பாரம்பரிய சுவையான உணவு உங்கள் வீடு தேடி வரும்!

0

காலை வேளையில் உணவு உண்ணாமல் அலுவலகம் செல்வோர் நம்மூரில் எத்தனை பேர்? காரணம் கேட்டால் நேரம் இல்லை எனக்கூறுவர்.

அவர்களுக்கு அம்மா செய்வது போன்று இட்லி,தோசை மற்றும் சுவையான தரமான சப்பாத்தி, வீட்டில் கிடைத்தால்... அவற்றுக்கு தேவையான பொருட்கள், விளையும் இடத்திலிருந்து பெறப்பட்டு தயாரிக்கப்பட்டால்... அப்படி ஒரு நினைபிற்கே நாவில் நீர் ஊரும்.

இந்த கேள்விக்கான விடையை மையமாக வைத்து, தொடங்க பட்டுள்ள நிறுவனம், "ஈட் ஆன் கோ" (EatOnGo).

'ஈட் ஆன் கோ இணை நிறுவனர்கள் தாரு ராஜ் அகர்வால் மற்றும் உதித் சரண்
'ஈட் ஆன் கோ இணை நிறுவனர்கள் தாரு ராஜ் அகர்வால் மற்றும் உதித் சரண்

பெங்களுரு நகரத்தில் அரை வயறு, கால் வயறு கூட நிறையாமல் , அவரசமாக அலுவலகம் செல்வோருக்கு, நிறைவான காலை உணவு மற்றும் சத்தான தீனி வகைகளை ஆன்லைன் மூலமாக அளிக்கிறது "ஈட் ஆன் கோ".

ஈட் ஆன் கோ ஆரம்ப பயணம்

2015 பிப்ரவரி மாதம், உறவுக்காரர்கள் உதித் சரண் மற்றும் தருண் ராஜ் அகர்வால் மனதில், சொந்தமாக ஒரு நிறுவனம் துவங்கும் எண்ணமும் ஆசையும் உதித்தது. உணவு தொடர்பாக, டெல்மான்டி, ஜெனரல் மில்ஸ், மற்றும் பில்ஸ்பரி நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் உதித் சரணிடம் இருக்க, மின்த்ரா மற்றும் கேப்பிலரி டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் தந்த அனுபவம் தருணுக்கு உதவியது. அவர்கள் அனுபவத்தின் ஒரு சரியான கலவையாக "ஈட் ஆன் கோ" இன்று வளர்ந்து உள்ளது .

சமையல் செய்யும் குழு
சமையல் செய்யும் குழு

பெங்களுருவில் தங்கி இருவரும் வேலை செய்தபோது வாழ்க்கை அவர்களை மாற்றிய விதமும், காலி வயிற்றில் அலுவலகம் செல்லும் அவலமும் அவர்கள் மனதில் உறுத்தியது. அங்கு தான் "ஈட் ஆன் கோ" விற்கான விதை விழுந்தது.

குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பணம் பெற்று துவங்கப்பட்ட "ஈட் ஆன் கோ" நிறுவனம், தற்போது " ஜிஎஸ்ஃஎப் ஆக்சிலரேடர்ஸ்" நிறுவனத்தின் ராஜேஷ் சவானி மற்றும் "செஃப்பாஸ்கட்" நிறுவனத்தின் வருண் ஜாவர் மற்றும் நிபுன் கட்டியால் போன்றோரின் விதை நிதி (Seed Fund) உதவி பெற்று வளர்ந்துள்ளது.

பிப்ரவரியில் எட்டு பேர் கொண்டு துவங்கப்பட்ட "ஈட் ஆன் கோ" இன்று 30 பேர் பணி புரியும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 12 பேர் சமைக்க, 12 பேர் அதை வாடிக்கையாளர் இடம் சேர்க்க என, எல்லா நேரங்களிலும் "ஈட் ஆன் கோ" பரபரபுக்கு பஞ்சமில்லாமல் இயங்குகிறது. முதல் மாதத்தில், ஒரு வாரத்தில், 100 முதல் 150 பேர் வரை, உணவளித்த, "ஈட் ஆன் கோ" இன்று, ஒரு வாரத்திற்கு 2500 வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கிறது. இது மாதம் ஒன்றிற்கு 50% வளர்ச்சி ஆகும். மொத்தத்தில் 3000 வாடிக்கையாளர், அதில் 60% தொடர் வாடிக்கையாளர், தோராயமாக 8 லட்சம் ருபாய் வருவாய் என, சிறு விதை இன்று ஆலமரமாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில், ஒரு மில்லியன் வரை ஃபண்டிங் முறையில் ஈர்க்க, திட்டமிட்டுள்ள "ஈட் ஆன் கோ", அதை வைத்து, புதிதாக ஆட்களை சேர்த்து, சேவைகளை அதிகப்படுத்தி, இத்துறையில் மேலும் வளர திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 8 புதிய உணவு வகைகளை சேர்த்துள்ள இவர்கள், மொத்தமாக 36 வகையான உணவுகளை வழங்குகிறார்கள்.

