இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ₹10 நாணயம் வெளியீடு!

0

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் 125வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.10 நாணயங்களை புழக்கத்தில் விடுகிறது.

இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் பாரத் என்று தேவநாகரியிலும், வலதுப்பக்கம் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் ரூபாய் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவணக் காப்பகக் கட்டிடத்தின் உருவப்படம் மத்தியில் பொறிக்கப் பட்டிருக்கும். உருவப்படத்தின் கீழே '125' என்று வருடமும் பொறிக்கப்பட்டிருக்கும். 125-ஆவது வருடக் கொண்டாட்டங்களின் இலச்சினை தேசிய ஆவணக் காப்பகக் கட்டிட உருவப்படத்திற்கு மேலே இருக்கும். மேற்புறம் “राष्ट्रीय अभिलेखागार“ என்று தேவநாகரியிலும் மற்றும் “NATIONAL ARCHIVES OF INDIA” என்று கீழ்ப்புறத்தில் ஆங்கிலத்திலும் முறையே எழுதப்பட்டிருக்கும். மேலும், '1891' மற்றும் '2016' என்று நாணயத்தின் மேற்புறமும், கீழ்ப்புறமும் எழுதப்பட்டிருக்கும். உருவப்படத்தின் இடது மற்றும் வலதுபுறம் முறையே மேல்பக்கத்தில் '1891' மற்றும் '2016' என்று ஆண்டு சர்வதேச எண்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் வட்டம் 27 மி.மீ. அளவாக(இருவகை உலோகக் கலவை) அமைந்திருக்கும். வெளிவட்டம் (அலுமினியம் வெண்கலம்) தாமிரம் - 92% அலுமினியம் – 6% நிக்கல் – 2% மைய பகுதி (செம்பு நிக்கல் கலவை) தாமிரம் - 75% நிக்கல் – 25%

2011ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவை.