இளம் தொழில் முனைவரின் கண்டுபிடிப்பினால், சாமான்யரின் தண்ணீர் பம்ப் பிரச்னைக்கு தீர்வு!

0

நமது தொழில் முனைவோர் உலகமானது முழுக்க முழக்க தயக்கம் நிறைந்த தலைவர்களையும், எதிர்பார்க்காத வெற்றியாளர்களையும் கொண்ட உலகமாக திகழ்ந்து வருகிறது. விற்பனை கண்ணோட்டத்தில் ஓர் சாமானியர் சந்திக்கும் அன்றாடப் பிரச்னையை கண்டுபிடித்து அதற்கான தீர்வினை காண்பதென்பது ஒரு உறுதியான தொழில்-வணிக கதையின் கருவாக எடுத்துக் கொள்ளலாம். அது போலத் தான் அனுபம் ஆட்ரி யின் கதையும் அமைகிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு சேவை துறையில் இணைந்ததால், தானும் ஒரு சிறந்த பணியில் அமரவேண்டும் என்கிற ஆவல் 30 வயது நிரம்பிய அனுபம் மனதில் எப்போதும் இருந்து வந்தது. தனது ஆறு வருட பணியில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் தனது பொறியாளர் பணியும் அவர் நினைத்தது போல தான் அமைந்தது. ஆனால், நாம் தொழில் நுட்ப அறிவியலில் முன்னேறிய நாடாக இருந்த போதிலும், அனுபம் அன்றாடம் எதிர் கொண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டே தொழில் தொடங்கவேண்டும் என்ற முனைப்பு அவரிடம் வளர்ந்தது.

"எனது டெல்லி வீட்டில், தண்ணீர் குழாயினை சரியாக மூடவில்லை என்பதற்காக ஒரு போர்களமே உருவாகும். இந்தப் பிரச்சனை இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ளது. அவற்றில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால் இந்த பிரச்சனை தான் என் மூளைக்குத் தீனி போட்டது. இந்த குழாய்கள் ஏன் தானாகவே தண்ணீர் திறந்தும் மூடவும் கூடாது என்று ?", என்கிறார் அனுபம்.

தாபர் கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு மின்னணுவியல் படிக்கும் போது ஒரு சாதாரண யோசனை தான் வெற்றிக்கு வழிவகுத்தது. புதிய யோசனைகளை மேன்படுத்தும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) (அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைக்கு உட்பட்டது) நடத்திய கண்காட்சியில் அனுபம் செய்த செயல் திட்ட பணியானது மட்டுமே வர்த்தக ரீதியாக நடைமுறைபடுத்தக் கூடிய மாணவர் செயல் திட்டப் பணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக டிஎஸ்டி யிடம் உதவித் தொகைக்கான காசோலையும் காப்புரிமை விண்ணப்பமும் கிடைத்தது. இது அவரின் வெற்றிப் பயணத்தின் முதல் படியாக அமைந்தது.

அனுபம் மற்றும் அவரின் சகோதரர், அமித் ஆட்ரி யுடன் இணைந்து "ஆட்ரி எண்டர்பிரைஸ் லிமிடெட்" (Attri Enterprises Limited) எனும் நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு துவக்கி தனது தயாரிப்பினை "இவாஸ் (eWAS) வாட்டர் ஆட்டோமேஷன் சிஸ்டம்" (eWas Water Automation System) என்று பெயரிட்டார்.

சந்தை ஆராய்ச்சியின் அடிப்படையில் தனது கண்டுபிடிப்பை பற்றிக் கூறுகையில், சுமார் 60 முதல் 70 சதவீகித மக்கள், இந்த தானியங்கி தண்ணீர்க் குழாய் கருவி பற்றி எதுவும் தெரியாது. மேலும், 2020 ஆம் ஆண்டில் 17.73 பில்லியன் டாலர் சந்தையை அடையக் கூடிய இதில் பெரிய இந்திய நிறுவனங்கள் எதுவும் இல்லை. அனுபம் கூறுகையில்,

"தண்ணீர் தான்னியக்க பிரிவானது தரமான கருவிகளை உற்பத்தி செய்வதுடன், தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியுடன் தற்போதுள்ள கருவிகளை வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் சிறப்பான சேவையும் தேவை. இவை இரண்டுமே இத்துறையில் தற்போதுள்ள சிறு உற்பத்தியாளர்களிடம் காணப்படுவது இல்லை".

இந்த மதிப்பீட்டிற்கு பிறகு ஆட்ரி சகோதரர்கள், தங்கள் தனித்தன்மையான தொழில்நுட்பத்தினை கொண்டு சந்தையில் தனி இடம் பிடிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டனர்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

ஆன்லைனில் பொருட்களை வாங்க தென்னிந்திய கிராம மக்களுக்கு உதவும் 'ஸ்டோர்கிங்'

________________________________________________________________________

eWAS (இ-வாஸ்), வர்த்தகரீதியாக 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இது தண்ணீர் மற்றும் எரிபொருள் சேமிப்பிற்கும், முழுமையான தண்ணீர் தானியக்கத்திற்கான தீர்வாக அமைந்தது. இந்திய காப்புரிமை இதழ்கள் கீழ் இந்தk கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு முறை இதை பொருத்தியவுடன், எந்த ஒரு சிக்கலுமின்றி தண்ணீர் குழாய்கள், வால்வுகள் மற்றும் தண்ணீர் சார்ந்த அமைப்புகள் தானாகவே செயல்படத் தொடங்கும். வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பொருத்தி பயன்பெறலாம். தற்போதுள்ள நிலையிலேயே செயல்படக் கூடியதால், தண்ணீர் பம்பு மற்றும் தண்ணீர் அமைப்பு முறையை மாற்றத் தேவையில்லை.

