"பில்லியன் டாலர் பேபி" யாக ஃபிரெஷ்டெஸ்க் தெரிவு - டைகான் சென்னை 2015 விருது

0

ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டக்கூடிய திறமை படைத்த சென்னையை சார்ந்த நிறுவனங்களை அடையாளம் காட்டி கவுரவிப்பதற்காக உருவாக்கப்பட்டது 'பில்லியன் டாலர் பேபி விருது'. இந்த வருடம் டைகான் சென்னை 2015 நிகழ்வில் அந்த பெருமையை ஃப்ரெஷ்டெஸ்க் (FreshDesk) நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விருது இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ கிரீஷ் மாத்ருபூதம் பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதை VA டெக் வபாக் லிமிடட், பினான்சியல் சாப்ட்வேர் & சிஸ்டம்ஸ், கான்க்ரூவன்ட் சொலுஷன்ஸ் மற்றும் மக்ஸ்டர் ஆகிய நிறுவனங்கள் பெற்றன.

டை (TiE) சென்னை தலைவர் திரு நாராயணன் கூறுகையில் "புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவர்களை ஆதரிக்கக்கூடிய மேடை தளமாக இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்."

கருத்து பரிமாற்றம் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் உதவும் இந்த தளம், தொழில் முனைவு சிந்தனையை மேலும்முனைப்புடன் எடுத்து செல்லும் என்றும் நம்புகிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள வெற்றிகரமான தொழிலதிபர்கள் மற்றும் முன்னணி தொழில் முனைவர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.