’பாஹுபலி’ என்ற பிரம்மாண்ட காவியம் இதோடு முடிவடையாது- இயக்குனர் ராஜமெளலி

1

இந்த ஆண்டு திரையுலகில் அதிகம் பேசப்பட்ட படம் பாஹுபலி மற்றும் அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தான். பாஹுபலி-2 இறுதி பாகம் பிரம்மாண்டமான படம் மட்டுமல்ல அதையும் தாண்டி அதன் பின் ஒரு வரலாறே உள்ளது என்று கூறும் ராஜமெளலி இதோடு இது முடிவு பெறாது என்கிறார். 

பாஹுபலி படம் புதிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை ஏற்படுத்தியதோடு பார்வையாளர்களை அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களைப் கதைப்புத்தகங்கள், கார்டூன்கள் என்று பல வடிவில் பார்க்க வழி செய்யப்போகிறது.

“பாஹுபலியை நம் நடிகர்கள் அவர்களின் கதாப்பாத்திரத்தை புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. பாஹுபலி மற்றும் பல்லாலதேவா ஆகிய எதிராளிகள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் திரைப்படத்தில் பார்த்தோம். பாஹுபலி உலகத்தில் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் நிறைய உள்ளது,” 

என்று IANS பேட்டியில் ராஜமெளலி கூறியுள்ளார். 

குழந்தைகளைப் போல பெரியவர்களும் பாஹுபலி உலகத்தை பிரமித்து பார்க்கின்றனர். இது இப்படியே முடியக்கூடாது என்று நினைக்கிறேன். அதற்காக நான் பிரார்த்திக்கிறேன், என்றார் மேலும்.

பாஹுபலி திரைப்படத்தில் சொல்லமுடியாத பல கதைகளை மக்களிடம் கொண்டு செல்ல எப்படி எந்த ஊடகத்தின் வழியே செய்யலாம் என யோசித்தார் ராஜமெளலி.

“பாஹுபலியில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பின் ஒரு கதை உள்ளது. அவற்றை படத்தில் சேர்க்கமுடியவில்லை. சில சீன்கள் அழுத்தம் வாய்ந்தவை, ஆனால் நேரக் கட்டுப்பாட்டால் அதை திரைப்படத்தில் காட்ட இயலவில்லை. உதாரணத்துக்கு சிவகாமியின் கதையிலுள்ள அழுத்தம். இதையே ஒரு நாவலாக கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?,” என்று யோசித்தோம் என்றார்.

சிவகாமியின் கதை மூன்று பகுதி நாவலாக வரவுள்ளது. ‘தி ரைஸ் ஆப் சிவகாமி’ The Rise of Sivagami என்ற பெயரில் ஆனந்த் நீலகண்டன் முதல் புத்தகமாக வெளியிடுகிறார். 

அதே போல் பாஹுபலி கதையை அனிமேஷன் தொடராக உருவாக்குவது பற்றி கூறிய ராஜமெளலி, ‘பாஹுபலி- தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்’ Baahubali: The Lost Legends என்ற பெயரில் வரப்போகிறது என்று உற்சாகமாக தெரிவித்தார். 

“டிஸ்னி படங்களின் தீவிர ரசிகன் நான். 3டி படங்களை கண்டு ஆச்சர்யப்பட்ட நான் அதை மனதில் கொண்டே பாஹுபலியை உருவாக்கினேன். உலக அளவில் இப்படம் சென்றடையவில்லை என்றாலும் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி,” என்றார்.

கிராபிக் இந்தியா மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ உடன் இணைந்து இந்த அனிமேஷன் தொடரை கொண்டுவர உள்ளார். இந்த அனிமேஷன் படத்தையும் அவரே இயக்குவாரா எனக் கேட்டபோது,

“பாஹுபலி திரைபடத்தை எடுக்கவே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் இதற்கும் அதிக நேரம் தேவைப்படும் என்பதால் நான் அதை இயக்கமாட்டேன்,” என்றார்.

பாஹுபலி-2 இன் வெற்றியை பற்றி கேட்டபோது,

“உண்மையில் நாங்கள் இத்தகைய வெற்றியை எதிர்ப்பார்த்தோம். இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். அதன் பலனை இப்போது காணும் போது அற்புதமாக உணர்கிறேன். இந்த வெற்றி நிஜம் என்று நம்பும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

இதற்கு அடுத்து என்ன?

“என் நீண்டகால கனவே மகாபாரதக் கதையை படமாக்குவது ஆகும். அதை எடுக்கத் தேவையான பிரம்மாண்டத்தின் அளவை நினைக்கியில் ஒருவரின் கற்பனையை தாண்டி உள்ளது. ஆனால் இது பல நாட்களாக என் மனதில் இருக்கிறது. எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.”

மலையாள படங்களான சங்கமித்ரா மற்றும் மோஹன்லாலின் ராந்தமூழம் போன்ற படங்கள் பாஹுபலி பாணியில் உள்ளதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு,

“பாஹுபலி அதற்கான மார்கெட்டை காட்டியுள்ளது. பலவிதமான படங்கள் உள்ளது. ஒரு அற்புதமான கதையுடன் இயக்குனரின் இலக்கை உணர்த்தும் படங்களும் வரும், அதே சமயம், மார்கெட் இருக்கும் மற்றவகையான படங்களும் வரும்,” என்றார் ராஜமெளலி. 


Related Stories

Stories by YS TEAM TAMIL