இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் ஜப்னா செளஹான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்ஜுன் என்ற கிராம பஞ்சாயத்து அண்மையில் அதன் தலைவர் ஜப்னா செளஹானால் பிரபலமாக பேசப்பட்டது. ஜன்பனா செளஹான்; 22 வயதே ஆன பஞ்சாயத்து தலைவி. இவர் நாட்டிலேயே தேர்ந்தெடுகப்பட்டுள்ள இளம் பஞ்சாயத்து தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த ஜப்னா உள்ளூர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று அந்த ஊர் மக்களுக்கு உழைத்திட களம் இறங்கியுள்ளார்.

படிப்பை முடித்த ஜப்னா, உள்ளூர் செய்தி சேனலில் செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அப்போதிலிருந்து சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டு தன் ஊருக்கு பல்வேறு மாற்றங்களை ஒரே வருடத்தில் கொண்டு வந்தார்.

பஞ்சாயத்து தலைவியான அவர் அதிரடியாக ஒரு புதிய சட்டத்தை கிராமத்தில் கொண்டு வந்தார். கிராம மக்கள் ஊரில் மது அருந்த தடை விதித்தார் அவர். தொடக்கத்தில் எதிர்ப்பை சந்தித்த அவர் பின்னர் அதன் நற்பயனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 

சுந்தர் நகர் சமாஜிக் ஜாக்ரன் மன்ச், ஜப்னாவை குடிப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு திட்டங்களுக்கு நற்தூதராக நியமிக்க அரசிடம் கேட்டுக்கொண்டது. ஜப்னா குஜராத்தில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தன் ஊர் மக்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டுவர வழிகளை செய்யத்தொடங்கினார்.

தர்ஜுன் கிராமம், சுத்தத்திற்காக முதல் இடத்தை பிடித்ததை அடுத்து, ஆளுனர் ஆச்சார்யா தேவின் பாரட்டையும் பெற்றார் ஜப்னா. அதே போல் முதலமைச்சர் விர்பத்ரா சிங்கின் பாராட்டையும் பெற்று அவரை ‘சிறந்த பஞ்சாயத்து தலைவர்’ என்று அங்கீகரித்தும் உள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தன்று, ஜப்னாவை பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்து, பாராட்டையும், வாழ்த்தையும் அளித்தார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டாய்லெட் ஏக் ப்ரேம் படம் தொடர்பாக ஸ்வச் பாரத் திட்ட முயற்சிக்காக ஜப்னாவை பாராட்டியுள்ளார்.

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL