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய சவாலே என்னை நான் மேலும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும், ஏனெனில் 1996விட தற்போது நிலைமை மாறியுள்ளது. நான் புதிய பொருட்கள் மற்றும் யுக்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதே சமயம் சந்தை நிலவரம் பற்றி ஏராளமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தற்போது கேக் அலங்காரம், ஐசிங் பயிற்சி மற்றும் ஃபான்டன்ட் மாடலிங் போன்ற வகுப்புகளைத் தொடங்கியுள்ளதாக” தன் பயணத்தை தொடரும் சரிதா சொல்கிறார்.

தன்னைத் தானே தயார் படுத்திக் கொண்ட பின்பு, 2014 மே மாதத்தில் தி பேக்கர்’ஸ் நூக்கை(The Baker’s Nook) அவர் அறிமுகப்படுத்தினார். தொழில் ரீதியாகவும், சுயமாகவும் அது ஒரு மிகப்பெரிய முடிவு, ஏனெனில் இறுதியில் அவர் தனக்கு பிடித்த பாதைக்கே திரும்பிவிட்டார். அவருடைய குழந்தைகள் நன்கு வளர்ந்து தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதனால் அவருடைய மொத்த நேரம் மற்றும் ஆதாரங்களை தன்னுடைய புதிய வியாபாரத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டார் சரிதா.

தி பேக்கர்’ஸ் நூக்

சரிதாவிற்கு தி பேக்கர்’ஸ் நூக்கில் சென்ற ஓராண்டு கால பயணம் திருப்தியளிப்பதாக இருந்தது. இன்றைய தேதியில், அவர் நான்கு பேக் விற்பனையோடு, ஹோம் பேக்கர்ஸ் கில்ட்டின் ஆண்டு பேக்கிங் விற்பனையையும் அதிகரித்த மிகப்பெரிய பெருமைக்கு சொந்தக்காரர். ஒவ்வொருவரும் நான் சந்தை நிலவரத்தையும், மற்ற பேக்கர்களுடன் இணையவும் உதவினார்கள். அவர்கள் எனக்கு விலைமதிக்கத்தக்க அனுபவத்தை அளித்துள்ளனர். சந்தையின் தற்போதைய தேவைகள் மற்றும் கேக் அலங்கார உலகுக்கு தேவையானவை பற்றிய என்னுடைய திறமைகளை மேலும் வளர்க்க வேண்டும் என்பதால் கற்றலுக்கான என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார் சரிதா. கப் கேக்கள் மற்றும் கேக்களை ஃபான்டண்ட் மற்றும் சர்க்கரை கொண்டு பல விதங்களில் அலங்காரம் செய்து சரிதா பல வகை பேக்ட் பொருட்களை தயாரித்துள்ளார். ஆரோக்கியமான மஃப்பின்கள் முதல் குக்கீஸ் வரை, பைஸ்கள், டெசர்ட் கப்கள், டெசர்ட் ஜார்களை அவர் தயாரிக்கிறார். அதே போன்று சேவரிகளான குவிச்சஸ், பிரெட்கள், ஸ்டஃப்ட் பிரெட்கள், பன்கள் மற்றும் ரோல்களோடு அவற்றிற்கு ஏற்ற டிப்களையும், மேலே போட்டு அலங்கரிக்கும் பொருட்களையும் அவர் தயாரிக்கிறார். இவை அனைத்தும் மெயனோஸ் சாஸ் மற்றும் கெச்சப்களுக்கு மாற்றான ஆரோக்கியமானவை என்பதால் இவை சரிதாவுக்குப் புகழை ஏற்படுத்தித் தந்துள்ளன.

பேக்ட் பொருட்களில் புதிய வகைகளை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகிறார் சரிதா. தி பேக்கர்’ஸ் நுக் மற்றும் துணி, லெதர் மற்றும் காஸ்மெடிக் டெஸ்ட்டிங் என்று இரண்டு விதமான வியாபாரத்தை ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்வது சவாலானது என்று சொல்கிறார்.

“என்ன ஆனாலும் எதற்காகவும் பேக்கிங் தொழிலை விட்டுக் கொடுக்கப்போவதில்லை” என்று கூறி விடைபெறுகிறார் சரிதா.

Stories by Gajalakshmi Mahalingam