'காலா' - தி செலிபரேஷன்!

இன்று காலா திரைப்படம் வெளியாகி உள்ளது. அதை ஒரு திருவிழா போல கொண்டாட ரஜினி ரசிகர்கள் தொடங்கி விட்டனர். அதைத் தாண்டி வர்த்தகர்களும், ரஜினி மீதான தங்களின் காதலை காண்பிக்க பல விளம்பர யுக்திகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளனர். 

0

கபாலி படத்தின் போது விமானத்தில் விளம்பரம் செய்தது பேசு பொருளானது. இன்றைய தினம் காலா திரைப்படம் உலகளவில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களோடு சேர்ந்து சாக்லெட் நிறுவனம் பெயிண்ட் நிறுவனம் என பல்வேறு கம்பெனிகள் காலா திரைப்பட வெளியீட்டுக் கொண்டாடத்தில் பங்கேற்று வருகின்றன.

சென்னை ஆர்.கே. சாலையில் உள்ளது ’கிளாரியன் நட்சத்திர ஹோட்டல்’ (முன்னாள் ப்ரெசிடெண்ட் ஹோட்டல்), ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலா படம் பார்த்து விட்டு டிக்கெட்டோடு ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவோருக்கு 50 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த கிளாரியன் ஹோட்டலும் இப்படி காலா கொண்டாடத்தில் பங்கெடுத்துள்ளது. ஜூன் 20 ந் தேதி வரை இந்தத் தள்ளுபடி அமலில் இருக்கும். 

வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் காலா திரைப்பட இடைவேளையின் போது விளம்பரம் ஒளிபரப்பவும் ஹோட்டல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அஜ்மல் அபு கிளாரியன் ஹோட்டல் உரிமையாளர் மட்டுமல்ல. ரஜினி ரசிகரும் கூட.

இளம் நபர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் சி.கே.பேக்கரி. காலா படம் வெளியீட்டை முன்னிட்டு 50 கிலோ எடையுள்ள கேக்கை தயாரித்துள்ளது. 

காலா திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, கோயம்பேடு ரூபிணி திரையரங்கில் அதிகாலை 3 மணியளவில் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியது, சி.கே.பேக்கரி.
காலா கேக்
காலா கேக்

காலா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற மதுரையில் அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காலா’ வெற்றிகரமாக ஓட வேண்டும் என ரஜினி ரசிகர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சரவணன், ஜெயமணி ஆகியோர் மண் சோறு சாப்பிட்டனர். 

பட உதவி: புதிய தலைமுறை
பட உதவி: புதிய தலைமுறை
இதற்காக ஒரு வாரத்திற்கு முன்னரே காப்புக்கட்டி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தை வரவேற்கும் விதமாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

திவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற காலிங் மற்றும் ரோமிங் பயன்கள் வழங்கக்கூடிய பிரத்யேக 'காலா' பிராண்டு கொண்ட சிம் பவுச் மற்றும் ப்ரீபெய்டு பேக்குகளையும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
பட உதவி: ஹிந்து பிசினஸ்லைன்
பட உதவி: ஹிந்து பிசினஸ்லைன்

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி காலா வெளியாக உள்ளது. அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் அறிவிப்புக்குப் பின் வரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புகள் மத்தியிலும் காலாவை வெற்றிப் படமாக்க ரசிகர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். எத்தனை திருவிழாக்கள் வந்தாலும் ரஜினி பட வெளியீட்டை ஒரு திருவிழா போலவே அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

Stories by Jessica