மூலிகை மருந்து ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா! 

0

டெல்லியில் அண்மையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்தியா சர்வதேச அளவில் மருத்துவ குணம்கொண்ட செடிகள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 6600 மருத்துவச்செடிகள் கொண்டுள்ள நாடாக இந்தியா, சீனாவை அடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து உலகத்தில் 70% மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. 

மருத்துவ குணம் கொண்ட இயற்கை செடிகள் மற்றும் அதற்கு இணையான அறிவியல் கூறுகளை ஆராயும் மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைப்பெற்றது. இதில் உலக அளவில் இருந்து பல விஞ்ஞானிகளுன், வல்லுனர்களும் கலந்து கொண்டனர். ‘சர்வதேச ஆரோக்யா 2017’ என்ற அம்மாநாடு நான்கு நாட்கள் டெல்லியில் நடைப்பெற்றது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்தோரும், 1500 சிறப்பு பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் முக்கிய தலைப்புகளான, ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யூனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்று பலவற்றவை விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ளூர் சந்தையில் ரூ.500 கோடி மற்றும் ஏற்றுமதியில் ஹோமியோபதியின் பங்கு சுமார் 200 கோடியாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

வர்த்தகத்துறை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இவ்விழாவில் கலந்து கொண்டார். டிஎன்ஏ செய்திகளின் படி.

”இந்தியாவில் இதுபோன்ற இயற்கை மருத்துவத்தை முன்னிலைப்படுத்த தற்போது வாய்ப்புகள் வந்துள்ளது. அயூஷ் கட்டமைப்புடன் இந்திய மருத்துவ சேவையை இணைக்கும் நேரம் வந்துவிட்டது,” என்றார்.

1355 மருத்துவமனைகளில் 53,296 கட்டில் வசதிகளுடன், 9493 லைசென்ஸ் பெற்ற உற்பத்தி யூனிட்களுடன், 22635 டிஸ்பன்சரி, 450 கல்லூரிகள் மற்றும் 7.18 லட்ச அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். அயூஷ் அமைச்சகத்தின் துணை அமைச்சர் யெஸ்ஸோ நாயக் கூறுகையில்,

”யோகா, யூனானி, ஆயுர்வேதா மற்றும் பன்ச்கர்மா ஆகியவற்றுக்கு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தஜிகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா, பெரு மற்ரும் டான்சானியா உட்பட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்,” என்றார்.

மாற்று மருந்துகள் உற்பத்தியில் 250 நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவையில் உள்ளனர். இவர்கள் இம்மாநாட்டில் தங்களை காட்சிப்படுத்தி கொண்டனர். மேலும் இந்திய ஹெர்பல் சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடியாகவும் ஆண்டு வளர்ச்சி 14 சதவீதம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

கட்டுரை: Think change India