'விவிலியோ' புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படித்து, பரிந்துரைத்து, தாக்கத்தை ஏற்படுத்த உதவும் தளம்!

0

பிரியங்கா குப்தா, "விவிலியோ" (Vivilio) வின் நிறுவனர். 2011ல் இந்தியாபுக்ஸ்டோர்.நெட்-ன் இணை நிறுவனராக தன்னுடைய தொழில்முனைவர் பயணத்தைத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் புத்தகங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய மிகப்பெரிய தளமாக விவிலியோவை மாற்றி உள்ளார்.

"மனிதன் வாழ்வில் தன்னைச் சுற்றி உள்ள மக்கள் மற்றும் புத்தங்களில் இருந்தே பெரும்பாலானவற்றை கற்றுக் கொள்கிறான் என்கிறார் பிரியங்கா. தற்போது புத்தகங்களில் இருந்து சம அளவிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது துண்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் புத்தகங்கள் தொடர்பான மிகப்பெரிய இரண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவற்றை இணைக்கும் முயற்சியை செய்து வருகிறோம்: எந்த மாதிரியான புத்தகங்களை வாசிப்பது? பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் படிக்க உகந்ததா என்பதை எவ்வாறு கண்டறிவது என்று".

விவிலியோ இதற்கான தீர்வாகப் புத்தகங்கள் பற்றிய சுயகுறிப்புகளை அளிக்கிறது, இது வாசிப்பாளருக்கு அந்தப் புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

தொடக்கம்

விவிலியோவை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கினார் பிரியங்கா, இந்தியாபுக்ஸ்டோர்.நெட் குழுவில் இருப்பவர்கள் : சௌமித்ரா சென்குப்தா, க்ஷிதிஸ் குப்தா, பிரகர் சுகல், ஆகாஷ்துப் சிங் மற்றும் முக்தா வாகிள்.

தொடர்ந்து புத்தகம் வாசிப்பவர்களோடு அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கலந்துரையாடி வருகிறார்கள். ஒரே மாதிரியான புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுவதே பயனாளர்களுக்கு திரும்பத் திரும்ப வரும் பிரச்சனையாக இருக்கிறது. தொடர்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு, நல்ல வாசிப்பு மட்டுமே இந்திய வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பது புரிந்தது. ஏனெனில் இந்திய புத்தக வாசிப்பாளர்கள் எண்ணிக்கை 83 மில்லியன். அவர்களுக்கு ஒரு லட்சம்+ புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. இதுவே விவிலியோ பிறக்கக் காரணம்.

விவிலியோ, ஒரு கருத்துத்தளமாக முதலில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக இணையதள பயனாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தியப் பெண்களை டேட்டிங் செய்யும் முன் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள் போன்ற சில பட்டியல் அடங்கிய கட்டுரைகளை எங்கள் வலைதள பக்கத்தில் வெளியிட்டோம். அதே நேரத்தில் அவர்கள் பயனாளர்களுக்கான படிக்கும் ப்ரொஃபைல்களை செப்டம்பர் 2015ல் அறிமுகம் செய்தனர், அதற்கு தற்போது வரை 800+ சைன்அப்கள் கிடைத்துள்ளது.

விவிலியோவிற்கு, நல்லவாசிப்புகளை பொருத்த வரையில் உலக அளவில் போட்டியாளர்கள் உள்ளனர். சௌமித்ரா கூறுகையில், விவிலியோ தன்னுடைய போட்டியாளர்களுடன் கீழ்வரும் விதங்களில் மாறுபடுகிறது:

1. விவிலியோ, இந்திய எழுத்தாளர்கள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் புத்தகங்களை பெரிதும் மையப்படுத்தி முதலில் மொபைல் மூலம் வாசகர்களை அணுகுகிறது.

2. விவிலியோ புத்தக பரிந்துரைகள் தொடர்பான பிரச்சனையை சம்பந்தப்பட்ட மக்களோடு கலந்து பேசி தீர்த்து வைக்கிறது எந்தவித கூச்சல் குழப்பமும் இல்லாமல்.

இந்தியாவில் புத்தக வாசிப்பு சந்தை

இந்தியாவில் உள்ள புத்த வெளியீட்டு சந்தை அமெரிக்க டாலர் மதிப்பில் 2.8 பில்லியன். இந்திய புத்தக வெளியீட்டுத் துறையின் வளர்ச்சி 15 சதவீதமாக உள்ளது(சர்வதேச சராசரி 12 சதவீதம்).

இளம் வயது எழுத்தாளர்களான சேதன் பகத், ரவீந்திர சிங், இன்னும் பலரின் கற்பனைத் திறன் மிக்க புத்தகங்கள் சாதாரண வாசிப்பாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களைக் கூட படிக்கத் தூண்டுவனவாக உள்ளன. அதே போன்று ஜெய்ப்பூர் லிட் ஃபெஸ்ட் மற்றும் நகர அளவிலான புத்தக திருவிழாக்கள் அதாவது டெல்லி புக் ஃபேர் போன்றவை வாசிப்பு பக்கம் வாசகர்களை இழுப்பவைகளாக உள்ளன.

எதிர்காலத் திட்டங்கள்

எங்கள் நிறுவனம் தற்போது தான் கால்பதித்துள்ளது, விரைவில் தேவதையாக வலம் வரும் என்று நம்புகிறோம். பயனாளர்களைத் தக்கவைப்பது மற்றும் இதை மேலும் மேன்மைபடுத்தும் வகையில் நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

"எங்களது ஆண்ட்ராய்டு செயலியை இம்மாதத்தில் அறிமுகம் செய்கிறோம். அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து இந்திய எழுத்தாளர்களின் கையெழுத்தையும் எங்கள் தளத்தில் பதிய வைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது 50 ஆயிரம் பயனாளர்கள் எங்களிடம் உள்ளனர். இந்தியா பதிப்பக சந்தையில் உயர்ந்த வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், நாங்களும் எங்கள் புத்தக வடிவமைப்பை அறிமுகப்படுத்தி, நாட்டில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறந்த பங்காற்ற விரும்புகிறோம்".

வாசிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட விருப்பமுள்ள வாசிப்பாளர்கள் சமூகம் விவிலியோவில் உள்ளது. அவர்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எழுத்தாளர்களை டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் இல்லாமல் வீரியமிக்க வகையில் மக்களைச் சென்றடைய உதவுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: Vivilio

Stories by Gajalakshmi Mahalingam