வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான தொழில்முனை நிறுவனங்களுக்கு இலவச இணைய ஹாட்ஸ்பாட்!

0

சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று பல்வேறு இடங்களில் தங்கள் அலுவலகங்களை திறந்து இலவச இணைய சேவையை தொழில்முனை நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.

இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் தொழில்முனை நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு இந்த வசதியை ஏற்று செயல்படும் விதமாக, சென்னையில் உள்ள பதினான்கு நிறுவன பட்டியலை சென்னை ஸ்டார்ட்அப் சென்டர் வெளியுட்டுள்ளது.

அது வெளியுட்டுள்ள குறிப்பில் :

"உங்கள் பகுதியில் இணைய மற்றும் மின்சார இணைப்பு இல்லையென்றால், உங்கள் வசதிக்கேற்ப இந்த பதினான்கு நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு வாரம் செயல்பட்டுக் கொள்ளலாம். தொழில்முன்முனை நிறுவனங்களுக்கு நேரம் இன்றியமையாதது என்பதை நாங்கள் அறிந்துள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."

இந்த சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் முகவரிகளுக்கு:

List of Open Workspaces in Chennai

"இந்த தகவலை இயன்ற வரை பகிருங்கள். இந்த சேவை தேவைப்படும் நிறுவனங்கள் ஆன்லைன் வசதி இல்லாமல் இருக்கலாம் ஆகையால் இந்த தகவலை வாட்ஸ்அப் மூலமாகவும் ஆஃப்லைன் மூலமாகவும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்" என்றார் விஜய்

தமிழில் : சந்தியா ராஜு