தமிழ் பாரம்பரிய உணவுவகைகளை ஊக்குவிக்க நண்பர்கள் தொடங்கிய ‘திருக்குறள் உணவகம்’ 

1
"தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் இன்று அயல்நாட்டு உணவு உற்பத்தியால் அழித்து வருகிறது. மக்களிடையே மறைமுகமாக அயல்நாட்டு உணவுகள் தினிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பாரம்பரிய உணவு என்றால் அது கூழ் மட்டுமே என்று மக்கள் நம்பிக்கொண்டு இருப்பது பெரிய அவலம்."

இந்த தலைமுறை மக்களுக்கு பாரம்பரிய உணவுகளை கொண்டு சேர்க்கவே திருக்குறள் உணவகம் தொடக்கப்பட்டது என்று தொடங்கினார் சுரேஷ். 

சுரேஷ் பொறியியல் படிப்பை முடித்து விட்டு சில மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையில் அவருக்கு பெரியளவு உடன்பாடு இருந்ததுல்லை. அதற்குக் காரணமாக சுரேஷ் குறிபிட்டது, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, இந்த சமூகத்திற்கு பயன்படும் தொழிலை செய்ய வேண்டும் என்றே நினைத்து கொண்டு இருந்தேன். அன்று எனக்கு தெரியாது நான் உணவுத் துறையை சார்ந்த தொழிலை துவங்குவேன் என்று, என்று கூறினார். 

”மென்பொருள் நிறுவனத்திலிருந்து வெளியேறி நண்பர்கள் உடன் இணைந்து பாரம்பரிய உணவு உணவகத்தை தொடங்கலாம் என்று முடிவு எடுத்தேன்.” 

உணவகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பல இடங்களுக்குச் சென்று நிறைய மனிதர்களை சந்திதேன். அதில் குறிப்பிடத்தக்கவர் சகாயம் ஐயா, மேலும் டாக்டர் சிவாராமன் எழுதிய ஆறாம் திணை புத்தகமும் எங்களுக்கு உதவியது, இந்த புத்தகத்தில் தமிழரின் பாரம்பரிய உணவுவகைகளை பற்றி எழுதிருப்பார்.

மேலும் பலரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக சுரேஷ் தெரிவித்தார். சிறுதானியம் உணவை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்று முடிவு எடுத்து களத்தில் இறங்கினார். ’திருக்குறள் உணவகம்’ என்று பெயரிட்டதற்கான காரணத்தை விளக்கிய சுரேஷ், 

”தமிழ் மொழியின் அடையாளம் என்று எடுத்துக் கொண்டால் அதில் உலகப் பொதுமறை நூலான திருக்குறள் இடம்பெறும். திருக்குறள் இரண்டு அடியில் இருந்தாலும், அதன் கருத்துகள் வானளவு பெரிதாகும். அதேப் போல சிறுதானியம் அளவில் சிறியதாக இருந்தாலும், உடல் ஆரோக்கியதிற்கு அதன் பயன் பெரியதாக இருக்கும்.”
சாகயம் அவர்கள் திருக்குறள் உணவகத்தை திறந்து வைத்த போது,அருகில் சுரேஷ் மற்றும் அவர் நண்பர் கார்த்திக்
சாகயம் அவர்கள் திருக்குறள் உணவகத்தை திறந்து வைத்த போது,அருகில் சுரேஷ் மற்றும் அவர் நண்பர் கார்த்திக்

ஆனால் ஆரம்பக்கட்டத்தில் மக்களிடம் எங்கள் சேவை போய்ச் சேரவில்லை. எங்களோடு இணைந்து செயல்பட்ட அனைத்து பங்குதாரர்களும் வெளியேறினார். ஒரு கட்டத்தில் நானும் என் நண்பனும் மட்டும் தான் இருந்தோம், என்றார் வருத்தங்களுடன்.

அந்த தோல்வியிலிருந்து மீள அவர்கள் அடுத்தகட்டமாக திருக்குறள் உணவகத்தை எப்படி எடுத்து செல்லலாம் என்று எண்ணினார்கள். சென்னை கரையன்சாவடியில் திருக்குறள் உணவகத்தை தொடங்கினார்கள். அங்கு பெரும்பாலும் மென்பொருள் நிறுவனம், ஐடி நிறுவனங்கள் உள்ளதால். அங்கு பணிபுரிவோரை இந்த உணவகத்திற்கு வரத் துவங்கினர். 

”இயற்கை உணவு என்பதால் அனைவரிடத்திலும் நாங்கள் நல்ல பெயரை பெற்றோம். வாடிக்கையாளர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. சிறுதானியம் உணவு மக்களிடையே பரவ ஆரம்பித்தது.” 

மேலும் அவர்கள் சிறுதானிய உணவை அவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். தமிழரின் உணவு வகையை மீட்க நாங்கள் போராடியதற்கு கிடைத்த முதல் வெற்றி என்றார். அயல்நாட்டு உணவகத்திற்கு ஈடாக இன்று திருக்குறள் உணவகம் 3 இடங்களில் கிளைகள தொடங்கி உள்ளனர். கரயான்சவடி, அடையார் மற்றும் அசென்டாஸில் இயங்குகிறது. மக்களும் இந்த புதிய முயற்சியை உணர்ந்து எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சிறுதானியங்களிலிருந்து பல்வேறு வகையான உணவுகளை, மக்கள் எங்களிடமிருந்து ஏதிர்ப்பார்ப்பதால், அதற்கு ஏற்றவாறு சிறுதானிய கொழுகட்டை, ராகி வடை, புதினா சாறு, சிறுதானியங்கள் இணைந்த மதிய உணவு, கேரட் சாறு, பாரம்பரிய மதிய உணவு, போன்ற பல வகைகளில் அவர்களுக்கு நமது பாரம்பரிய உணவை கொண்டு போய் சேர்த்து வருகிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்களிடம் சிறுதானிய உணவுகளால் என்னென்ன பயன் உள்ளது என்று அவர்களுக்கு எடுத்துரைந்து ஒரு தெளிவு  பெற்ற பின்னரே எங்கள் உணவகத்திலிருந்து செல்வார்கள் என்றார்.

”தமிழிரின் பாரம்பரிய உணவான சிறுதானிய உணவுவகைகளை எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதே எங்கள் லட்சியம்,” என்கிறார் சுரேஷ்

இதுபோன்று பல உணவகம் திறக்கப் படவேண்டும், அப்போது தான், நாம் தொலைத்த பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று இளைஞர்களுக்கு தனது அன்பான வேண்டுகோளையும் விடுத்தார் சுரேஷ்.

Related Stories

Stories by Deepak kumar