ஆரோக்கியத்திற்கான ஸ்நாக்ஸ்: பெண் தொழில்முனைவரின் வெற்றி

0

மக்களுடைய மிகப்பெரிய அக்கறைகளில் ஒன்று நல்ல சுகாதாரமான சுவையான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதாக இருக்கிறது. நாம் அனைவருக்கும் சாப்பாட்டு நேரத்திற்கு இடையில் வரும் பசி ஒரு சவால்தான். பத்தாண்டுகளாக, எடையை குறைக்கும் முயற்சியில், தினமும் உடல்நலப் பிரச்சனைகளுடன் சமன்படுத்தப்படாத உணவுபழக்கத்துடன் போராடி வந்த ஜாஸ்மின் கவுர், தன் வாழ்க்கையில் ஒரு சரியான உணவு மாற்றத்திற்கான நேரம் தேவை என உணர்ந்தார். இதுவே "தி கிரீன் ஸ்நாக் கம்பெனி" (The Green Snack Co) நிறுவனரானதுக்கு காரணம் ஆகியது. நல்ல ஒரு வாழ்க்கை முறை மாற்றத்திற்கு இது வழிவகுத்தது.

சுவையான, மொறுமொறுப்பான, சத்தான ஸ்நாக்ஸ் தேவையை மனதில் கொண்டு ஜாஸ்மின் "தி க்ரீன் ஸ்நாக் கம்பெனியை தொடங்கினார். அதுவரை “அப்படியொரு ஸ்நாக் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை” என்கிறார் ஜாஸ்மின்.

விரைவிலேயே, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதிய தொழிலைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார். சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கும் ஸ்நாக் பற்றிய ஆய்வில் இறங்கினார். சுருள் இலை கோஸில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உலகம் முழுவதும் இருப்பதை ஜாஸ்மின் கண்டறிந்தார்.

சுருள் இலை கோஸை வைத்து உணவுப்பொருள் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்று பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். “ஸ்நாக் தயாரிக்கும் தொழிலுக்குள் வரும்போது இந்திய நுகர்வோரின் சுவை பற்றிய பொதுவான அபிப்ராயம் பற்றி சந்தேகம் இருந்தது” என்கிறார் ஜாஸ்மின்.

ஆரோக்கியமான ஸ்நாக் உருவாக்கம்

எனினும், ஜாஸ்மினுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவர் அறிமுகப்படுத்திய ஸ்நாக் நுகர்வோரிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. சுருள் இலை கோஸ் பற்றி எல்லோரும் தெரிந்துவைத்திருந்தார்கள். இப்படியொரு ஸ்நாக் இந்திய சந்தையில் வருவதை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். “அப்படி இருந்தும் நாங்கள் அதை விற்காமல், சாம்பிளை தான் தந்தோம். அதை சாப்பிட்ட மக்கள் எங்களிடம் மீண்டும் கேட்டு வந்தார்கள். அப்போதுதான் அது பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்” என்று தன் அனுபவத்தைப் பகிர்கிறார் ஜாஸ்மின்.

த கிரீன் ஸ்நாக் கம்பெனி, மூன்று வகையான சுருள் இலை கோஸ் சிப்ஸ்களுடன் (kale chips) தொடங்கப்பட்டது. அவை மும்பை நகரின் வெவ்வேறுவிதமான உணவுக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இது ஒரு திருப்புமுனையாக அமைந்ததாக நினைவுகூர்கிறார் ஜாஸ்மின். சில்லறை விற்பனையாளர்கள், கொர்மே புட் ஸ்டோர்ஸ், ஆன்லைன் உணவு இணையதளங்கள், உணவு விமர்சகர்கள், வலைப்பூ பதிவர்களிடம் உடனடி கவனத்தை எங்கள் புதிய ஸ்நாக்ஸ் பெற்றது.

“எங்களுடைய ஸ்நாக்கை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய தருணங்களில் ஒன்றைப் பெற்றோம். தனிச்சுவை உணவுகளின் மெக்கா என்று அழைக்கப்படும் ஃபுட்ஹால் ஸ்டோரில் இருந்து எங்களுடைய ஸ்நாக்கை விற்பனை செய்வதாக அழைப்பு வந்தது. எங்களுடைய வர்த்தகத்தில் மறக்கமுடியா நிகழ்வாக அது அமைந்தது” என்று சுட்டிக்காட்டுகிறார் ஜாஸ்மின்.

செயல்முறை

தி கிரீன் ஸ்நாக் கம்பெனி மற்றும் சுருள் இலை கோஸ் சிப்ஸின் குழுவினர், ஆரோக்கிய உணவு மற்றும் சத்து என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு மேலும் புதுமையை சேர்த்து, மறுபரிசீலனை செய்து, மறுகட்டமைப்பு செய்ய விரும்பினார்கள். விதவிதமான சூப்பர் உணவுகளை சேர்த்து சத்தான, ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸை தயாரித்தல் என்பதே தி கிரீன் ஸ்நாக் கம்பெனியின் தத்துவமாக இருந்ததாகச் சொல்கிறார் ஜாஸ்மின். அதுதான் உண்மையில் நமக்கு சிறந்ததாக அமையும்.

