இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிநீக்கத் தொகை குறித்து நடைப்பெறும் நாடகத்தின் உண்மை பின்னணி என்ன?

0

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் விஷால் சிக்கா, அங்கே ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நிறுவனத்தின் சிஇஓ என்பதால் பல சலுகைகள் அவருக்குக் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி 650,000 டாலர்கள் செலவில் பாலோ ஆல்டோ’வில் ஒரு வீட்டில் தங்கிக்கொண்டு, அங்கிருந்து தனிப்பட்ட ஜெட் மூலமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு பயணிக்கிறார். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக இவர் முன்னின்று இயக்கவிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் கடந்த காலத்தில் சிக்கனமான வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். இவ்வளவு பெரிய சேவை நிறுவனத்தை உருவாக்குவதற்கு அவர்களின் சிக்கனம்தான் வழிவகுத்தது. 

பயணச் செலவுகளை குறைக்க மூத்த அதிகாரிகளின் அறையை பகிர்ந்துகொண்டிருக்கிறார் நிறுவனர் நாரயணமூர்த்தி. அவ்வாறு சேமிக்கப்படுவது சிறிய தொகையானாலும் அதைக் கொண்டு சற்று அதிகம் முதலீடு செய்ய நினைத்தார். இவ்வாறான சிக்கனமான நடவடிக்கைகளே இவ்வளவு பெரிய நிறுவனம் உருவாக உதவியது.

2005-ல் டாவோஸ் பகுதியில் மாநாடு நடைபெற்றபோது இரண்டு மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்தது. அந்த மாநாட்டில் ஓய்வுபெற்ற தலைவர் அவரது ஊழியர்கள் அறையை பகிர்ந்துகொள்ளவே வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதற்கும் மேல் நியமனங்கள் அனைத்தும் நாமினேஷன் அன்ட் ரெம்யூனரேஷன்ஸ் கமிட்டியின் (NRC) கடுமையான கூர்ந்தாய்வுகளுக்குப் பிறகே நடைபெறும். மெச்சத்தக்க நபர்கள் எவரும் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்படுவதில்லை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் நிறுவனத்தின் விதிமுறைப்படி அனைத்து நிறுவனர்களும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பார்கள்.

முன்னாள் CFO ராஜிவ் பன்சாலுக்கு, சிக்கா 24 மாத பணி விடுவிப்புத் தொகை நியமித்தது சமீபத்திய காலம் வரை வெளிவரவில்லை. இதனால் ப்ரொமோட்டர்கள் நிறுவனம் நடத்தப்படும் முறையை சந்தேகித்தனர். கடந்த ஒன்பது மாதங்களாக இதற்கு நாராயணமூர்த்தி விளக்கம் கேட்டார். முறையான பதில் கிடைக்காததால் இதைப் பொதுவில் வெளிப்படுத்தினார்.

தற்போது இதன் உண்மையான பின்னணி தெரியவில்லை. பணியிலிருந்து விடுவிப்பதற்காக ஆர்.சேஷசாயிக்கு அளிக்கப்படும் தொகை குறித்து சிக்காவை கேள்வி கேட்கும் விதம் உறுதியின்மையுடம் இருப்பதாக இன்ஃபோசிஸ் நபர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். NRC தலைவரான Prof.ஜெஃப்ரீ எஸ்.லேமென் பணியிலிருந்து விடுபடுவதற்கான தொகைக்கு கையெழுத்திட மறுத்தபோதுதான் பிரச்சனை தொடங்கியது. 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 12.75 சதவீதத்திற்கு உரியவர்களான ப்ரொமோட்டர்கள் உரிய பதிலை எதிர்பார்க்கின்றனர். இதைக் குழு அளிக்கவில்லை. 

”பணிவிலக்கல் அல்லது உயர்வு குறித்து NRC தெளிவுபடுத்தாத போது பட்டியலில் இருக்கும் நிறுவனத்தின் குழு அந்த விஷயம் குறித்து பங்குதாரர்களுக்கு பதிலளிக்கவேண்டும். இது SEBI-யால் வரையறுக்கப்பட்டது மற்றும் கட்டாயமானதாகும்.” 

அதே சமயம் பணியிலமர்த்துதல் அல்லது விலக்கல் குறித்த சின்னச் சின்னத் தகவல்களுக்கு குழு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் பிரச்சனை. பெரும்பாலும் குறிப்பிட்ட நபர் பணியிலமர்த்தப்படும்போது இந்தத் தொகை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.” என்கிறார் Khaitan & Co சட்ட நிறுவனத்தின் பார்ட்னர் கணேஷ் ப்ரசாத். 

இந்த சிஇஓ இத்தகைய செலவை ஆமோதித்து ஏற்றுக்கொள்ள குழுவை வலியுறுத்தினாரா என்பதுதான் கேள்வி?

”நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கான உரிமை பங்குதாரர்களுக்கு உண்டு,” 

என்கிறார் ஆரின் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோஹன்தாஸ் பாய். ஆனால் விஷால் சிக்காவின் நோக்கத்தை ஆதரிப்பதாக பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கிறது இன்ஃபோசிஸ் குழு. இதனால் நிறுவனம் மற்றும் ப்ரொமோட்டர்கள் இடையே பிளவு ஏற்படுவதாக வெளிவந்த ஊடக அறிக்கைகள் அபத்தமானதானது.

”சிஇஓவால் மேலாளர்களை நியமிக்கவும் மூத்த ஊழியர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் முடியும். நிறுவனத்தின் நிதிநிலை செயல்பாடுகளுக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” 

என்கிறார் க்ரேஹவுண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் சிஇஓ சன்சித் வீர் கோகியா. ஆனால் பங்குதாரர்கள், ப்ரொமோட்டர்கள் மற்றும் குழுவினர் ஆகியோர் பிரச்சனையை தீர்க்க ஒன்றிணையவில்லை என்பதுதான் இன்ஃபோசிஸ் ப்ராண்டிற்கு ஏற்படும் குளறுபடிகளுக்குக் காரணம். 

Skava மற்றும் Panaya நிறுவனங்களை இன்ஃபோசிஸ் வாங்கியது குறித்தும் தற்போது கேள்வி எழுப்பப்படுகிறது. சந்தையிலுள்ள இதனையொத்த நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் செயல்திறனில் குறைந்திருக்கும் இந்நிறுவனங்கள் அதி்க மதிப்பிற்கு வாங்கப்பட்டதாக கேள்வியெழுப்பப்படுகிறது. இன்ஃபோசிஸ் மற்றும் Edgeverve போன்ற அதன் ப்ளாட்ஃபார்ம் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே Skava 120 மில்லியன் டாலருக்கும் Panaya 220 மில்லியன் டாலருக்கும் வாங்கப்பட்டது. இந்த ப்ளாட்ஃபார்மில் கவனம் செலுத்தி மூன்று வருடங்களில் 2 பில்லியன் டாலரை ஈட்ட இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. 

Edgeverve –ன் தற்போதைய வருவாய் கிட்டத்தட்ட 600,000 டாலர். 2020-ல் இன்ஃபோசிஸ் 20 பில்லியன் டாலரை எட்டவேண்டும் என்பதே சிக்காவின் நோக்கம். இதில் 16 பில்லியன் டாலரை சேவை வாயிலாகவும் மீதமிருக்கும் 4 பில்லியன் டாலரை ப்ளாட்ஃபார்ம்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் வாங்கும் நிறுவனங்கள் வாயிலாகவும் அடைய திட்டமிட்டுள்ளது. நோக்கத்தில் கவனம் செலுத்துமாறும் இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றும் ஊழியர்களுக்கு கடிதத்தில் கோரிக்கை விடுத்தார் சிக்கா. 

”இன்ஃபோசிஸ் முன்னேற்றத்திற்காக சில மிகச்சிறந்த முடிவுகளை சிக்கா எடுத்துள்ளார். ஆனால் அதன் பங்குதாரர்களுக்கு குழு பதிலளிக்கவேண்டும்.” என்றார் மோஹன்தாஸ் பாய்.

விஷால் சிக்காவின் முடிவுகளை இன்ஃபோசிஸ் ஆதரிப்பதாகவே ஊடகங்களுக்கு வந்த செய்தி வெளியீடு தெரிவிக்கிறது. ஆனால் ஆர். சேஷசாயி, கிரண் எம்.ஷா, ஜெஃப்ரி லேமேன் மற்றும் ஜான் எட்சமண்டி ஆகியோர் அடங்கிய NRC முன்னாள் ஊழியர்கள் பணியிலிருந்து விடுபடும்போது அளிக்கபடும் தொகையை முறையாக கவனிக்கத் தவறியதா அல்லது ஜெஃப்ரீ லேமேன் மட்டும் மற்றவர்களுடன் முரண்பட்டாரா என்பது யாருக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் பதில்கள் நிச்சயம் வெளிவரவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாராயண மூர்த்தி உள்ளிட்ட இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த சிஇஓ சிக்காவின் நோக்கங்களை முற்றிலும் ஆதரிக்கின்றனர். ஆனால் திட்டமிட்டபடி முன்னேறுவதை தடுக்கும் விதமாக தற்போது ஆர்.சேஷசாயிக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தனியார் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேல் முத்திரை பதித்துள்ள நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் சற்று கடினங்களை சந்திக்க நேரலாம். 

மொத்த சம்பளத் தொகையான 11 மில்லியன் டாலரில் சிக்காவின் சம்பளம் மட்டும் 906,000 டாலர்கள் என்று தெரியுமா உங்களுக்கு...

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் ஷர்மா