சென்னை ஈசிஆர்-ல் நடைப்பெற்ற  கழிவுகளில்லா பசுமைத் திருமணம் 

0

தற்போதைய சூழலில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மக்களும் அரசாங்கமும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழிலில் மற்றும் அன்றாட வாழக்கையில் இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பை இணைப்பதோடு இப்பொழுது திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் இயற்கை முறையை பின்பற்றுகின்றனர். 

சென்னை ஈசிஆரி-ல் விக்னேஷ் மற்றும் வீணா தம்பதியனர் கழிவுகள் இல்லா திருமணத்தை நடத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் திருமணம் என்பது பெரும் கோலாகலமான திருமணமாக நடைப்பெறும். இந்த திருமண நிகழ்வுகளில் விருந்து, அலங்காரம், பரிசுகள் என பலவற்றை பிளாஸ்டிக் மற்றும் இயற்கையற்ற பல பொருட்கள் பயன்படுத்தப்படும். இறுதியில் நிகழ்வு முடிந்த பிறகு மிஞ்சுவது பூமிக்கு பாரமான மக்கா குப்பைகள் தான். அதனால் குப்பைகள் சேராதவாறு கழிவுகள் இல்லா திருமணத்தை செய்ய இந்த தம்பதியனர் முடிவு செய்தனர். இதனால் கொண்டாட்டத்தில் எந்தவித மாறுதலும் பாதிப்பும் ஏற்படவில்லை.

பல நாட்கள் நடக்கும் திருமணங்களில் இருந்து மாறுபட்டு தேவையற்ற கழிவுகள் மற்றும் செலவினை குறைக்க திருமண நிகழ்வை ஒரே நாளுடன் நிறுத்திக்கொண்டனர்.

கழிவில்லா திருமணத்தின் முக்கிய மாற்றங்கள்...

பிளாஸ்டிக் இல்லா விருந்து

தங்களது கல்யாண விருந்தில் பேப்பர் பிளேட், பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக வாழை இல்லை மற்றும் வெள்ளிக் குவளைகளை பயன்படுத்தினர். விருந்தில் பயன்படுத்திய வாழை இலை மற்றும் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றிவிட்டனர்.

அலங்காரம் மற்றும் இருக்கை

மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் ஆர்கானிக் அலங்கார பொருட்கள் மற்றும் பூக்கள் மட்டுமே இட அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. உணவு கழிவுகளுடன் இதுவும் இறுதியாக உரமாக மாற, பயன்படுத்திய பூக்களையும் தோட்ட உரமாக மாற்றினர். விருந்தினர்கள் இருக்கைக்கு பிளாஸ்டிக் நாற்காலிக்கு பதிலாக பஞ்சு மெத்தைகளை தயார் செய்திருந்தனர் இந்த தம்பதியர்கள்.

பரிசுகள்

விருந்தினர்களிடம் பரிசு பொருட்களுக்கு பதிலாக சூற்றுச்சூழல் அமைப்பிற்கு தானம் அளிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தனர். தாம்பூலம் பரிசுக்கு, ஊரகக் கடையில் இருந்து இயற்கை காபி தூள் மற்றும் விதை காகிதத்தை பரிசாக தந்துள்ளனர். நன்றி உரை எழுதிய விதை காகிதத்தை நட்டு வைத்தால் செடிகள் முளைக்கும்.

உணவு மற்றும் ஆடம்பர செலவு குறைப்பு

விருந்துக்கு பிறகு எஞ்சிய உணவுகளை வீணாக்காமல், சமூக அமைப்புடன் இணைந்து இல்லாதோருக்கு வழங்கியுள்ளனர். எஞ்சிய உணவோடு வெளியில் வழங்குவதற்காக தனியாகவும் சமைத்துள்ளனர். மேலும் வீணா தனது திருமணதிற்கு என விலை உயர்ந்த ஆடையை விரும்பாமல் தனது பாட்டியின் திருமண புடவை மற்றும் நகைகளையே தன் திருமணத்திற்கு அணிந்திருந்தார். 

தகவல் மற்றும் பட உதவி: பெட்டர் இந்தியா

Related Stories

Stories by Mahmoodha Nowshin