10-ம் நூற்றாண்டின் வரலாற்றுப் படைப்பான ’பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு புத்துயிர் அளித்த நிலா காமிக்ஸ்

1

பொன்னியின் செல்வன் ஒரு தமிழ் வரலாற்றுப் புதினம். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது. 2,400 பக்கங்களைக்கொண்ட இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளிவந்தது. இதில் இளவரசர் ஆதித்ய கரிகாலனின் நண்பர் வந்தியத்தேவன் மற்றும் ராஜா அருள்மொழிவர்மனின் சாகசங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. வாசகர்களை அந்த காலகட்டத்திற்கே இழுத்துச் சென்று கவர்வதால் 1950-ம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை பலரும் இந்த நாவலை ஆவலாக படித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் தொடர்ந்து பெரியவர்களை கவர்ந்து வரும் நிலையில் குழந்தைகள் அந்த நாவலை ரசிக்கத் தேவையான முயற்சியை பெரிதாக யாரும் எடுக்கவில்லை. இந்த காரணத்திற்காக நிலா காமிக்ஸ் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக இந்த நாவலை வழங்க விரும்புகிறது. இதன் துவக்க முயற்சியாக முதல் இரண்டு அத்தியாயங்களை ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது. நிலா காமிக்ஸ் நிர்வாக இயக்குனர் சரவணராஜா Scroll நேர்காணலில் குறிப்பிடுகையில்,

”என்னுடைய குழந்தைப் பருவம் முதலே இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. காமிக்ஸ் 2-டி அனிமேஷன் தயாரிப்பில் நம்மால் ஈடுபட முடியும்போது பெரியளவில் ஒரு முயற்சியில் ஏன் ஈடுபடக்கூடாது என்று நினைத்தோம்.”

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த நாவலை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த முயற்சி துவங்கப்பட்டாலும் உண்மையில் பெரியவர்கள் எங்களது முக்கிய வாசகர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் நாவலில் அதிக மாற்றத்தைக் கொண்டு வந்தால் பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கக்கூடும்.”

30 அனிமேட்டர்ஸ் மற்றும் கலைஞர்கள் இந்த ப்ராஜெக்டில் பணிபுரிகின்றனர். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு தொடரை வெளியிட நிலா காமிக்ஸ் திட்டமிட்டுள்ளது. கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ ராஜ்ஜியத்தை சித்தரிப்பது எளிதான செயல் அல்ல. பொன்னியின் செல்வன் ஓவியங்கள் சார்ந்த பணிகள் குறித்து இந்த ப்ராஜெக்டின் அனிமேஷன் இயக்குனர் எம் கார்த்திகேயன் ’தி ஹிந்து’விடம் குறிப்பிடுகையில்,

”நாவலில் கல்கியால் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளதோ அதை அடிப்படையாகக் கொண்டே கதாப்பாத்திரங்களின் ஓவியங்கள் வரையப்படுகிறது. அந்த கதாப்பாத்திரம் குறித்த வர்ணனை நான் கற்பனை செய்து பார்க்க உதவியது. அவர்களது உணர்வுகளையும் காட்சிகளையும் ஆழமாக வெளிப்படுத்த முயன்றுள்ளேன்,” என்கிறார்.

அமர் சித்ர கதா மற்றும் லயன் முத்து காமிக்ஸ் ஆகிய காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களாகும். அசல் தமிழ் காமிக்ஸின் பற்றாக்குறை இருப்பதால் பொன்னியின் செல்வன் நிச்சயமாக இந்த இடைவெளியை நிரப்பிவிடும்.

விரைவில், நிலா காமிக்ஸ் இந்த வரலாற்று புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளது.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL