அமெரிக்க முன்னணி கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்துள்ள டீ விற்பனையாளர் மகள்!

0

உத்திரப்பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சுதீக்ஷா பாத்தி. இவர் நான்காண்டு இளங்கலை படிப்பிற்காக மாசசூசெட்ஸ் பகுதியில் வெல்லெஸ்லியில் அமைந்துள்ள ஒரு தனியார் பிசினஸ் பள்ளியான பாப்சன் கல்லூரிக்குச் செல்ல உள்ளார்.

ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டும் என்கிற மனம் இருந்தால், அதற்கான செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். இதை சுதீக்ஷா இப்போது நன்குணர்ந்திருப்பார். இவர் டீ விற்பவரின் மகள். இவருக்கு அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றில் படிப்பதற்கான முழு உதவித்தொகை கிடைத்துள்ளது. சுதீக்ஷாவின் குடும்பத்திலேயே மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்லும் முதல் நபர் இவர்தான்.

உத்திரப்பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் வாழ்க்கை எளிதாக இல்லை. இவரது அப்பாவின் ஆண்டு வருவாய் 72,000 ரூபாய். இதைக் கொண்டு குடும்பத்தை நிர்வகிக்கப் போராடி வந்தனர்.

”எனக்கு ஒன்பது வயதிருக்கையில் என் அப்பாவினால் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் போனதால் நான் படித்து வந்த தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அதன் பிறகு கிராம ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன். பெண் குழந்தையை படிக்க அனுப்புவது எங்கள் சமுக வழக்கத்திற்கு எதிரானது என்பதால் என் குடும்பத்தினர்களும் உறவினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை,” 

என்று ’நியூஸ் ரிப்போர்ட்’-க்கு தெரிவித்தார். எனினும் இவர் நல்ல மதிப்பெண்கள் பெற கடினமாக உழைத்தார். அவரது கடின உழைப்பு பலனளித்தது. சிபிஎஸ்ஈ தேர்வுகளில் 98 சதவீதம் எடுத்தார்.

சுதீக்‌ஷாவிற்கு முழு உதவித்தொகையாக ஒரு செமஸ்டருக்கு 70,428 டாலர் (சுமார் 3.83 கோடி ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாசசூசெட்ஸ் பகுதியின் வெல்லெஸ்லியில் உள்ள பாப்சன் கல்லூரி என்கிற தனியார் பிசினஸ் பள்ளியில் நான்காண்டு இளங்கலை படிப்பிற்காக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிசினஸ் பள்ளியானது தொழில்முனைவுக் கல்வியில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் அமெரிக்காவின் மிகவும் மதிப்பு வாய்ந்த தொழில்முனைவுக் கல்லூரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.

”அமெரிக்காவில் படிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை அடைய முடிவதில் எனக்கு மகிழ்ச்சி. கடின உழைப்பிற்கு நிச்சயம் பலனுண்டு என்பதை உணர்ந்தேன். இந்தப் புரிதலானது நான் மேலும் கவனம் செலுத்தவும் உயர்ந்த லட்சியத்துடன் செயல்படவும் ஊக்கமளித்துள்ளது. என்னுடைய சாதனையைக் கண்டு என் குடும்பத்தினரும் பள்ளியும் மகிழ்ச்சியடைந்தது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய இலக்குகளை எட்ட நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். என் குடும்பத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பேன்,” என்று சுதீக்‌ஷா குறிப்பிட்டதாக இண்டியா டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதிலும் குடும்பத்தினர் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவுவதிலும் பங்களிக்கும் நிறுவனமான ’வாய்ஸ் ஆஃப் வுமன்’ முயற்சியுடன் சுதீக்‌ஷா இணைந்துள்ளார்.

சுதீக்ஷாவின் வெற்றி காரணமாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனால் 2009-ம் ஆண்டு நிறுவப்பட்ட விக்யாகியான் லீடர்ஷிப் அகாடமி மக்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது. இந்த ரெசிடென்ஷியல் பள்ளியானது கிராமப்புறத்தைச் சேர்ந்த சுதீக்ஷாவைப் போன்ற சிறப்பான பாராட்டத்தக்க நலிந்த குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு உதவி வருகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL