தொழில்முனைவர் எப்பொழுதும் துணிந்து செயல்படவேண்டும்: ஷகுன் ஷர்மா

1

பள்ளிக்கல்வி முடித்தவுடன் மும்பையில் உள்ள நிஃப்ட்(NIFT) கல்லூரியில் சேர்ந்து ஃபேஷன் வடிவமைப்பு பாடத்தை பயில தேர்ந்தெடுத்தார். ஆனால், எட்டு மாததிற்குள்ளாகவே இந்த துறை அவருக்கானதல்ல என்ற முடிவோடு பாதியிலேயே வெளியேறினார். பல விமர்ச்சனங்களிடையே, தனது முடிவில் ஸ்திரமாக நின்றதோடு, ஒரு சபதத்தையும் மேற்கொண்டார்.

"எனக்கு விருப்பமான செயல்களுக்காக மட்டுமே இனி நேரம் ஒதுக்குவேன்"...

"இந்த கொள்கைப்பிடிப்போடு இது வரை வாழ்கிறேன்" என்கிறார் ஷகுன் ஷர்மா. இவர் ஹெடோநிஸ்டா (Hedonista ) வின் நிறுவனர். இயற்கையான பொருட்களை கொண்டு கையால் செய்யப்பட்ட நிலையானஅழகு சாதன ஆடம்பர பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இது ஆடம்பர பொருட்களாக மட்டுமின்றி சிறப்பான தனித்துவம் வாய்ந்த வாசனை திரவியங்களை கொண்டு செய்யப்பட்டவை என்கிறார் ஷகுன்.

தன் குறிக்கோளை நினைவு படுத்தும் வகையில் தன் கையில் ஹெடொநிஸ்டா லோகோவை பச்சை குத்தியுள்ளார் ஷகுன்
தன் குறிக்கோளை நினைவு படுத்தும் வகையில் தன் கையில் ஹெடொநிஸ்டா லோகோவை பச்சை குத்தியுள்ளார் ஷகுன்

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஷகுன் பாரம்பரிய முறையில் குளிர் செய்முறை கொண்டு சோப்பு தயாரித்தார். சந்தையில் உள்ள இத்தகைய பொருட்கள் தன்னை ஈர்காததால் , இந்த தயாரிப்பில் ஈடுபட்டார். மிகுந்த சிரத்தையுடன் இந்த தயாரிப்பை பற்றி மேலும் ஆராய்ச்சிப் புரிந்து, இதற்கான மூலப்பொருட்கள் மற்றும் செய்முறை ஆகியவற்றை கற்றுக்கொண்டு தயாரிப்பை மெருகேற்றினார். அவருடைய நண்பர்களிடையே இது பெரிய வரவேற்பைப் பெற்றது. "தற்போது சந்தையில் உள்ள ஆரோக்கிய மற்றும் ஆயுர்வேத தோல் பாதுகாப்பு பொருட்களை விட இயற்கை சார்ந்த ஆடம்பர பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதாக உணர்ந்தேன். இதுவே ஹெடோநிஸ்டா உருவாக காரணமாக அமைந்தது."

டெல்லியில் பிறந்து வளர்ந்த ஷகுன், பள்ளிப் படிப்பை நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியிலும், டில்லி பல்கலைகழகத்தில், ஆங்கில (hons ) பட்டபட்டிப்பையும் முடித்தார். பிறகு புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் (Symbiosis) கல்லூரியில் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், பியுச்சர் ப்ராண்ட் போன்ற நிறுவனங்களில் பணி புரிந்தார். பல ப்ராண்ட்களுக்கான வளர்ச்சி திட்டங்களில் பணி புரிந்ததால், பெண் வாடிக்கையாளர்களின் தேவைகள், விருப்பங்கள் ஆகிவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

தொழில்முனைவராக இருப்பது கவர்ச்சிகரமானதாக தெரியலாம், ஆனால் அது துளியும் அவ்வாறில்லை என்கிறார் ஷகுன்.

"உண்மையில் நாம் களம் இறங்கிய அந்த நாள் முதல் எந்த சூழ்நிலையிலும் துணிந்து களத்தில் இறங்கி செயல் பட கூடிய ஆற்றல் வேண்டும்"

தனி ஆளாக களத்தில் நின்று - தயாரிப்பாளராக, புதிய தயாரிப்பில் ஈடுபடுபவராக, தொழிற்சாலையில் தயாரிப்பு குழுவை வழி நடத்துபவராக, சந்தை தேவையை அறிந்து அதற்கேற்ப பொருட்களை தயாரித்து, வணிக திட்டங்களை தீட்டுதல் மற்றும் அதற்கான மூலதனத்தை தயார் படுத்துதல் என அத்தனை சவால்களையும் ஏற்று எல்லாவற்றையும் செயல்படுத்துபவராக இருக்கிறார் ஷகுன்.

தொழில்முனைவர்கள் எப்பொழுதும் செயல் பட்டுக்கொண்டே இருத்தல் அவசியம். "எல்லா சவால்களையும் மிகுந்த பொறுமையுடன் எதிர்கொள்ளுதல் முக்கியம். சிறு அலட்சியங்கள் கூட பின்னாளில் பெரிய அளவில் நமது நேரத்தை விரயம் செய்ய வழி வகுத்து விடும்.". வணிகத்தின் அனைத்து அம்சங்களையும் - பிராண்டுக்கான அடையாளம், தடவாளம், நிர்வாகம் மற்றும் சட்டம் தொடர்பான அனைத்தும் அறிந்திருத்தல் அவசியம்.

சரியான வழிமுறைகளை சமயோஜித புத்தியுடன் கையாண்டால் , எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்பது ஷகுனுக்கு அனுபவம் கற்று தந்த பாடம். மிகப் பெரிய சவாலாக கருதுவது நேரமின்மை.

"எதில் நேரத்தை செலவழிப்பது அல்லது எவற்றில் பணத்தை செலவு செய்வது என்று முடிவெடுப்பது ஒரு பெரிய சங்கடம். தொழில்முனைவராக என் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது மிக அவசியம். எந்த வேலையை நானே செய்வது எவற்றை அவுட்சோர்ஸ் செய்வது என்ற முடிவெடுத்தல் அத்தியாவசியம்," என்கிறார். 

இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை உலக அரங்கில் சந்தை படுத்த ஷகுன் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு தனி நபரும் சந்தோஷத்துடன் அவர்களுடைய அழகினை பேணி காக்க வேண்டும். அழகு நிலையங்கள், ஸ்பா மற்றும் பெரிய விடுதிகளிலும் இவருடைய பொருட்களை சில்லறை வர்த்தகம் மூலமாக சந்தை படுத்த உள்ளார். "தென் கிழக்கு ஆசியாவில் ஹெடோநிஸ்டாவுக்கு பரந்த வாய்புகள் உள்ளதால், அங்கே தனது விநியோகத்தை விரிவுபடுத்த திட்டங்கள் வகுப்பதாக" கூறுகிறார் ஷகுன்.