கோவை ஐ-கிளினிக் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள ஜியோ ஹெல்த்கேர்!

0

தொழில்நுட்ப வளர்ச்சியால் சகலமும் நம் விரல் நுனியில் அடங்கி விட்டது. உணவு, பொருட்கள் போல மருத்துவமும் ஸ்மார்ட்போன் வடிவில் வந்துவிட்டது. ரிலையன்ஸ் ஜியோவின் சுகாதார மற்றும் உடற்பயிற்சி செயிலியான ஜியோ ஹெல்த்கிளப், கோவையை சேர்ந்த ஐ-கிளினிக் (icliniq) நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை விரிவாக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

ஐ-கிளினிக் நிறுவனம் இணையம் மூலம் மருத்துவ சேவையை தமிழகத்தில் அறிமுகம் செய்து மூன்று விதமாக மருத்துவர்களை தொடர்பு கொள்ள உதவுகிறது. முதலில், ஒரு உடல் நலக் குறைவுப் பற்றிய கேள்வி ஒன்றை அனுப்புவது, இரண்டாவது, மருத்துவர் உங்களை அழைத்துப் பேசும் வசதி, மூன்றாவது, வீடியோ அழைப்பு. இந்நிறுவனத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு படிக்கலாம்.

ஐ-கிளினிக் உடனான இந்த கூட்டணி மூலம் ஜியோ பயனாளர்கள் 60க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் உடன் ஆன்லைனில் ஆலோசனை செய்ய முடியும். இந்த சேவை மருத்துவர்களுடன் உடனக்குடன் 24*7 மணிநேரமும் சாட் செய்து ஆலோசனைப் பெற உதவும்; கூடிய விரைவில் ஜியோ வீடியோ காலிங் சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளனர். ஐ-கிளினிக் மட்டுமல்லாமல் மும்பையைச் சேர்ந்த போர்சியா மற்றும் இன்னும் சில சுகாதார நிறுவனங்களுடன் ஜியோ கூட்டணி வைத்துள்ளது.

“ஜியோ இந்திய சுகாதாரத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது பெரும் திறன்களைக் கொண்டுள்ளது மற்றும் வணிகத்தை நெருக்கமாக்கும்,” என்கிறார் ஐ-கிளினக் நிறுவனர் துருவ்.

ஐ-கிளினிக் மருத்துவ ஆலோசனையில் முக்கிய பங்கு வகிப்பதுப்போல் Portea வீட்டு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப்பிரிவில் தனது சேவையை அளிக்க உள்ளது. இதன் மூலம் இந்திய சுகாதாரச் சந்தை சுற்றுச்சூழலை ஜியோ விரிவுப்படுத்த உள்ளது. 

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: எக்கனாமிக் டைம்ஸ்

Related Stories

Stories by YS TEAM TAMIL