பில்லியன் டாலர் பெண்கள் !

1

தாம் பயணிக்கத் தனி ஜெட் விமானங்கள், விடுமுறைக்குச் செல்ல சொந்த தீவு என செல்வந்தர்களைக் குறித்தான ஆர்வமும், ஈர்ப்பும் நிலையானதாக இருக்கிறது. இந்தியாவில் கோடீஸ்வர ஆண்கள் பல இருகிறார்கள், ஆனால், பெண்கள் சிலர் தான்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் நூறு செல்வ வளம் நிறைந்த இந்தியர்கள் எனும் பட்டியலில் இடம் பெற்ற பெண்களின் தொகுப்பு இங்கே. அவர்கள் ஒருவரிலிருந்து மற்றவர், பல வழிகளில் மாறுபட்டவராய் இருக்கலாம், ஆனால் செல்வத்தில் மட்டுமல்லாமல் தம் ஆளுமைகளாலும் தனித்துத் தெரியும் பெண்கள் இவர்கள். அவர்களின் செல்வச் செழிப்பும் குறைந்ததில்லை தான். 

இந்த நான்கு பெண்களின் நிகர மதிப்பின் கூட்டுத் தொகை பத்து பில்லியன். மொனாகோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே இதற்கு கீழ் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

சாவித்ரி ஜிண்டால்

ஆசியாவின் செல்வமிகுந்த பெண்மணி, சாவித்ரி ஜிண்டால். கௌஹாத்தி அருகிலுள்ள தின்சுகியா எனும் கிராமத்தில் வளர்ந்த இவர், ஜிண்டால் குழுமத்தில் நிறுவனர் ஓ.பி. ஜிண்டாலை மணமுடித்து, தன் ஒன்பது பிள்ளைகளை சிறப்பாக வளர்த்தெடுக்கும் இல்லத்தரசியாக இருந்தார். 2005ல் தன் கணவர் மரித்த பிறகு, ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவருடைய தலைமையின் கீழ் ஜிண்டால் குழுமத்தின் வருவாய், நிதானமாக உயர்ந்திருக்கிறது. ஹரியானா மாநில அமைச்சராக இருந்த சாவித்ரி, பல திறனுடையவர். இவருடைய மொத்த நிகர மதிப்பு, 3.9 டாலர்.

லீனா திவாரி

யுஎஸ்வி ஃபார்மா என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் தான் லீனா திவாரி காந்தி. சமூக சேவகரும், அரசியல்வாதியுமான தன் தாத்தா, வித்தல் பாலகிருஷ்ண காந்தித், தொடங்கிய சிறு நிறுவனத்தோடு தன் பயணத்தைத் தொடங்கியவர். மருந்துக்களை இறக்குமதி செய்துக் கொண்டிருந்த நிறுவனம், 1960ல் ஒரு அமெரிக்க நிறுவனத்தோடு இணைந்து, உற்பத்திச் செய்வதிலும் இறங்கியது.

தன் இரண்டு குழந்தைகளோடு, மும்பையில் வசிக்கும் லீனா திவாரி, பாஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்து எம்பிஏ பட்டம் பெற்றவர். இயற்கைக் காதலியான இவர், நாடு முழுக்க உள்ள காடுகளுக்குப் பயணித்து, அங்கிருக்கும் வன விலங்குகளைப் பற்றிக் கற்பதில் ஆர்வமுள்ளவர். அதிலும், ஊர்வன வகைகள் மேல் அதீத ஆர்வம். தன் குடும்ப மூதாதையர்களைப் பற்றி ஆய்வு செய்வதில் பெரும் விருப்பம் கொண்ட இவர், தன் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை, ‘ குழாய்களுக்கும், கனவுகளுக்கும் அப்பால்- வித்தல் பாலகிருஷ்ண காந்தியின் வாழ்க்கை’ என்றப் பெயரில் எழுதியிருக்கிறார்.

இந்து ஜெயின்

பென்னெட், கோல்மேன் & கோ-வின் இந்து ஜெயினின் நிகர மதிப்பு, 1.9 பில்லியன். இந்தியாவின் தலைசிறந்த ஊடகக் குழுமமான ‘டைம்ஸ்’ குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் தான். முன்னேற்றத்தின் களத்தில் பல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழும் டைம்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவரும் அவர் தான். இயற்கை சீற்றங்களின் பொழுதிற்கான நிவாரண நிதியாக இருக்கும், தி டைம்ஸ் நிவாரண நிதி அமைக்கப்பட காரணம் இவரது ஈடுபாடு தான்.

பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இந்து, பெண் தொழில் முனைவர்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். மேலும், இந்து, தான் தொடங்கிய பாரதீய ஞான்பித் ட்ரஸ்டின் மூலமாக, இந்திய எழுத்து முயற்சிகளை ஆதரிக்கவும், ஞான்பித் விருதின் மூலமாக எழுத்தாளர்களை பாராட்டவும் செய்கிறார். 2000ல் ஐக்கிய நாடுகளில், மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் மில்லினிய உலக சமாதான மாநாட்டில், நம்பிக்கைகளில் இருக்க வேண்டிய ஒற்றுமையைப் பற்றி இவருடைய உரை, பெரிதும் பாராட்டப்பட்டது.

விநோத் குப்தா

மறைந்த கீமத் ராய் குப்தாவின் மனைவியும், இந்தியாவில் செல்வம் நிறைந்த பெண்மணியுமான வீநோத் குப்தா, மின் பொருத்தல்கள் உற்பத்தி செய்யும் ஹாவல்ஸ் நிறுவனத்தின் தன் கணவரின் பங்குகளை மரபுரிமையாக பெற்றவர்.

கீமத் ராய் குப்தாவால், 1971ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், தற்போது, அவருடைய மகனால் நடத்தப்படுகிறது. அவருடைய மகன், அனில் ராய் குப்தா, ‘ஹாவல்ஸ்: கீமத் ராய் குப்தாவின் சொல்லப்படாத கதை’ என்ற தன் புத்தகத்தை, ‘என் அப்பாவின் வெற்றிக்கு பின் இருந்த உண்மையான சக்தி, என்னை உணர்ச்சி ரீதியாக வடிவமைத்த என் தாய் விநோத் குப்தாவிற்காக’ , எனத் தன் தாய்க்காக சமர்பித்தார்.

செல்வந்தர்கள், கொண்டாட்டங்களோடு வாழ்ந்தாலுமே, வாழ்க்கை அவர்களுக்கு விளையாட்டில்லை என்பதற்கு, இவர்கள் உதாரணம். “உங்கள் பணத்தை எல்லாம் இழந்த பிறகு, உங்கள் மதிப்பு என்னவாக இருக்குமோ, அது தான் உண்மையில் உங்கள் செல்வத்தின் அளவுகோல்” என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் பயிக்கும் பெண்கள் இவர்கள்.

ஆக்கம்: Sharika Nair | தமிழில்: Sneha

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இதுபோன்ற பெண் சாதனையாளர்கள் தொடர்பு கட்டுரைகள்:

தொழில் பயணத்தை உச்சம் நோக்கி கிரண் மஜும்தார் ஷா!

மும்பையிலிருந்து ப்ளூட்டோ வரை: காமாக்‌ஷியின் விண் பயணம்!

டெஸ்கோவின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குனர் வித்யா லட்சுமனின் பயணமும் சாதனைகளும்!