செயற்கையான இனிப்புகளை, சேர்க்கைகளை, உப்புகளைச் சேர்க்காமல், அவர்கள் புதிய இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு சிப்ஸ்களை தயாரிக்கிறார்கள். சிப்ஸ்களை தயாரிப்பதற்கு அமெரிக்காவில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளனர். சர்வதேச அளவில் என்ன செயல்முறையைப் பயன்படுத்துகிறார்களோ அதையேதான் இவர்களும் பின்பற்றுகிறார்கள். இன்று கம்பெனி 5 பேர் அடங்கிய குழுவுடன் செயல்படுகிறது, ஆனால் ஆரம்பத்தில் ஜாஸ்மின் மட்டுமே இருந்தார். “என்னுடைய கணவர் ஆரம்ப பயணம் முதல் என் கூடவே இருக்கிறார்” என்கிறார்.

தி கிரீன் ஸ்நாக் கம்பெனி ஊழியர்களுக்கு ஆரம்பக்கட்ட புதிய தொழில் முயற்சிகளில் வேலை பார்த்த அனுபவம் இருந்தது. ஒரு பிராண்டை உருவாக்குவதில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருந்தார்கள். ஆரோக்கியமான ஸநாக்ஸ் சந்தைக்கு நாடு முழுவதும் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். .

சவால்கள்

எந்தவொரு தொடக்கமும் சவால்கள் இல்லாமல் இருக்கமுடியாது. ஜாஸ்மின் குறிப்பிடுவதுபோல, சவால்களில் மிகப்பெரியது திறமையான பணியாளர்கள் பணியில் இருக்கவேண்டும் என்பதுதான். ஒரே நோக்கத்துடன், தொழில் பற்றிய பேரார்வத்துடன் புதிய தொழில் முயற்சியின் சூழலுடன் பொருந்தி உழைப்பவர்களாக இருக்கவேண்டும்.

“இன்னொன்று, வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் கற்பிக்கவேண்டும். அவர்களது சமகால நம்பிக்கைகளை புரிந்துகொண்டும், ஆரோக்கியம் பற்றிய எண்ணங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். எங்களுடைய பயணத்தில் எண்ணற்ற வாடிக்கையாளர்களைப் பார்த்திருக்கிறோம். உண்மையில் அவர்களுக்கு எந்த உணவு நல்லது என்பது பற்றிய தவறான எண்ணங்களுடன் இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு எதிரான கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று அக்கறையுடன் பேசுகிறார் ஜாஸ்மின்.

சந்தை

சில மாதங்களுக்கு முன்பு தி கிரீன் ஸ்நாக் கம்பெனி அறிமுகப்படுத்திய காலே சிப்ஸ் (Kale Chips) தற்போது மும்பை மற்றும் புனேயில் உள்ள 40 சில்லறை மற்றும் கொர்மே ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, 10 கொர்மே உணவு வலைதளங்கள், கஃபேக்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். மூன்று மாதங்களில் மூன்று மடங்கு விற்பனை பெருகியுள்ளது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு மாதமும் 15 புதிய விற்பனை சென்டர்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்றைய நுகர்வோர் பொதுவாக உடல் ஃபிட்னெஸ் பற்றி மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். யோகா பார்ஸ் மற்றும் வேலன்சியா டிரிங்ஸ் (yoga bars and valencia drinks) போன்ற பல உடல் ஆரோக்கியத்திற்கான ஸ்நாக்ஸ்கள் கிடைக்கின்றன. ஒரு அறிக்கையின்படி (பிஸினஸ் ஸ்டாண்டர்டு) உடல் ஆரோக்கிய உணவுத் தொழில்துறை 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டுள்ளது. அதில் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் ஆகும்.

“உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்தவரை தற்காப்புக்கும் குணப்படுத்தும் அணுகுமுறைக்கும் இடையில் உள்ளது. விரிவடைந்துகொண்டிருக்கும் சந்தையில் உடல் நலத்திற்கு சத்தான, மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள்தான் முக்கியமான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று எதிர்காலத்தை கணித்துவைத்திருக்கிறார் ஜாஸ்மின். சர்வதேச அளவில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சந்தை மிகப்பெரிய வாய்ப்புகள், பிராண்டுகளுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸை தயாரிப்பதை தி கிரீன் ஸ்நாக் கம்பெனி பிரதானமாக நினைக்கிறது. இக்குழு புதிய சுவைகளுடன் கூடிய ஹெல்த்தி ஸ்நாக்ஸை அறிமுகப்படுத்தும் திட்டம் வைத்திருக்கிறது. மேலும், தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் உள்ளது. மெட்ரோ மற்றும் சிறிய மெட்ரோ நகரங்களில் எல்லா முக்கியமான உணவு சில்லறை விற்பனை கடைகளிலும் கிரின் ஸ்நாக்ஸ் கிடைக்கவேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்கால இலக்கு.

“வலிமையான பணியாளர் குழுவை தொடர்ந்து உருவாக்கும் திட்டம், பின்புல ஆதரவு, இந்த உதவியுடன் அடையாத மற்ற சந்தைகளை நோக்கி நகர்தல், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் உகந்த ஸ்நாக்ஸ்களை அறிமுகப்படுத்தி சந்தையில் அதிரடியாக நுழைவது மற்றும் கம்பெனியின் உத்திகளை வளர்ப்பது என திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறோம்” என தொழில் வளர்ச்சிக் கதையைச் சொல்லிமுடிக்கிறார் ஜாஸ்மின்.

இணையதள முகவரி: TheGreenSnackCo