ஸ்டார்ட் அப் துவக்க விருப்பமா? நீங்கள் முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் ஐடியா உதயமாகும் போது தொழில்முனைவோர்களை பாதிக்கும் குறுகிய கால உணர்வுக்கு உள்ளாகாமல் இருப்பது முக்கியம். ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கி நடந்த ஐடியா மட்டும் போதாது என்பதோடு, சீக்கிரமே துவங்குவதால் மட்டும் பில்லியன் டாலர் வர்த்தகத்தை உருவாக்கி விட முடியாது. 

1

புதிய நிறுவனங்களில் 50 சதவீதம் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு பிறகும் நிலைத்திருக்கின்றன என்பதும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பத்து ஆண்டுகளுக்கு பிறகும் இருக்கின்றன என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

இன்றைய வேகமான உலகில், ஓவொருவரும் முன்னிலை பெறவே விரும்புகின்றனர். இந்த அவசரத்தின் காரணமான விரைவு கற்றல் தோல்வியாக மாறுகிறது. எர்லி ஆடாப்டர்ஸ் என சொல்லப்படும், ’ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டவர்கள்’ எனும் பதம் நம்மில் பலருக்கு புரிந்து கொள்கிறது. சந்தையில் அறிமுகமாகும் ஒவ்வொரு புதிய கேட்ஜெட்டையும் வாங்கி பயன்படுத்துபவர் நீங்களா? 

தங்கள் உள்ளுணர்வை நம்பி புதிய பொருளின் ஆரம்ப சில வாடிக்கையாளர்களில் ஒருவராக இருப்பவரா நீங்கள். இவற்றில் உங்கள் பிரதிபலிப்பை கண்டால் நான் என்ன சொல்ல வருகிறேன் என உங்களுக்கு சரியாக புரியும்.

இதே முறையை பின்பற்றி, பல ஸ்டார்ட் அப்கள் வர்த்தகத்திலும் செயல்படுவதை பார்க்க முடிகிறது. இது நல்லதா? சரியான உத்திகளுடன் சந்தையில் நீங்கள் ஏகபோக ஆட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா என்பதை பொருத்து இது அமையும். இந்த மாத துவக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் 77 சதவீத பங்குகளை வாங்கிய பிறகு ஃபிளிப்கார்ட் எங்கே சென்றுள்ளது என பாருங்கள். ஆனால் நாளை எத்தனை ஃபிளிப்கார்ட்களை நம்மால் பார்க்க முடியும்?

புதிய முயற்சிகளும் ஆரம்ப ஆதரவாளர்களும்

ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய அறிவு, மக்கள்தொகை மாற்றம், கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றன. போதிய வளம் இல்லாதது அல்லது மோசமான செயல்பாடு புதிய வர்த்தகத்தின் தோல்விக்கான காரணமாக சொல்லப்பட்டாலும், தொடக்கத்திலேயே ஈடுபட்டது மற்றும் புத்திசாலித்தனமான ஆய்வு இல்லாத காரணங்கள் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.

ஏன் என்பது தான் இப்போதைய கேள்வி. இன்று எல்லோரும் வெற்றி பெற விரும்புகின்றனர். ஒரு நிறுவனம் வாடிகையாளர்களுக்கு இதற்கு முன் இல்லாத அளவுக்கான இலகுவான லாஜிஸ்டிக்ஸ் வசதியை அளிக்க விரும்பினால் இன்னொரு நிறுவனம் கோரிக்கை அடிப்படையிலான சேவையை முன்னெடுக்க விரும்புகிறது. 

போஸ்ட்மேட்ஸ் மற்றும் உபெர் போன்ற பெரிய நிறுவனங்கள் தொழில்முனைவோருக்கு பாடங்களை கற்றுத்தந்துள்ளன. ஆரம்பத்திலேயே ஈடுபடுவது என்பது இவற்றின் வெற்றிக்கு காரணமா? இப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தெளிவில்லாத ஆனால் பிரகாசமான வர்த்தக உலகில் அடியெடுத்து வைக்கும் முன் தொழில்முனைவோர் நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை:

உங்கள் வர்த்தகம் உங்கள் அடையாளம்

ஒரு மே மாத காலையில் எழில்மிகு காபி ஷாப்பில் அமர்ந்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த சூழலில் லயித்திருக்கும் போது, ஒரு நொடி நீங்களும் சொந்தமாக காபி ஷாப் துவக்க வேண்டும் என நினைக்கலாம். இப்படி கனவு காணலாம் அல்லவா?

இப்போது மற்றொரு நாள் அதே காபிஷாப்பில் அமர்ந்த படி, வாடிக்கையாளர்களை நோக்கிய படி, அதே சூழலில் ஒன்று அல்லது இரண்டு தவறுகளை கண்டறிவதாக வைத்துக்கொள்வோம். இப்போது கனவு எண்ணத்தை விட்டுவிட மாட்டீர்கள். இப்படி தான் வர்த்தக உலகில் புதிய ஸ்டார்ட் அப்கள் தினமும் உதயமாகி பெரிய அளவில் முன்னேற்றம் காணாமலே தோல்வியை தழுவுகின்றன..

