ஜிஎஸ்டி- மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நிதித் துறையின், சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017-ல் திருத்தம் செய்வதற்கு ஏதுவான அவசரச் சட்டத்தின் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்தது.  

இந்த ஒப்புதல் கீழ்க்கண்டவற்றிற்கான இழப்பீடு வரியை 15%லிருந்து 25% ஆக உயர்த்தி விதிக்க அனுமதிக்கும்: 

அ) ஓட்டுநர் உட்பட, 13 நபர்கள் மேற்படாத பயணிகள் மோட்டர் வாகனங்கள் (870210, 8702 20, 8702 30 அல்லது 8702 90 போன்ற உப- தலைப்புகளின் கீழானவை); மற்றும்

ஆ) தலைப்பு 8703 கீழ் வரும் மோட்டார் வாகனங்கள். சரக்கு மற்றும் சேவை வரி குழு, 2017, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதன் கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பாக, மோட்டர் வாகனங்கள் மீதான மொத்த நிகழ்வுகள் [ஜி.எஸ்.டி.+இழப்பீடு வரி], சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன்பான மொத்த வரி, நிகழ்வுகளை காட்டிலும் குறைந்து உள்ளதை கவனத்தில் கொண்டு, 8702 மற்றும் 8703 தலைப்புகளின் கீழ் வரும் மோட்டார் வாகனங்களின் மீதான இழப்பீடு வரியை 15%லிருந்து 25%ஆக உயர்த்திக் கொள்ள பரிந்துரை செய்தது.

மோட்டார் வாகனங்களின் மீதான இழப்பீடு வரி விகித உயர்வு பயன் குறித்த விவகாரம், சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தினால் வருங்காலங்களில் ஆய்வு செய்யப்படும்.