தற்போது, இந்திரா நகர், அல்சூர், கொடிஹள்ளி, முருகேஷ்பாளையா, டொம்லூர் ஏரியாக்களில் சேவையளிக்கும் இவர்கள், தெற்கு பெங்களுருவில், மரதஹள்ளி, ஹச்எஸ்ஆர் லேஅவுட், கோரமங்களா, எலக்டரானிக் சிட்டி, சர்ஜாபூர் ரோட், வைட்ஃபீல்ட், என மற்ற இடங்களிலும், சேவைகளை துவங்க முடிவெடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, ஆன்டுராய்ட் மற்றும் ஐஒஎஸ் செயலி (APP) தொடங்கவும் தற்போது காலம் கனிந்துள்ளது.

இத்துறையில் தங்களை தனித்து நிற்க செய்வது எது என கேட்டபோது, நிறுவனர்களில் ஒருவரான தருண், அவர்கள் செய்முறை மற்றும், சமையல் செய்ய பயன் படுத்தும் பொருட்களை சுட்டிக்காட்டினார்.

"எங்களது செய்முறை, முறைபடுத்தப்பட்டு, ஆவனபடுத்தபட்டுள்ளது. அதோடு நாங்களே தயாரிக்கும் மசாலாக்கள் எங்கள் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது உணவின் சுவை, மற்றும் தரம், சமையல் கலைஞர்கள் சமைக்கையில் மாறாது இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாது, என்ன கொடுக்கவேண்டும், அதை எப்படி கொடுக்கவேண்டும் என்பது எங்கள் நேரடி பார்வையில் உள்ளது, எனவே வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப எங்கள் சேவைகளை தர முடிகிறது.

அதுபோக சமைக்க தேவையான பொருட்களை, நாங்கள் விளையும் இடத்திலிருந்தே கொள்முதல் செய்கின்றோம். உதாரணத்திற்கு, "லிட்டி சோஹா" என்ற சிற்றுண்டி செய்ய, முக்கிய பொருளான 'சட்டு', பீகாரில் இருந்தும், "மசாலா போஹா"விற்கு அரிசி இந்தூரில் இருந்து பெறப்படுகிறது. இது, உணவிற்கு அதன் உண்மையான சுவையை கொடுக்கின்றது.


உந்துதல்

" நாம் செய்யும் தவறுகள், அதன் மூலம் நாம் கற்கும் பாடங்கள், இவையே ஒரு நிறுவனத்தை உறுதி படுத்துகிறது" என இந்நிறுவனத்தின், நிறுவனர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எந்த செயலையும் தனித்துவமாக செய்ய நினைப்பது, இவர்கள் துறையில் உள்ள வெவ்வேறு பங்குதாரர்களை கையாளும் திறனை இவர்களுக்கு அளித்துள்ளது. அவர்கள் தரும் கருத்துகளில் இருந்து இவர்கள் கற்கவும் மறக்கவில்லை.

அவர்கள் கூறுவது :

எங்கள் படைப்பு, இவ்வாறு பரந்து விரிந்து வளர்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நிறுவனத்தின் உள்ளே உற்று நோக்கும் பொழுது, அளவற்ற வாய்ப்புகள் உள்ளதும், அதன் மூலம் இங்கு நேர்மறை எண்ணங்கள் நிறைந்துள்ளதும் புரிகின்றது, புலப்படுகின்றது. மேலும் இத்துறையில் பல புதிய கூட்டணிகள் அமைத்து, பிரேக்ஃபாஸ்ட் , பிரஞ்ச், ஸ்நாக்ஸ் என சொன்னாலே, "ஈட் ஆன் கோ" தான் என்ற நீண்ட கனவு எங்கள் கண் முன் விரிந்துள்ளது.

தொழில்துறை :

கடந்த ஏப்ரல் மாதம் பெங்களுருவில் நடந்த, "யுவர்ஸ்டோரி" யின் ஃபூட் டெக் கிரவுட் பிட்ச் சாலஞ்சின் போது, 17 உணவு தயாரிப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் துளிர் விட்டன. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொழில்முன்முயற்சிகளான, "ஸ்விக்கி" (Swiggy), "டைனி அவுல்" (Tiny Owl), "ப்ரெஷ் மெனு" (Fresh Menu), "ஹோலசெப்"(HolaChef) போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இத்துறைக்கு, முதலீட்டாளர்கள் ஃபண்டிங் செய்ய குவிந்த வண்ணம் உள்ளனர். உற்று நோக்கினால், பல முதலீட்டு நிறுவனங்களின் மிகவும் பிடித்த துறையாகவே உணவு தயாரிப்பு தொழில் உள்ளது என்று தெரிகிறது.