உங்கள் மனதில் தோன்றும் வர்த்தக எண்ணங்களின் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வர்த்தக திட்டம், சந்தை அளவு, போட்டியாளர்கள், வருவாய் மாதிரி, சரியான நிர்வாக குழு, சந்தை உத்திகள், எப்போது முதலீட்டாளர்களை அணுகுவது, மாற்று திட்டம் ஆகியவற்றை சரியான ஆய்வு மூலம் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இதன்பிறகும் அடுத்த யூனிகார்னை உருவாக்க நினைத்தால் வாழ்த்துக்கள்.

விரிவான ஆய்வு

எந்த வர்த்தக ஐடியா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் விரிவான ஆய்வு தேவை என நம்புகிறேன். பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனர்களிடம் பேசும் போது, போட்டியாளர்களை விரிவாக ஆய்வு செய்வது, பல்வேறு கட்டங்களில் பல்வேறு உத்திகளை கடைப்பிடிப்பது, மாற்று திட்டம் ஆகியவறை குறித்து பின் வாங்குவதை பார்க்கிறேன். இப்படி இருந்தால் சவால்களை எப்படி எதிர்கொள்ள முடியும்?

செயலாக்கத்திற்கு முன், ஒருவர் மாதிரி திட்டத்துடன் கால வரிசையையும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு சரியான ஆய்வு அணுகுமுறை அவசியம். சந்தையின் ஒலிகளை கவனமாக கேட்பது நல்ல துவக்கம்.

என்ன நம்புங்கள், இதில் ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. சந்தையை அறியாவிட்டால், உங்களால் விற்க முடியாது. 42 சதவீத ஸ்டார்ட் அப்கள் சந்தை ஆய்வு செய்யததால் தோல்வி அடைந்தது என குறிப்பிடும் ஆய்வை வாசித்துள்ளேன்.

ஸ்டிரீட் பீஸ்சை அறிவீர்களா? பெப்சிகோ மற்றும் யூனிலிவர் போன்ற நிறுவனங்கள் வழக்கமான சந்தை ஆய்வு முறைகளை சார்ந்திருக்கவில்லை. அவர்கள் ஸ்டிரீட்பீஸ் சேவையை நாடுகின்றனர். இதில் வாடிக்கையாளர்கள் தொடர்புடைய பிராண்ட்கள் அல்லது சேவைகளின் படங்கள் மற்றும் வீடியோக்களை கிளிக் செய்து கருத்து தெரிவிக்க பணம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் சந்தை போக்கை அறிகின்றன.

ரிஸ்க் அறிவது

ரிஸ்க் புரிந்து கொள்ளப்படுவது என்பதால் உளவியல் நோக்கிலானது. நம்மில் பலரும் ரிஸ்க் இருப்பது சாதகம் இல்லாதது என நினைக்கிறோம். ஆனால், ரிஸ்க் உள்ள வர்த்தகங்களின் வெற்றி இதற்கு நேர் எதிராக உள்ளது. ரிஸ்கை மீறி, ஒரு வர்த்தகத்தை ஆழமாக ஆய்வு செய்து, குறைகளை எப்படி சரி செய்வது என அறிவது சிறந்தது. ஒரு புதிய தொழில்நுட்பம் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது என்பதற்காகவே, ஆய்வு செய்து, அதன் பலன்களை அறியாமலே தொழில்முனைவோர் அவற்றை பயன்படுத்தக்கூடாது. இருப்பினும், ஒரு துறையை நன்கறியும் வரை முயற்சிப்பது நல்லது. .

இறுதியில்...

ஒரு தொழில்முனைவோராக துவக்கத்திலேயே ஏற்றுக்கொள்வது என்பது அறிவுசார்ந்து இருக்க வேண்டும். தொழில்முனைவோரின் குறுகிய பார்வையை சரி செய்து, வர்த்தகத்தை நிலையான அம்சங்களை கொண்டு நோக்குவது முக்கியம். புதிய போக்காக உருவாகும் சந்தையை பின் தொடர்ந்து செல்வதற்கு பதில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்ல திட்டத்தை வகுத்து சரியான வழிகாட்டியை நாடுவது வெற்றி சாத்தியங்களை அதிகமாக்கும்.

(பொறுப்பு துறப்பு: கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், ஆசிரிடரிடையவை. யுவர்ஸ்டோரி கருத்துக்களை பிரதிபலிப்பதாக பொருள் இல்லை.)

ஆங்கிலத்தில்: அஞ்சலி ஜெயின் / தமிழில்: சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL