காகிதங்கள் மறுசுழற்சி செய்து சம்பாதிக்க மக்களுக்கு உதவும் 'கபடி எக்ஸ்பிரஸ்'

0

இந்தியாவில் 20 சதவீத காகித குப்பைகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எண்பது சதவிகித காகித குப்பைகள், பொருட்களை பொட்டளம் கட்டுவது, அதை மூடுவது என இந்திய வாழ்க்கைச் சூழலில் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கடைசியில் அவை குப்பைக் குழிகளுக்குப் போகின்றன.

வளர்ந்துவரும் தேவைகளுக்கு மேலும் பல மரங்களை வெட்டவேண்டியிருக்கும். தற்போது 10 மில்லியன் டன் கணக்கில் மரங்கள் தேவைப்படுகின்றன. அது 2025ம் ஆண்டில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகலாம்.

கபில் பாலாஜி மற்றும் சந்தீப் சேத்தி இருவரும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்கள். தகவல்தொழில்நுட்பத் துறையின் 15 ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகு அவர்கள் 2015 ஆம் ஆண்டு "கபடி எக்ஸ்பிரஸை" தொடங்கினார்கள்.

உங்கள் வீட்டுக்கே

தற்போதைய மறுசுழற்சி முறையில், புதிய காகிதங்களை உருவாக்க அதிக எண்ணிக்கையில் மரங்களை வெட்டவேண்டும் அல்லது காகிதக் குப்பைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். இது நம்முடைய இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்தினரும் 100 கிலோ அளவுக்கு காகிதங்களை வீணடிக்கிறார்கள். இது எங்களை கவலையடைய வைத்தது. காகிதங்களை வீணடிக்காமல் இருப்பதற்காகவம் மரங்களைக் காப்பதற்காகவும் மக்களுக்கு கற்பிக்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம் என்கிறார் கபில் பாலாஜி.

இருவரும் சேர்ந்து வேகமாக பணிகளைத் தொடங்கினார்கள். இணையதளம் தொடங்கி ஒரு வருடம் கடந்துவந்துவிட்டார்கள். சந்தையை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களின் எதார்த்தம் புரிந்துகொண்டார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை 4 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கினார்கள். தற்போது அவர்கள் கிழக்கு டெல்லியில் இருக்கிறார்கள்.

'கபடி எக்ஸ்பிரஸ்' குடியிருப்பு சங்கங்களை இணைத்து, அவர்களுடைய சேவைகளை அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்தது. பிறகு அவர்களுக்கு 15 கிலோ பிடிக்கும் ஒரு பையை கொடுத்து அதில் வீணாகும் காகிதங்களை சேகரிக்கச் சொன்னார்கள். அந்தப் பையில் காகிதங்கள் நிரம்பியதும் அவர்கள் கபடி எக்ஸ்பிரசுக்கு தொலைபேசியில் தகவல் சொல்வார்கள்.

கபடி எக்ஸ்பிரஸ் குழுவைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குப் போய் சேகரித்துவருவார். வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக, அவர்கள் டிஜிட்டல் எடைக் கருவியை பயன்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, வாங்கிய காகிதங்களுக்கான ரசீதும் கொடுத்தார்கள். மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக குறுஞ்செய்தி வழியாக நன்றி சொன்னார்கள்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

சென்னையை சேர்ந்த 'ஸ்வச்' அமைப்பின் சமூக அக்கறை!

________________________________________________________________________

மக்களிடம் பை கொடுப்பதன் முக்கிய நோக்கம், அவர்களை அறியாமல் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவது. வீணாகும் காகிதங்களை குப்பையில் தூக்கி வீசாமல், சேகரிக்கும் பழக்கம் ஏற்படும். மேலும் மறுசுழற்சி செய்யவேண்டிய காகிதங்களை அவர்கள் சேகரிப்பார்கள் என்று கபில் நம்பினார்.

வீணாகும் காகிதங்களை சேகரிக்கும் தொழில்

போட்டியான சந்தை விலைக்கு நிகரான விலையை கொடுத்து காகிதங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று, ஆலைகளிடம் நேரடியாக விற்றார்கள்.

“நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் கொடுத்தோம். மறுசுழற்சி செய்யும் ஆலைகள் எங்களுக்கு 13.50 ரூபாய் கொடுத்தார்கள்.” இந்த மாதிரி இடைத்தரகர்கள் இல்லாமல், எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைப்பதற்கு வழி செய்தது.

இதுமட்டும் வருமானத்திற்கான முக்கியமான வழியல்ல என்கிறார் கபில். “பைகளில் பல்வேறு நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்களை அச்சிட்டு, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குகிறோம்.” மற்ற மறுசுழற்சி சார்ந்த தொடக்கநிலை நிறுவனங்களைவிட கபடி எக்ஸ்பிரஸ் வித்தியாசமானது என்று மேலும் கூறுகிறார் கபில்.

“நாங்கள் கபடி எக்ஸ்பிரஸ் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் பைகளை நேரடியாகக் கொடுத்து அவர்களிடம் கலந்துரையாடி மற்ற நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுகிறோம். வாடிக்கையாளர்களின் பங்களிப்பு மிகப்பெரிய காரியங்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.”

கடந்த 4 மாதங்களில் கபடி எக்ஸ்பிரஸ், 2 ஆயிரம் வாடிக்கையாளர்களை வெறும் வாய் வார்த்தைகள் மூலமாக அடைந்திருக்கிறது. அடுத்த 6 மாதங்களில் அவர்களுடைய செயல்பாடுகளை காசியாபாத், அதனைத் தொடர்ந்து ரோகிணி மற்றும் துவாரகாவுக்கு விரிவுபடுத்த இருக்கிறார்கள்.

காகிதம் சேகரிப்பவர்களின் வாழ்க்கையை கெடுக்குகிறீர்களா?

“நாங்கள் குப்பைக் காகிதங்கள் சேகரிப்பவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவில்லை” என்று கூறும் கபில், “உண்மையில் நாங்கள் உள்ளூர் காகிதம் சேகரிப்பவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், கபடி எக்ஸ்பிரஸ் வழியாக அதிக வருமானத்திற்கு வழி ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறோம்.”

மேலும் கபில் பேசுகிறார், “எனினும், கள எதார்த்தத்தில் அவர்கள் கபடி எக்ஸ்பிரசுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் எடை மர்றும் விலையில் வெளிப்படையான புதிய முறைகளை பின்பற்றத் தயாராக இல்லை.” ஆனால் இந்த நிலை மாறும் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார் கபில். அதனை கபடி எக்ஸ்பிரஸ் நிகழ்த்தும் என்கிறார்.

இந்தச் சூழலில், வாடிக்கையாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. மற்ற வணிகர்கள் தரமான எடை மற்றும் விலை நிர்ணயிக்கும் முறையை வைத்திருக்கவில்லை. இதனை கபடி எக்ஸ்பிரஸ் சீரமைத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முயற்சி செய்துவருகிறது. விரைவில் குப்பை காகிதங்களை சேகரிப்பவர்களையும் ஒருங்கிணைத்துவிடும்.

ஆக்கம்: SNIGDHA SINHA | தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற காகித மறுசுழற்சி தொழில் தொடர்பு கட்டுரைகள்:

பழைய பேப்பர் கொடுத்தால் புத்தகம் கிடைக்கும்!

ரைனோக்களை காப்பாற்ற யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் 'எல்ரைனோ'