முன்கூட்டியே பணம் செலுத்தும் உத்தியை அமல் செய்யும் வழிகள்... 

எல்லோருக்கமான ஒற்றை வழி இல்லை என்றாலும், முன்கூட்டியே பணம் செலுத்தும் கருத்தாக்கம் அனைவருக்குமான சிறந்த முதலீடாகும். 

0

முன்னதாகவே பணம் செலுத்துவது- திரும்பி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவருக்கு நல்லது செய்வது- நீண்ட காலமாகவே வர்த்தக உலகில் பெரிதாக இருக்கிறது. சமுதாயம் சார்ந்த நிறுவனம், அதாவது மனசாட்சி உள்ள நிறுவனம் எனும் கருத்தாக்கம் 1950 களில் இருந்து உள்ளதாக ஒரு புத்தகம் தெரிவிக்கிறது.

அண்மை காலத்தில் பார்த்தால், 2010 ல் வாரன் பப்பே, பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் ’தி கிவிங் பிளட்ஜை’ உருவாக்கியுள்ளனர். இந்த உறுதிமொழியின் கீழ், அமெரிக்காவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட செல்வந்தர்கள் மற்றும் தம்பதியினர் தங்களின் பாதிக்கு மேற்பட்ட சொத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.

மேலும், தாராளமாக நன்கொடை அளிக்கும் 20 முன்னணி நிறுவனங்கள் 2015ல் 3.5 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாக பார்ச்சூன் இதழ் தெரிவிக்கிறது. கைலீட் சைன்சஸ் (446.7 மில்லியன் டாலர்), வால்மார்ட் (301 மில்லியன் டாலர்), வெல்ஸ்போர்கோ (281.3 மில்லியன் டாலர்), கோட்ல்மேன் சாக்ஸ் 9 276.4 மில்லியன் டாலர்) என இந்த பங்களிப்பு அமைந்துள்ளது. நிறுவன ஊழியர்களின் நேர அர்ப்பணிப்பு இதில் அடங்காது.

வர்த்தக சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) என அழைக்கப்படும் இந்த வெளியே நோக்கும் பார்வை, பெறுபவர்களை போல கொடுப்பவர்களுக்கும் பயன் அளிக்கிறது. முன்னதாக பணம் செலுத்துவது, ஊழியர்கள் மனநிலையை உயர்த்துவதோடு, நல்லவிதமான விளம்பரமாக அமைந்து (வாடிக்கையாளர்கள் பற்றி சொல்ல வேண்டாம்), இதற்கு முன்னர் கண்டறியப்படாத ஆற்றலை ஊழியர்களிடம் இருந்து காண வைப்பதோடு, தொடர்புடைய தனிநபர்களின் நலனையும் மேம்படுத்துகிறது.

கொடுப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கொடுப்பவர்கள், மன அழுத்தம் குறைந்தவர்களாக, அதிக திருப்தி உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் நிறுவனம் மீது நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

கன்பர்ம் பயோசயின்சஸ் இணை நிறுவனர் மற்றும் டெஸ்ட் கண்ட்ரி தலைவர் ஜேனாப் இல்காஸ், ஒரு நிறுவனம் முன்கூட்டியே பணம் செலுத்த வைக்க சிறந்த வழி பற்றி எண்டர்பிரனர்.காம் இதழில் எழுதும் போது, நிறுவனம் உள்ளூர் அளவில் மற்றும் தங்கள் மையக் கருத்தாக்கத்திற்கு நெருக்கமான சேவை நிறுவனங்களை நாட வேண்டும் என்கிறார். இது குழு சார்ந்த முயற்சியாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

இதற்கான மூன்று வழிகள்:

முன்கூட்டியே கொடுக்கும் தினம்: இது ஒரு சர்வதேச முயற்சியாகும். உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக இதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏபர்ல் 28 ம் தேதி திட்டமிடட்டுள்ள இந்த நிகழ்வில் 80 நாடுகள் பங்கேற்கின்றன. 100 மாநிலங்கள் மற்றும் நகரங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 10 மில்லியம் நல்லெண்ண செயல்கள் இலக்காக கொள்ளப்பட்டுள்ளன. நல்ல நோக்கத்திற்காக நன்கொடை அளிப்பதில் துவங்கி, அறிமுகம் இல்லாதவருக்கு காபி வாங்கி தருவது முதல் புத்தகங்கள் சேகரிப்பது, திறன் மூலம் உதவுவது என அனைத்தும் இதில் அடங்கும்.

நிறுவனம் சார்பில் தத்தெடுப்பது: இப்படி செய்வதோடு, அனைத்து ஊழியர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு நோக்கத்திற்காக 5 கிமீ நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம். உழியர்களை சேவை முயற்சியில் ஈடுபட வைக்கலாம். உள்ளூர் விளையாட்டு குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

போட்டி உணர்வு: சவாலுக்கு நிகரான வேறில்லை. பொம்மைகள் சேகரிப்பதும், பொது சேவை செய்வது போன்ற செயல்களில் பல்வேறு குழுக்களை ஈடுபடுத்தும் போது நிறைய சாதிக்க முடியும். ஊழியர் முயற்சிக்கு ஏற்ப நிறுவனமும் பங்களிப்பு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மேலும் பல தேர்வுகள் உள்ளன. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒற்றை வழி இல்லை என்றாலும் இவை சிறந்த வாய்ப்புகளாகும்.

ஆங்கில கட்டுரையாளர்: ஜோயல் லாண்டே | தமிழில்; சைபர்சிம்மன்

(பொறுப்புத்துறப்பு: ங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்படும் யுவர்ஸ்டோரி சமூக பதிவு இது. இதில் உள்ள படம் மற்றும் உள்ளடக்கம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உரியது. இதில் இடம்பெறும் தகவல் காப்புரிமை மீறல் என நினைத்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.)