மேற்கு வங்கத்தில் சூரிய மின்சக்தியை பரவலாக்க பாடுபடும் இன்விக்டஸ் சவுர் உர்ஜா

0

ஓராண்டுக்கு முன் ஐந்து நண்பர்கள் தங்கள் சொந்த ஊரான கொல்கத்தாவில் மறுசுழற்சி எரிசக்தி துறையில் ஒரு வர்ததகத்தை துவக்குவது பற்றி ஆர்வத்துடன் ஆலோசனை நடத்தினர். "நாங்கள் அனைவருமே ஸ்டார்ட்-அப் துவங்கி எங்களுக்கு நாங்களே பாஸாக இருக்க விரும்பினோம். வித்தியாசமாக, தனித்தன்மையுடன் ஏதாவது செய்து பணக்காரராகி, நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என கனவு கண்டோம்”. “ என்கிறார் இன்விக்டஸ் சவுர் உர்ஜாவின் இணை நிறுவனரான அபிஷேக் பிரதாப் சிங். ஒரு சில சந்திப்புகளுக்கு பிறகு அவர்கள் மறுசுழற்சி எரிசக்தியில் அனைவருக்கும் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டனர். சூரிய மின்சக்தி துறையில் செயல்படும் ஆர்வம் தந்த உற்சாகம் அவர்கள் அனைவரையும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இன்விக்டஸ் சவுர் உர்ஜாவை துவங்க வைத்தது. இந்நிறுவனம் இப்போது கொல்கத்தாவில் சூரிய ஒளி தீர்வுகளை வழங்கி வருகிறது.

தாங்கள் செயல்பாட்டை துவக்க தீர்மானித்த மாநிலம் அதிக அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெறாமல் இருந்தது என்கிறார் அபிஷேக். "மறுசுழற்சி எரிசக்தியை ஏற்றுக்கொள்வதில் மேற்கு வங்கம் மந்தமாக இருந்தது” என்கிறார் அவர். கொல்கத்தா, சால்ட் லேக் மற்றும் நியூ டவுன் ஆகிய இடங்களில் கூரைகளில் சோலார் பேனல்களை அமைக்க ஊக்குவிக்கும் கொள்கை முடிவை செயல்படுத்த துவங்கியிருந்தாலும், இந்தியாவில் மறுசுழற்சி எரிசக்தியை பிரபலமாக்குவதில் முக்கிய உந்துசக்தியாக விளங்குவதாக மத்திய புதிய மற்றும் மறுசுழற்சி எரிசக்தி துறை அமைச்சகம் குறிப்பிடும் மறுசுழற்சி பொருட்கள் வாங்குவதற்கான நிபந்தனைகளை (பிஆர்.ஓ) இவை பூர்த்தி செய்யவில்லை” என்கிறார் அவர்.

இன்விக்டஸ் குழுவில் இப்போது 22 பேர் இருக்கின்றனர். மறுசுழற்சி துறையில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ள இரண்டு பேரும் இதில் உள்ளனர். மாநிலத்தில் பசுமை எரிசக்தியின் தரத்தை உயர்த்த உறுதி கொண்டுள்ளது இந்நிறுவனம். சூரிய மின் சக்தி சாதனங்களை பொருத்துவது மற்றும் ஆலோசனை அளிப்பது ஆகிய சேவைகளை வழங்கி வருகின்றனர். "சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், ஏனெனில், இவை மறுசுழற்சி எரிசக்திக்கு மாற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர் மேலும்.

"ஆயிரக்கணக்கான தொழில் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்கள் தங்கள் மின்சக்தி தேவையை நிறைவேற்றிக்கொள்ள டீசலில் இயங்கும் அமைப்புகளை சார்ந்திருக்கின்றனர். டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அரசு இதன் விலையை கட்டுப்படுத்தவதை விலக்கி கொள்ள இருக்கிறது. எனவே டீசலில் இயங்கும் மின் ஆலைகளின் செலவு அதிகமாகும். மேலும் டீசலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய நீண்ட கால பாதிப்புகள் பற்றியும் சொல்லவேண்டியதில்லை” என்கிறார் அவர் மேலும்.

இன்விக்டசின் "பூட் மாடல்" மாதிரி இந்திய நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு சூரிய சக்தியை ஒரு சேவையாக வழங்கி வருகிறது. பூட் (BOOT) என்றால் நிறுவி, சொந்தமாக்கி, செயல்படுத்து மாற்றிக்கொடுப்பதை குறிக்கும். நாங்கள் சூரியசக்தி சாதனத்தை அமைப்பதுடன், அதை சொந்தமாக்கி, அதை வெற்றிகரமாக இயக்கி கொடுக்கிறோம். வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மின்சகத்திக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்” என்கிறார்.

அரசு கொள்கை மற்றும் மறுசுழற்சி தொடர்பான விழிப்புணர்வை மீறி இந்த கருத்தாக்கத்தை செயல்படுத்த இந்திய மனநிலை மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் அபிஷேக். "சூரிய மின்சக்திக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுவதால் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கின்றனர். மேலும் அவர்கள் சூரிய மின்சக்திக்கான முதலீட்டை தங்கம், மார்கெட் ஷேர் அல்லது ரியல் எஸ்டேட்டுடன் ஒப்பீட்டு பலனை காட்சிபடுத்திக்கொள்ள முடியாமல் குழம்புகின்றனர்” என்கிறார் அவர்.

இந்த காரணத்தினால் இன்விக்டஸ் கொல்கத்தா, சால்ட் லேக் மற்றும் நியூ டவுன் அண்ட் ராஜ்ஹர்ஹாத் ஆகிய பகுதிகளில் சூரிய மின்சக்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. "சூரிய மின்சக்தி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகத்தை பயன்படுத்த இருக்கிறோம். இதன் பலன் வெளிப்படையாக தெரியக்கூடியது ( மின் கட்டணம்) மற்றும் வெளிப்படையாக தெரியாதது (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) என்பதை புரிய வைத்து வருகிறோம்”.

சவால்களை மீறி இப்போது மெல்ல வளர்ச்சி உண்டாகி வருகிறது. மருத்துவமனைகள், நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பெரிய குடியிருப்புகளுடன் இன்விக்டஸ் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. "நெட் மீட்டரிங்கை பயன்படுத்த இருக்கிறோம். இது சூரிய மின்சக்தி அமைப்பின் உரிமையாளர்களுக்கு கிரிட்டில் மின்சக்தியை கூட்டுவதற்கான புள்ளிகளை அளிக்கும் பில்லிங் முறை இது. சூரிய மின்சக்தி சாதனம் வாடிக்கையாளர் தேவையை விட அதிகமாக உற்பத்தி செய்யலாம். இந்த சேமிப்பு எங்களுக்கு மாற்றப்பட்டு அவர்கள் கூரையை பயன்படுத்துவதற்கான வாடகையை நாங்கள் செலுத்துகிறோம்” என்கிறார் அவர்.

வளர்ச்சி மற்றும் முதலீடு தான் அடுத்த பெரிய சவால் என்கிறார் அபிஷேக். "நாடு தழுவிய அளவில் எங்கள் திட்டங்கள் மற்றும் மாதிரிக்கு தேவை இருப்பதால் எதிர்காலத்தில் வென்ச்சர் கேபிடல் நிதியை எதிர்பார்க்கிறோம். பெங்களுரு மற்றும் தில்லியில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். விரிவாக்கம் மற்றும் ஆய்வுக்கு நிதி தேவை “ என்கிறார் அவர் மேலும்.

நீடித்த தன்மை கொண்ட எதிர்காலத்திற்கு மறுசுழற்சியில் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் நாம் அவற்றை விமர்சன நோக்கிலும் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு சோலார் பேனல்களை உற்பத்தி செய்ய சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோபிளோரிக் அமிலம் தேவை. நீர் மற்றும் மின்சக்த்தியும் தேவை என்பதோடு கழிவும் வெளியாகிறது. இது மாசு ஏற்படுத்துகிறது. சூரிய மின்சக்தி பரவலாக பயன்படுத்தப்பட இது தடையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாக இருந்தால் தான் மறுசுழற்சி மற்றும் நீடித்த தன்மை கொண்டது என கூற முடியும். எனவே மறுசுழற்சி துறையை மேம்படுத்துவதற்கு நல்ல வர்த்தக முறைகள் மட்டும் போதாது நீண்ட கால நோக்கில் பலன் தரும் தீர்வுகளும் தேவை.