ஈரா துபே : உங்களை நம்புங்கள், தோற்றங்களை அல்ல!

0

இந்தியாவின் தலைசிறந்த திறமையான நடிகர்களுள் ஈரா துபேயும் ஒருவர். ‘யேல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் படித்த ஈரா, ‘ஆயீஷா’ மற்றும் ‘தி ப்ரெசிடெண்ட் இஸ் கமிங்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். ஈரா மிகச்சிறந்த நாடகக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்த பூமியான இராக்கில் இருக்கும் ஒன்பது பெண்களைப் பற்றிய, ‘நைன் பார்ட்ஸ் ஆஃப் டிசையர் (9 parts of desire) என்னும் நாடகத்தில் ஈராவின் நடிப்பு பல்வேறு திசைகளில் இருந்து பாராட்டையும் புகழையும் தேடி தந்தது.

இந்தியாவின் சமகால நவீன நாடகத்தின் நிலை பற்றியும் இந்த துறையில் இருக்கும் பெண்களைப் பற்றியும் ஈராவிடம் பேசிய பொழுது...

நடிப்புக் கலைஞர்கள் நிறைந்த குடும்பம்

“வளரும் பருவத்தில் நான் என் தாயின் பின்னால் ஒரு நாய்குட்டி போல அலைந்து திரிவேன். எனக்கு ஆறேழு வயதிருக்கும் போது மேடைக்குப் பின்னால் இருந்து குட்டி குட்டி உதவிகள் செய்வது, நாடகத்துக்கான பிரசுரங்களைக் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருப்பேன். அப்போதிருந்தே n-நாடக்கலை எனக்குள் ஒரு அங்கமாக வந்து அமர்ந்து கொண்டது. என் அம்மாவும், இரண்டு அத்தைகளும் குழந்தைகளுக்கான ஒரு நாடக அரங்கை நடத்தினார்கள். இதனால், எங்களை ‘நௌடங்கி’ குடும்பம் என கிண்டல் செய்வார்கள். இப்படி நாடகக்கலை என் தனித்தன்மையில் ஆழமாய் பதிந்திருந்தது. எனக்குள் தியேட்டர் மிக முக்கியமான, புனிதமான இடமாக வந்தமர்ந்தது இப்படித்தான்.

இத்துறை மற்றும் துறையின் ரசிகர்களின் முன்னேற்றம்

இந்த செயல்பாடு என்னை உற்சாகப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தியேட்டரில் பலருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அவர்களின் ஈடுபாட்டையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. பொதுவாகவே ரசிகர்கள் நாடகக்கலைக்கு ஆதரவளிக்க தொடங்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். உங்களோடு இணைந்து, உங்கள் அனுபவம் முழுவதிலும் உங்களோடு பயணிக்க இருக்கும் ரசிகர்களுக்கு நிகர் வேறெதுவுமே இல்லை. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நாடகமே எழுத்தாகவும் நடிகனாகவும் ரசிகனாகவும் இருக்கிறது. ரசிகர்கள் இல்லை என்றால் நடிகர்கள் ஒன்றுமே இல்லை, நாடகமும் ஒன்றும் இல்லை. இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. இதில் உற்சாகப்படுத்துவது என்னவென்றால், இன்றைய நாடக அரங்க உலகில் இருக்கும் இளைஞர்களின் அர்ப்பண உணர்வும், கடின உழைப்பும் புத்துணர்ச்சியும் தான். இந்த முறையில் சிறந்து விளங்கும், அதுல் குமார் மற்றும் ஆகர்ஷ் குரானா போன்றவர்கள் இந்தக் கலையில் மிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். அவர்கள் தியேட்டர் நடிகர்களை மட்டுமல்லாமல், தியேட்டரின் ரசிகர்களையும் ஊக்கப் படுத்துகிறார்கள். இதில் இருக்கும் ஒரே இடைவெளி பயிற்றுவித்தல்தான். நம்மிடம் போதுமான அளவு நாடகப் பள்ளிகள் இல்லை. நடிப்புப் பள்ளித் தொடங்கிய ஜெஹன் மானெக்‌ஷா போன்றவர்களை நான் மதிக்கிறேன். நாடகப் பள்ளிகள் துவங்குவதற்கான இடமும் பிரச்சனையாக உள்ளது. மும்பையில உண்மையிலேயே கூடிப் பேசுவதற்கான, பயிற்சி பெறுவதற்கான இடங்கள் குறைவு.

