பணிபுரியும் தாய்மார்களுக்கு நிம்மதியை தரும் குழந்தைகள் காப்பகம் 'ஹாப்பி மைன்ட்ஸ்'

0

எழுபதுக்கும் மேற்பட்ட இளம் தாய்மார்கள் ஹாப்பி மைன்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனர் சோனியா சுக் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளனர்.

அவரது ஹாப்பி மைன்ட்ஸ் என்ற பகல் நேர காப்பகம் இந்த இளம் தாய்மார்களின் குழந்தைகளை திறம்பட பேணுவதால் அலுவல்களை இலகுவாக மேற்கொள்ள வழி வகுக்கிறது.

"இவர்களின் கருத்துகளை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒரு ஆசிரியராக இருந்தாலும் இவர்களிடம் ஒவ்வொரு நாளும் நானும் கற்றுக் கொள்கிறேன். பெற்றோர்களுடனான பேச்சுவார்த்தைகளும் எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது" என்கிறார் சோனியா.

ஜே பி மோர்கன் என்ற நிறுவனத்தில் இணை துணை தலைவராக, 2011 ஆம் ஆண்டு சேர்ந்த சோனியா, மார்ச் மாதம் 2012 ஆம் ஆண்டே அந்த வேலையை விட்டார். அப்பொழுதே ஹாப்பி மைன்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவுவதை பற்றி சிந்திக்க தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் 2012 ஆம் ஆண்டு ஆறு நபர்களுடன் "ஹாப்பி மைன்ட்ஸ்" (Happy Minds) தொடங்கியது.

லக்னௌ பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் சோனியா . அவர் பழமைவாத சிந்தனையுடைய பின்னணியில் தான் வளர்ந்தார். அவருடைய தந்தை வங்கியில் பணி புரிந்தவர். ஆக்ராவை பூர்வீகமாக கொண்ட அவர், திருமணதிற்கு பின் அமெரிக்காவில் குடி புகுந்தார். அங்கு சில காலம் பணியாற்றினார். இந்தியா திரும்பும் சந்தர்ப்பம் வந்த பொழுது, தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுந்தது.

"பெற்றோர்களின் ஆதரவு இருந்த போதும், துணைக்கு வேலையாள் இருந்த போதிலும், நெருடலாகவே இருந்தது. நம்பத்தகுந்த பகல் நேர காப்பகம் இல்லாத சூழலில் இது தற்காலிக ஏற்பாடு தான் என்று உணர்ந்தேன்."

அமெரிக்காவில் பகல் நேர காப்பகம் என்பது ஒழுங்கமைக்கப்பட்டத் துறை, அவ்வாறு இந்தியாவில் இல்லாதது ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது.

இது பற்றிய ஆராய்ச்சியிலும், சில ஆன்லைன் சான்றிதழ் பெரும் முயற்சியிலும் ஈடுபட்டார், பிற நாடுகளில் உள்ள செயல் முறையை அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. "ஒவ்வொரு செயல்பாடும் மிகவும் தொழில் நேர்த்தியாக இருந்ததை அறிந்து கொண்டேன், இந்த செயல்பாட்டை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன்"என்று கூறும் சோனியா ஆறு மாத கால முயற்சிக்குப்பின் ஆகஸ்ட் 2012 இல் ஹாப்பி மைன்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஒரு குடையின் கீழ்

ஹாப்பி மைன்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கல்வி மற்றும் பகல் நேர காப்பகம் என்று செயல்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளைத் தவிர வருடத்தில் வெறும் பதினான்கு நாட்களே விடுமுறை கொண்ட அரிதான காப்பகம் என்ற பெயர் பெற்றது.

குழந்தைகளை பேணுவதற்கென ப்ரேத்யேக அமைப்பை கொண்ட ஹாப்பி மைன்ட்ஸ், மூன்று தனித்துவமான பிரிவுகளை கொண்டது - குழந்தைகள் மண்டலம் (நான்கு முதல் ஒன்றரை வயது) , மழலையர் மண்டலம் (நான்கரை வயது உட்பட்டு), எட்டு வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளிக்கு பிறகு பார்த்துக் கொள்ளும் பிரிவு. இரவு 8.30 மணி வரை இங்கு குழந்தைகளை பார்த்து கொள்கிறார்கள். தற்பொழுது நூற்றியைம்பது குழந்தைகள் வரை இங்கு வருகின்றனர்.

"குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த வரையறுக்கப்பட்ட மாதிரியையே பின்பற்றுகிறோம். ஒவ்வொரு நாளும் கற்றுதலுக்கான சூழலே இங்கு உள்ளது. சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான கற்றுதலை இங்கு பெருமளவில் வலியுறுத்துகிறோம்"என்கிறார் சோனியா.

பெற்றோர்களுடன் தான் அடிக்கடி உரையாடுவதாக கூறுகிறார் சோனியா. இது அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க உதவும்.

சோனியாவின் ஐந்து வயது மகள் தான் ஹாப்பி மைன்ட்ஸ் காப்பகத்தின் முதல் குழந்தை. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இரவு நேரத்திலும் காப்பகம் செயல் பட திட்டம் வகுத்துள்ளதாக கூறுகிறார்.

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடே எங்களின் நோக்கம். பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்களிடமும் தொடர் உரையாடலின் மூலமாக இதை சாத்தியப்படுதுகிறோம். இந்த முறை மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது என்கிறார் சோனியா.

இணையதள் முகவரி: Happy Minds International

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Stories by Sandhya Raju