இந்திய தொழில்முனைவோரில் 9% மட்டுமே பெண்கள்: நிர்மலா சீதாராமன் கவலை

3

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16 அன்று 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை துவங்கி வைக்கிறார். இதை ஒட்டி பிரதமர் விஞ்ஞான் பவனில் தொழில்முனைவோர்கள் மத்தியில் உரையாட இருக்கிறார். புதுநிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருபவர் அமிதாப் கந்த், இவர் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளராக இருக்கிறார். 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பின்னணியில் இருந்தவரும் இவரே. இவரும் நிதித்துறை இணை அமைச்சரான(தனிப்பொறுப்பு) ஜெயந்த் சின்ஹாவும் நேற்று யுவர்ஸ்டோரி ஏற்பாடு செய்திருந்த ட்விட்டர் கலந்துரையாடலில் ஒரு மணிநேரம் கலந்துகொண்டார்கள்.

இன்று வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் #StartupIndia என்ற ஹாஷ்டேகின் கீழ் உரையாடினார். நிர்மலா சீதாராமன் அரசியலில் ஈடுபட்டு மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வேக வளர்ச்சியை அடைந்தவர். அரசியலில் நுழைந்து வெறும் எட்டு ஆண்டுகளில் மத்திய அமைச்சர் பதவியை எட்டியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய அளவிலான பேச்சாளராக இருக்கும் நான்கு பேரில் மிக முக்கியமானவர். இதற்கு முன்பு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூபர்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளராகவும், பிபிசி நிறுவனத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் உரையாடலின் போது பெண்கள் பிரதிநிதித்துவம், அரசாங்கத்தின் பங்கு, வரிவிதிப்பு கொள்கை போன்றவற்றை பற்றி உரையாடினார். ட்விட்டர் கலந்துரையாடலின் தொகுப்பு இதில் இணைத்திருக்கிறோம்.

எளிதில் தொழில் தொடங்கும் முறை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது, அது இந்த ஆண்டும் தொடர்கிறது. சிவப்பு நாடாவை ஒழிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

வெளிப்படைத்தன்மை, எளிமைப்படுத்துதல், வரி நடைமுறை போன்றவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எளிதில் சேரலாம், வெளியேறலாம், வரிச்சலுகை உண்டு

வெறும் 9% சதவீத பெண்களே புதுநிறுவன தொழில்முனைவோராக இருக்கிறார்கள். இன்னும் சிறப்பாக அவர்கள் பங்களிக்க ஊக்குவிக்க வேண்டும்.

#Startupindia என்ற ஹாஸ்டேகில் தொடர்ந்து இணைந்திருங்கள் ஜனவரி 16 அன்றும் நடைபெறும் இந்திய அரசாங்கத்தின் ஸ்டார்டப் இந்தியா செயல்பாட்டில் யுவர்ஸ்டோரியும் அங்கம் வகிக்கிறது என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில்: ஸ்வரா வைத்தி