இக்கருவியியானது, தானியங்கி முறையினைக் கொண்டு, தண்ணீர் மட்டுமின்றி மின்சாரத்தையும் சேமிக்கிறது. மேலும் எந்த ஒரு பிரச்சனையுமின்றி தானியங்கி குழாய்களாக மாறுகின்றன. இதன் வெளிப் பகுதி ஏபிஎஸ் பிளாஸ்டிக் (ABS Plastic) கொண்டு உருவாக்கப்பட்டதால் மின்சார அதிர்ச்சியினை தடுக்கிறது, துரு பிடிக்காமல் இருக்கவும், உப்பு படிவத்திலிருந்து பாதுகாக்கவும் காந்த உணரிகள் கொண்டுள்ளது. கணினியை போன்று மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் பன்மடங்கு சரிபார்ப்பு ப்ரோக்ராம்கள் இதில் நிறுவப்பட்டுள்ளது.

15 லட்சம் மூலதனத்துடன் தொடங்கிய அனுபம் தனது தொழிலினை பகுதி நேரத்தில் நடத்திவந்தார். தொடக்கத்தில், கருவியினை உற்பத்தி செய்ய உதவுவதற்காக ஒருவரை மட்டும் பணியில் அமர்த்தினார். பிறகு கருவியை நிறுவுதலில் உதவும் பொருட்டு மற்றொருவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். விற்பனையினை தனது வலை தளத்தில் நிதானமாக மேற்கொண்டார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், ஒரு கருவியைக் கொண்டே தண்ணீர் தானியக்கத்திற்கான தீர்வாக eWAS (இ வாஸ்) அமைந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சுமார் 80 கருவிகளை உற்பத்தி செய்துவருவதுடன் உள்ளூர் போட்டியாளர்களான அரிஹந்த் வாடர் கண்ட்ரோல, ஸ்ரீ சவிதா மற்றும் பாரதி எலெக்ட்ரானிக்ஸ் போன்றவர்களின் சந்தை இடத்தையும் பிடித்துள்ளது. இ வாஸ்) தனது வளர்ச்சிக்காக நாடு முழுவதும் கிளை உரிமம் வழங்க திட்டமிட்டுள்ளது.

"தற்போது இந்தியாவில் 15 திற்கும் மேற்பட்ட கிளை உரிமங்களை வழங்கியுள்ளோம். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 முதல் 150 கிளை உரிமங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் அனுபம்.

தண்ணீர் சார்ந்த தொழிற் துறையில், அமெரிக்கன் ஜெனரல் எலெக்ட்ரிக், எமேர்ஷன் எலெக்ட்ரிக் அண்ட் ராக்வெல் ஆட்டோமேஷன், ஜெர்மன் சீமென்ஸ் ஏஜி, சுவிஸ் ஏபிபி போன்றவை தானியங்கி மற்றும் கருவியியல் சந்தையில் முன்னணி வகிக்கின்றன. "நாங்கள் முக்கியமாக, வீடுகள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், கட்டிட கலைஞர்கள், வீட்டு மனை திட்டங்கள், குடியிருப்பு திட்டங்கள் என பெரு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளாத திட்டங்களுக்கு குறி வைத்து செயல்படுகிறோம். இவை ரூ. 5000 முதல் ரூ 5 லட்சம் வரை திட்டச் செலவு கொண்டதாக இருக்கும். இவை பெரும்பாலும் நம்பகத் தன்மையற்ற உள்ளூர் பணியாளர்களை குறிவைத்தே இருக்கும்".

2014 லிருந்து 2020 ஆம் ஆண்டிற்குள், உலகளாவிய தண்ணீர் தானியக்கம் மற்றும் கருவியியல் சந்தையின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம், 11.75 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதே ஆண்டிற்குள் ஆசிய-பசிபிக் பகுதிகளில் மிக அதிகமானதாக அதிகபட்சமாக 12.07 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆண்டிற்குள் தண்ணீர் தானியக்கம் மற்றும் கருவியியல் சந்தையானது 17.73 பில்லியன் டாலர்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தண்ணீர் தானியக்க சந்தையானது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அது கட்டமைப்பற்ற முறையில் வளர்ந்து வருகிறது. இந்தியாவில், இத்துறைக்கு இரண்டாம் நிலை தரவுகள் இல்லை. அதன் உத்தேச மதிப்பீடு 2 பில்லியன் டாலர் என கூறுகிறார் அனுபம்.

இந்த தொழில் முனைவானது 100 சதவீதம் ஆண்டு வருமான வளர்ச்சி கண்டது. முதல் ஆண்டில் ரூ 12 லட்சம் ஈட்டியது. இரண்டாம் ஆண்டு ரூ. 24 லட்சம் என அதிகரித்தது. கடந்த ஆண்டு ரூ. 50 லட்சம் என, மாதத்திற்கு சராசரி ரூ. ஐந்து லட்சம் வருமான எட்டியது.

"எங்கள் வளர்ச்சியையும் வேகத்தையும் அதிகரிக்க, வெளி முதலீடுகள் பெரும் நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்." என்கிறார் அனுபம்.

இணைய தள முகவரி: eWas

ஆக்கம்: பிஞ்சல் ஷா | தமிழில்: விஷ்ணுராம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சாமனியர்கள் தேவைக்கென உருவாகிய தொழில்முனைவோர் கட்டுரைகள்:

ரயில் பயணத்தில் பிறந்த பயணிகள் செயலி ‘ஓமித்ரா’

பெற்றோரையும்- பள்ளிகளையும் இணைக்கும் 'ஸ்கூடாக்ஸ்'