வரலாற்று சிறப்புமிக்க தூர்தர்ஷனின் லோகோ விரைவில் புதிய வடிவில்...

0

இந்தியாவின் முதல் பொது ஒலிப்பரப்பு நியூ டெல்லியில் தூர்தர்ஷன் மூலம் செப்டம்பர் 15-ம் தேதி 1959 வருடம் துவங்கப்பட்டது. பிரசார் பாரதி (பொது ஒலிப்பரப்பு சேவை) கீழ் தூர்தர்ஷன் இயங்குகிறது. பரிட்சார்த்த முறையில் துவங்கப்பட்ட இந்த ஒலிப்பரப்பு, மெல்ல இந்தியாவின் மிகப்பெரிய ஊடகமாக வளர்ச்சி அடைந்தது. 

1965-ம் ஆண்டு முதலே தூர்தர்ஷன் தன்னுடைய தினசரி சேவையை அகில இந்திய ரேடியோவின் ஒரு பகுதியை தொடங்கியது, 1972-ல் தொலைக்காட்சி சேவை மும்பை மற்றும் அமிர்தசரஸ் மற்றும் 1975-ல் மேலும் ஏழு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தூர்தர்ஷனின் தொடக்கப் பாடல் மற்றும் லோகோ அந்த காலத்து முதலே மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. 

ஆனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க தூர்தர்ஷனின் லோகோ விரைவில் மாற்றப்பட்டு புதிய லோகோவுடன் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது. இக்கால இளைய தலைமுறையினருக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. 

’டிடி’ என்று எல்லாராலும் அறியப்பட்ட தூர்தர்ஷனின் அந்த லோகோவை வடிவமைத்தவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் முன்னாள் மாணவரான தேவசிஷ் பட்டாச்சார்யா. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் தன் நண்பர்கள் எட்டு பேருடன் இணைந்து அகமதாபாத் தூர்தர்ஷனில் ஒரு ப்ராஜக்டில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அவர் அந்த இரண்டு வளைவுகளை கொண்டு லோகோவை வடிவமைத்தார். தேவசிஷ் போல மற்ற மாணவர்களும் பல லோகோவை வடிவமைத்து அவர்களின் ஆசிரியரிடம் கொடுத்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடன் சென்ற இந்த டிசைன்களில் இருந்து தேவசிஷ் வடிவமைத்த லோகோ தேர்வானது.

”அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார் பட்டார்ச்சார்யா. 

அதே லோகோ டிசைனில் சில மாற்றங்கள் 80 மற்றும் 90-ம் ஆண்டுகளில் செய்யப்பட்டது. ஆனால் முதலில் வெளியான லோகோவின் டிசைனை மூலமாகக் கொண்டே இந்த மாற்றங்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் மாணவர்களால் செய்யப்பட்டது. அதே லோகோவை அனிமேஷன் வடிவில் கேமராவில் படம் பிடித்து, சுழல்வது போல வடிவமைத்தவர் ஆர்.எல்.மிஸ்திரி. இதை ‘டிடி ஐ’ என்று அழைத்தனர்.

”அது கண்கள் போல தெரிந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டது, ஆனால் அது கண்களை குறிப்பிடவில்லை. தொலைக்காட்சி என்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல கேட்கவும் என்பதால், அந்த இரு வளைவுகள் தகவல்களை பெற்று, வெளியிடுவதை குறிப்பது போல் ஆகும்,” என்று சத்வலேக்கர் விளக்கினார்.

தூர்தர்ஷனின் தொடக்க ட்யூனை இசையமைத்தவர்கள் பண்டிட் ரவி சங்கர் மற்றும் உஸ்தாத் அலி அகமது ஹுசைன் கான் ஆவார்கள். இது முதன்முதலில் ஏபர்ல் 1-ம் தேதி 1976 ஒலிப்பரப்பட்டது. 

தூர்தர்ஷன் 1975 வரை வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே இயங்கிவந்தது. பின்னர் தான் அது நாடெங்கிலும் ஒலிப்பரப்பானது. இன்னும் கொஞ்ச நாட்களில் புதிய வடிவில், புதிய லோகோவுடன் தூர்தர்ஷன் நேயர்களிடம் வந்தடையப்போகிறது. 

கட்டுரை: Think Change India