வாய்ப்புகள் குறித்து

இன்றைய தினத்தில் நடிகர்களுக்கு பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதை வெளியில் இருந்து தேடிக் கண்டு பிடித்தால் மட்டும் போதும். அவர்களை அவர்களே பயிற்றுவிக்கவும் கலையைக் கற்றுக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்த துறையில் வருமானம் நிச்சயமின்மை பற்றி

"’நடிப்பும் பொருளியல் சார்ந்த விஷயமே. ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக ஒருவர் நிலைத்திருக்க விரும்பினால் முழு ஈடுபாட்டுடனும், அதனை வெற்றிகரமான ஒரு தொழிலாக நிர்வாகிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். வணிக ரீதியாக வெல்லாமல் போகும் நாம் விரும்பி நடிக்கும் நாடகங்களும் , வணிக ரீதியாக வெற்றி பெறும் நாம் விரும்பாமல் நடிக்கும் நாடகங்களையும் சமன் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு வருடத்தில் பன்னிரண்டு நாடக அரங்கேற்றங்களோ அல்லது இரண்டே அரங்கேற்றங்களோ எண்ணிக்கை எத்தனையாக இருந்தாலும் சரி, அதில் வணிக ரீதியாக எத்தனை வெல்லும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் எதற்காக அதை செய்கிறீர்கள் என்பதையும், யாருக்காக அதைச் செய்கின்றீர்கள்? அதனுடைய பார்வையாளர்கள் யார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அந்த அரங்கேற்றத்தின் டார்கெட் ஆடியண்ஸ் மிகவும் முக்கியமானவர்கள்.

நைன் பார்ட்ஸ் ஆஃப் டிசையர்

கடந்த செப்டப்ம்பரில் தென் ஆப்பிரிக்கவிற்கு எடுத்து சென்ற ‘நைன் பார்ட்ஸ் ஆஃப் டிசையர்’, ஈராக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஒன்பது இஸ்லாமியப் பெண்களைப் பற்றியது. அது வலுவாக இருந்தாலுமே, சிறப்பாக எழுதப்பட்ட, அழுத்தமான படைப்பு. அதில் நடித்ததற்கு சிறந்த விமர்சனங்களைப் பெற்றேன் மற்றும் ஒவ்வொரு ஷோவிலும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுவரை செய்ததிலேயே அது தான் மிகச் சவாலான ஒன்றாக இருந்தது, நான் அந்த கதையில் உறைந்து போனேன். ஆனால், அது மிகவும் நிம்மதியான உணர்வாக இருந்தது.

எனக்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாற வாய்ப்பு மட்டுமல்ல ஈராக் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்கு செல்வது மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது மிகவும் வித்தியாசமான கலாச்சாரம். முழுக்க முழுக்க வேறுபட்ட நாடு. ஒருவர் அதனுடைய சமூக மற்றும் அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் பல முறை ஒத்திகை பார்த்து, அவர்களை நன்கு புரிந்து கொண்டு அந்த கதாபாத்திரத்தில் வாழவும் சுவாசிக்கவும் ஆரம்பித்தேன். அது பெரிய அனுபவம். 

ஹெதர், எழுத்தாளர், எனக்கு மிகவும் உதவி செய்தார். என் பல கேள்விகளுக்கு அவர் பதிலாய் இருந்தார். எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய குரலிலும் உடலிலும் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்வதை கதையைப் படிக்கும் போது உணர்ந்தேன். குரலும் உடலும் இந்தக் கதாபாத்திரம் எப்படி உயிர் பெறும் என்று சொல்லின. நான் எடுத்துக் கொண்ட கடுமையான ஒத்திகைகள் அந்த கதாபாத்திரத்தை எனக்குள் பூட்டி அதை இறுகப் பற்றிக் கொள்ள மிகவும் உதவியாக இருந்தன. அமல் என்பவள் குண்டான, வெகுளியான மற்றும் உயிர்ப்பான கதாபாத்திரம், அதன் தாளத்தை புரிந்து கொண்ட பிறகு அதற்கேற்றபடி நடிக்க முடிந்தது.

என்னிடம் இந்தப் பாத்திரங்கள் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. அந்த நாளின் முடிவில் இந்திய ரசிகர்களை இதோடு தொடர்பு கொள்ள வைப்பது அந்த பாத்திரங்கள் எல்லாம் உண்மையானவர்கள், அவர்களும் சிரிப்பார்கள், வருந்துவார்கள், கஷ்டங்களிலும் பயணிப்பார்கள் என்பதுதான். அந்த நாளின் முடிவில் ஒரு நல்ல படைப்பு யுனிவர்சலாக இருக்க வேண்டும். அது ஒரு ரசிகனையாவது அசைத்திருக்க வேண்டும்.

மேடையில் ஏற்படும் தவறுகளில் இருந்து வெளிவருவது குறித்து

உண்மையில், எது குழப்புவது? அனுபவத்தால் அதை சரி செய்து விட முடியும் என நான் நினைக்கிறேன். அது வசனத்தில் ஏற்படும் தடுமாற்றமோ, தொடக்கத்தில் ஏற்படும் குழப்பமோ அல்லது பொருட்கள் விழுவதோ, அதை நாடகத்தின் அங்கமாக மாற்றி விட வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பதற்றமாக இருந்தால், அதை உங்கள் நடிப்பில் எப்படி உபயோகிப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு இதைப் போல பெரிய பிழைகள் எதுவும் நடந்ததில்லை, ஆனால் ஒருமுறை, ஒருவர் வசனத்தை மறந்த போது பயங்கரமான அமைதி நிலவியது நினைவிருக்கிறது, அப்போது ரசிகர்களால் அதை கிரகிக்கவும் முடியும். ஆனால், அவர்கள் இரக்கமானவர்கள் தான், அவர்கள் உங்களோடு அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பின் தனித்தன்மை

என்னுடைய கவனம் எப்பொழுதுமே நடிகராக இருப்பதன் உண்மையை கண்டு பிடிப்பதிலேயே தான் இருந்திருக்கிறது. கேட்க சுலபமானதாக இருக்கலாம், ஆனால், உண்மையில் அது கடினமானது. அதிக அனுபவங்களோடு, நீங்கள் இயந்திரம் போல் ஆகிவிடுவீர்கள்; அதை நடிகர்கள் விரும்புவது இல்லை.

உங்களால் சிறப்பாக வசனங்களை பேச முடியும், நீங்கள் அதிக முறை மேடையில் நடித்திருக்கலாம் நீங்கள் மிகவும் தெளிவாக பேசக்கூடியவராக இருக்கலாம், உங்கள் பாத்திரத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் நான் எப்பொழுதுமே பயப்படுவது மொத்த அறிவையும் பயன்படுத்தும் ஒரு இயந்திரத்தை போல் ஆகிவிடக் கூடாது என்பதைப் பற்றி தான். அங்கு தான் சில பயிற்சிகள் எனக்கு உதவி செய்தன.

யேல் பள்ளி

எந்த குறிப்பிட்ட நடிப்புப் பள்ளிகள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் மேடையில் நடித்துக் கொண்டே தான் வளர்ந்தேன். என் அம்மா எனக்கு ஒரு மிகப் பெரிய தாக்கம். நாடகப் பள்ளிப் பற்றி நான் உறுதியாக இல்லை. ஒரு வேளை வெளிநாட்டில் வேலை செய்து அங்கேயே வாழ முடிவு செய்திருந்தால் அது எனக்கு உதவியிருக்கும், இதில் என்னால் அவ்வளவு உறுதியாக இருக்க முடியவில்லை.

ஆனாலும் நடிப்பு பற்றி நான் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என எனது அண்டர் கிரேடு நிலையிலேயே முடிவு செய்தேன். அங்கே நான் பல வித கருத்துக்களின் பள்ளிகளில் படித்தேன். செகாவ் , ஸ்டெல்லா அட்லர் , லீ ஸ்டரஸ்பெர்க். அவர்கள் அவர்களுடைய நடையில் முறைப்படி இருந்தார்கள் என்பதை உணர்ந்தேன். மற்றும் ஒவ்வொரு நடிகரும் அவருடைய சொந்த ஒழுங்கில் நல்ல முறையில் அமைந்து இருந்தார்கள். அதுவே அந்தந்த நடிகரையும் தனித்தன்மையுடன் காட்டியது. நான் மெரைல் ஸ்ட்ரீப்பை மிகவும் மதிக்கிறேன், அவருடைய வேலையை நிறைவாக செய்யவும் அந்த பாத்திரமாகவே மாறவும் அவரால் முடியும், ஆனாலும் அவர் மெரைல் ஸ்ட்ரீப்பாகவே இருப்பார். அப்படி சமன் செய்வது எனக்கு கடினம்.

இத்துறையில் பெண்களின் பங்கு

இது ஆண்களை மையமாக வைத்து சுழலும் துறை என நினைக்கிறேன். அது மாறிக் கொண்டிருக்கிறது. வித்யா பாலன் போன்றவர்கள் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். என் அம்மா வெற்றிக்கு மிகச் சிறந்த உதாரணம். பெண்களுக்கு என்னுடைய செய்தி, நீங்கள் செய்வதை தொடருங்கள். ஆண்களுக்கு இருக்கும் அளவு, வெளிப்படுத்தும் திறமை, பெண்களுக்கும் இருக்கிறது என நினைக்கிறேன். திரையுலகம், தோற்றத்தை விட திறமைகளை அங்கீகரிக்க வேண்டும். தோற்றத்தில் சிறப்பாக இல்லாத பலர் பிரமாதமான நடிகர்களாய் இருப்பதை நான் பாராட்டுகிறேன். நாம் இதை ஊக்குவிக்க வேண்டும்.

இளம்பெண்கள் கலையை சமரசம் செய்யாமல் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். சூப்பர் ஸ்டார் ஆவதைக் காட்டிலும், தங்களுக்கு உண்மையாக, தாங்கள் விரும்பும் வேலைகளை செய்ய வேண்டும். அது தான் எனக்கு முக்கியம்.