சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 99.4% எடுத்த விவசாயியின் மகள்!

0

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மார்க்குகள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார் தரன்ப்ரீத் கவுர். பஞ்சாப் மாநிலம் மனல் கிராமத்தில் ப்ராட்வே பொது பள்ளியில் படிக்கும் அவர், அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு விவசாயியின் மகன் என்பதே இத்தனை பெருமைக்குக் காரணம்.

தரன்ப்ரீத்; கணக்கு, பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் பொருளாதாரம் பாடங்கள் உள்ள பிரிவை எடுத்து படிக்க விரும்புகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி,

"என்னால் நம்பவே முடியவில்லை. 95% மேல் எடுப்பேன் என்று நம்பிக்கை இருந்தது, ஆனால் 99% எடுப்பேன் என்பது கனவு போல உள்ளது. கனடாவுக்கு குடிபெயர்ந்த எனது மாமா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அதேப்போல என் ஆசிரியர்களும் எனக்கு வழிகாட்டினர். எனக்கு தேவையான உதவிகளை செய்தனர். என் கிராமத்தில் ட்யூஷன் வசதி இல்லாததால் நானே தேர்வுக்கு படித்தேன். எனக்கு அது கஷ்டமாக தெரியவில்லை.”  

தரன்ப்ரீத்தின் அப்பா ஒரு விவசாயி. அவருக்கு 16 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. மகளின் வெற்றியை பற்றி பகிர்கையில்,

“தரன்ப்ரீத் இவ்வளவு நன்றாக படிப்பாள் என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்பவுமே அவளுக்கு நல்ல கல்வி கொடுக்க விரும்பினேன். அவளின் கனவுபடி அவள் நன்கு படிக்கட்டும்.”

தரன் யூபிஎஸ்சி தேர்வு எழுத விரும்புகிறார். மேலும் ஐஏஎஸ் ஆக விரும்புவதாக Nyoooz தளம் தெரிவிக்கிறது.

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL