ஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்!    

5

'ஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் புரோகிராம்' [Startup Leadership Program (SLP)], ஸ்டார்ட்-அப் சி.இ.ஓ ஆக விரும்பும் திறமையான நிறுவனர்கள், தலைவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான சர்வதேச தரத்தில் பயிற்சியோடு கூடிய சிறப்பு உலகளாவிய புரோகிராம் ஆகும். 

இது 2006 ஆம் ஆண்டு பாஸ்டனில் ஏழு பங்கேற்பாளர்களோடு தொடங்கியது. தற்போது 13 நாடுகளையும் 28 நகரங்களையும் சென்றடைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நகரிலிருந்தும் 15-25 பங்கேற்பாளர்கள் இணைகிறார்கள். எஸ்.எல்.பி தற்போது வரை 1600 ஸ்டார்ட்-அப்களை தொடங்கியிருக்கிறது. மேலும், ஐநூறு மில்லியன் டாலர் நிதியும் திரட்டியிருக்கிறது.

எஸ்.எல்.பி புரொகிராம், ஸ்டார்ட்-அப் சூழலில் இருக்கும் தொழில்முனைவோர் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை உண்டாக்கித் தருகிறது. பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்-அப்களை தொடங்கும் தொழில்முனைவோர், இந்த பாட்ச் நீடிக்கும் ஆறு மாத காலத்தில் பல முறை ஒன்று கூடி, கலந்தாலோசிக்கின்றனர். 

எஸ்.எல்.பி கூட்டங்கள் சக-தொழில்முனைவோரின் அனுபவத்தினாலும், அவர்களுடைய கருத்துக்களினாலும், கேஸ் ஸ்டடிக்களாலும் தங்களுடைய யோசனைகளுள் ஆழமாக பயணிக்க தொழில்முனைவோருக்கு உதவுகிறது. இதன் இறுதி நாளில் பங்கேற்பாளர்கள், முதலீட்டாளர்களின் குழுவின் முன் நின்று தங்களுடைய ஸ்டார்ட்-அப் ஐடியாக்களை விவரிக்கிறார்கள்.

சென்னையில் எஸ்.எல்.பி பேட்ச் கடந்த ஆறு வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 2017-2018 பேட்ச்சில் 22 ஸ்டார்ட்-அப்கள் இருந்தன. இறுதி பட்டமளிப்பு நிகழ்வு சென்னையில் இருக்கும் ஆரஞ்ச்ஸ்கேப் டெக்னாலஜி அலுவலகத்தில் ஏப்ரல் 21, 2018 அன்று நடந்தது. 

‘ஆரம்ப்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு பெரும் வெற்றி பெற்றது. ஸோஹோ, ஃபாக்ஸ் மண்டல், மெட்ராஸ் கரி கப், ஆரஞ்ச்ஸ்கேப், PickMySlot.com, ஆஃப்ரோடு ஸ்போர்ட்ஸ், தட் மெட்ராஸ்காரன், ப்ரிண்ட்ரோவ், சாண்ட்விச் ஸ்கொயர், மாஸ்கப், சாய்காந்த், ஜி.எம்.டி. ஜுரு, முத்ரா மற்றும் பீ கைண்ட் ஆகியோர் ஆரம்ப்-ன் பார்ட்னர்களாக பங்கு வகித்தனர்.

இருபத்திரண்டு ஸ்டார்ட்-அப்கள் இந்தாண்டு எஸ்.எல்.பியின் மாணவர்களாக பட்டம் பெற்றனர். இந்த தினம் கற்றலும், கொண்டாட்டமுமாய் இருந்தது என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். 

இந்த வருட பேட்ச்சின் உறுப்பினர்களாய் இருந்த ஸ்டார்ட்-அப்கள் - எம்.சியின் லஞ்ச்பாக்ஸ், பீகைண்ட், சொல்லு, மை ஹார்வெஸ்ட், டோர்னமெண்ட் ஓஎஸ், போங்கோஸ்கொயர், ஃபர்னிச்சர் மேஜிக், ஹெல்த்தி ஐஓ, க்ளிக்கிட் (KLICKIT), மெக்மவுண்ட், ஓய் பெட்ஸ், மாஸ்கப், ரீகா, ஜுரு, கன்யா ஹெல்த்தி ஆயில்ஸ், தி எஞ்சினியர்ஸ் பிரியாணி, முத்ரா ஸ்டாம்ப்ஸ், ப்ரிண்ட்ரோவ், டெண்ட் அன் ட்ரெக், PickMySlot.com, ஸ்டூடண்ட்ஃபோகஸ் மற்றும் லேசர்மைண்ட்ஸ். சிறப்பான ஸ்டார்ட்-அப்களை கட்டமைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் தினசரி வாழ்வின் பிரச்சினைகளுக்கு தீர்வளித்துக் கொண்டே தங்கள் கனவுகளை துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரஞ்ச்ஸ்கேப் டெக்னாலஜிஸின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்தின் உரையுடன் ‘ஆரம்ப்’ நிகழ்வு தொடங்கியது. கீரெட்ஸு ஃபோரமின் ராஜன் ஸ்ரீகாந்த், ஆஸ்பிரேஷன் எனர்ஜியின் பூவாரகன் திருமலை, ஏஜே வென்சர்ஸின் ஷைலேஷ், சுலேகாவின் விஜய் ஆனந்த், கோஃப்ரூகலின் வருண் வும்முதி மற்றும் கிருஷ்ணா ஆகிய முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்-அப் ஐடியாக்களை கேட்க பங்கேற்றிருந்தனர். பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் Gofrugal-ன் குமார் வேம்பு. இவரே மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, அவர்களை வாழ்த்தினார்.

ஒட்டுமொத்தமாக, சென்னையின் தொழில்முனைவோர் சூழலமைப்பிற்கு தங்களுடைய ஸ்டார்ட்-அப்களை காட்சிபடுத்தியது நிறைவான தினமாக இருந்தது. மேலும், எஸ்.எல்.பியின் முன்னாள் மாணவர்கள், ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ், ஆஸ்கர் டெய்ஸி, ஐசப்போர்ட்ஃபார்மிங், க்ரீன் ராப் மற்றும் ஆசம் செஃப் ஆகிய ஸ்டார்ட்-அப்களை வெற்றிகரமான நடத்திக் கொண்டிருக்கும் தொழில்முனைவோர்கள், நிகழ்வில் பங்கேற்று மற்ற நிறுவனர்களை ஊக்குவித்தனர்.

ஸ்டார்ட்-அப்களை உருவாக்கவென சிறப்பு கோர்ஸ்களை எஸ்.எல்.பி வழங்குகிறது என்றாலும், பல்வேறு காரணங்களினால் இது தனித்தன்மையுடன் விளங்குகிறது. ஒரு கற்றல் நிகழ்வாய் தொடங்கியது, ஒருவரோடு ஒருவர் பழகி குடும்பமாக உணர்ந்ததால் மகிழ்ச்சியான நிகழ்வாய் முடிந்தது. 

மற்ற கோர்ஸ்களை போல அல்லாமல், உண்மையிலேயே ஸ்டார்ட்-அப்பில் அனுபவம் இருப்பவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளச் செய்வதும் இதன் தனித்தன்மை என்கின்றனர் நிறுவனர்கள்.

2018-2019 ஆண்டிற்கான விண்ணப்ப படிவங்கள் வெகு விரைவில் கிடைக்கப்பெறும். SLP-ன் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த புரோகிராமை பரிந்துரை செய்கிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு https://startupleadership.com/ 

Related Stories

Stories by YS TEAM TAMIL