புதிய எண்ணங்களுடன் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான போட்டி!

0

தொழில் முனைவில் ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு இந்த போட்டி, வாய்ப்புகளை தெரிந்து கொள்ள உதவுகிறது .

மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் 'நேடிவ் லீட்' என்ற அமைப்பு இந்திய தொழில் கூட்டமைப்பான 'சிஐஐ' மற்றும் 'யங் இந்தியன்ஸ்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து 'ஒளிமயம்' என்ற பெயரில் தொழில் முனைவுக்கான போட்டி ஒன்றை சேலத்தில் நடத்தவுள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் துவக்கநிலையில் இருக்கும் தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழில் விருப்பங்களை வெளிக்காட்டிக் கொள்ளவும், தங்களது கனவு திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி கொள்ளும் நோக்கில் இந்த ஒளிமயம் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவு இன்று அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை. ஒளிமயம் நிகழ்ச்சிக்கான இதன் ஒருங்கிணைப்பாளர்கள், புதுவிதமான பிசினஸ் பிளான்களை கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் துவக்க நிலையில் இருக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு போதிய உதவிகளை செய்து கொடுப்பதிலும், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி உதவிகள் போன்ற திட்டங்களுடன் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நீங்கள் கல்லூரி மாணவராக இருந்து, உங்கள் எதிர்காலத்தை கொண்டுசெல்ல நல்லதொரு பிசினஸ் திட்டத்துடன் இருந்தால் நீங்கள் நிச்சயம் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அது போன்றே, உங்களிடம் நல்லதொரு பிசினஸ் ப்ளான் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த இப்போது தான் ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளீர்கள், ஆனால் இன்னும் அதனை விரிவுபடுத்த வாய்ப்புகளை தேடிகொண்டிருக்கிறீர்கள் எனில் நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கமே, புதுமையான சிந்தனைகள் கொண்ட சிறந்த தொழில் முனைவோரை கண்டறிந்து அவர்களுக்கு தங்கள் முயற்சியை முன்னெடுத்து செல்லுவதற்கான வாய்ப்புகளை சுட்டி காட்டுவதுடன் முதலீட்டாளர்களை பற்றிய விபரங்களை அளித்து, இரு தரப்பினரையும் ஒருங்கிணைக்க வைப்பது தான்.

மாணவர்களுக்கான போட்டியை நடத்துவதன் மூலம் இவ்வமைப்பு, புதுமையான சிந்தனைகள் மற்றும் தொழில் முனைவுகளுக்கான அனுபவங்களை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதுடன், அவர்கள் சிந்தனைகளை அங்கீகரித்து, கெளரவப்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தில் தொழில் முனைவுக்கு தகுந்த சூழலை மேம்படுத்தி கொள்ளவும் முயன்று வருகிறது.

விண்ணப்பிக்கும் முறைகள்

  • கல்லூரி மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லூரியின் தொழில் முனைவோர் வளர்ச்சிக் குழு வழியாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் த்ங்கள் பிசினஸ் பிளானை ஆன்லைனில் 20 பிப்ரவரி 2016 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 15 குழுக்கள் விபரம் ஆன்லைனில் 23 பிப்ரவரி 2016 அன்று வெளியிடப்படும்
  • தொடர்ந்து ஆரம்பநிலை பிரசண்டேசன் 26 பிப்ரவரி 2016 அன்று காலையும், அதில் தேர்வு செய்யப்பட்டு முதல் 5 குழுக்களின் இறுதி பிரசண்டேசன் அன்று மதியத்திற்கு பின்னும் நடைபெறும்.
  • வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசளிப்பு 27 பிப்ரவரி 2016 அன்று நடைபெறும்

கட்டணங்கள்

  • இந்திய தொழில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 1500 ரூபாயும், பிற கல்லூரி மாணவர்கள் 2000 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • மாணவர்கள் அல்லாதவர்கள் அல்லது துவக்க நிலை கம்பெனிகள் ரூபாய் 2000 நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும் .

தமிழ் யுவர்ஸ்டோரி இந்த நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னராக உள்ளது.

மேலும் விபரங்களுக்கு OzhiMayam அல்லது 9952401116 ,9952401113, 8438247485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்