இலங்கையின் தொழில்நுட்ப சாதனையாளர் ஷாஹானி மார்கஸ்

0

ஷாஹானி மார்கஸ் பிறந்து வளர்ந்தது எல்லாமே இலங்கையில் தான். டாக்டர் குடும்பத்தில் பிறந்ததால் இவரும் டாக்டர் ஆகியிருக்க வேண்டியது. அப்படி ஆகியிருந்தால் விர்சுசா(Virtusa) நிறுவனத்தில் தலைமை பொறியாளராகியிருக்க முடியாது. இலங்கை ஐசிடி ஏஜென்சியில் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆகியிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் கொழும்பு ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் மேலாண்மை உறுப்பினர்களுள் ஒருவராகவும், மூத்த மின் ஆளுமை ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தில் இருந்திருக்கிறார், ராயல் கவர்மண்ட் ஆஃப் பூடானில் ஆலோசகராகவும் பின்னர் மூன்று நிறுவனங்களின் இணை நிறுவனராகவும் இருந்திருக்கிறார்.

இன்று மிகச்சிறப்பான இடத்தில் இருந்தாலும், இவரின் கல்வி சூழலோ, பணிச்சூழலோ வேதனை மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. இவர் பெண் என்பதால் பாலியல் பாகுபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முன்னேறி இன்று இலங்கையிலுள்ள ஆயிரகணக்கான பெண்களின் முன்மாதிரி என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் தொழில்நுட்ப சகாப்தத்தில்

பள்ளி பருவ காலத்திலேயே வேகமான வாசிப்பு திறன் மிக்கவராக இருந்தார் ஷாஹானி. டைம் இதழ், நியூஸ்வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் மேல் அட்டையிலிருந்து கடைசி அட்டைவரை படிக்கக்கூடிய இயல்புடையவராக இருந்தார். இலங்கையில் அந்த சமயத்தில் தான் தொலைக்காட்சிகள் வந்திருந்தன, இணையம் வந்திருக்கவில்லை. பத்திரிக்கைகள் மூலமாக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மாறுதல்களை தெரிந்து கொண்டிருந்தார். பின்னாளில் அங்கே சென்று கணினித்துறை பற்றி கற்கவும், வசிப்பதற்கும் ஆசைப்பாட்டர். ஆனால் இவரின் பெற்றோர்களோ இவரை டாக்டராக்கி பார்க்கவே ஆசைப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் பெண்ணாக இருப்பதால் இலங்கையை விட்டு வெளியேறும் முடிவை எடுக்குமளவு துணிச்சல் வாய்த்திருக்கவில்லை.

பள்ளியில் படித்த போது
பள்ளியில் படித்த போது

பத்தாம் வகுப்பு முடித்ததுமே, கணிதம் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தார். இது மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான கதவை திறந்துவைத்தது. கணிதத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்ததால் இவர் மருத்துவ நுழைவுதேர்வில் தேர்வாகாமல் இருக்க முயற்சித்தார். எனினும் இயற்பியல் பாடங்களில் பிரகாசித்தார். அந்த சமயம் கொழும்பு பல்கலைக்கழகத்தில், புள்ளியியல் மற்றும் கணிதத்துறை நடத்தி வந்த கணினி பாடத்தை அரசின் புதிய கொள்கைகள் காரணமாக ரத்து செய்தது. இது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியளித்தது. எனினும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மண்ட் (NIBM) கணினி வடிவமைப்பு துறையில் பட்டயப்படிப்பு வழங்கியது. இந்த துறையிலுள்ள எதிர்காலம் ஷாஹானியின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்தது.

அந்த நாட்களில் சின்க்ளேர் ஸ்பெக்ட்ரம் எனப்படும் தனிநபர் வீட்டுக்கணினி யு.கே வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஷாஹானியின் அப்பா அதை வாங்கியிருந்தார். இவரின் சகோதரர் அதில் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, இவர் அதன் சோர்ஸ்கோடை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சில பத்திரிக்கைகளில் படித்த தகவல்கள் இதற்கு உதவியது. NIBMல் முதல் மாணவராக தேறினார் என்பதால் அந்த நிறுவனத்தின் தலைமை, மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல அறிவுறுத்தியது. நூலக மேலாண்மை திட்டம் மற்றும் தகவல் உள்ளீட்டில் பணியாற்றியதன் காரணமாக அங்கிருக்கும் நல்ல கல்லூரிகள் பற்றிய விழிப்புணர்வு கிடைத்தது. இந்த படிப்புகளை எந்த கல்லூரிகள் வழங்குகின்றன என பத்திரிக்கைகள் மூலம் தெரிந்துகொண்டார் ஷாஹானி.

எண்ண ஓட்டம், குழப்பம் மற்றும் பட்டம்

மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இவரின் திட்டத்தை இவரது பெற்றோர் எதிர்த்தனர். சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு தேர்ச்சியடைந்ததால் இவர் சட்டம் தான் படிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இது ஷாஹானியின் பெற்றோர்களை NIBMன் தலைவர் முன் நிறுத்தியது. அவரிடம் பேசிய பிறகு ஷாஹானியை அமெரிக்கா அனுப்ப சம்மதித்தனர்.

ஷாஹானி மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு விண்ணப்பித்த சில நாட்களிலேயே துரதிர்ஷ்டவசமாக அவரின் தந்தை இறந்தார். இவரின் நிதி நிலை மோசமானது, மிகச்சிறிய வயது, அப்பா உயில் எழுதி வைக்கவில்லை என்பதால் இவர் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதாலும், சட்டப்படி விருப்பாவண வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு ஆறுதல் சொல்ல அமெரிக்காவில் இருந்து மருத்துவர் ஒருவர் வந்திருந்தார். அவர் படிக்க இவர் அப்பா தான் உதவினார் என்பதால் ஷாஹானியின் படிப்புக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக தெரிவித்தார். ஷாஹானிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பர்டுயு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்க சென்றபோது மிகக்குறைவான பெண்களே பொறியியல் படிக்கிறார்கள் என்பதை கவனித்தார்.

கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டப்படிப்பையும், கணிதத்தில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். பர்டுயுவில் பி.எச்டி படித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவரையே மணந்தார். இவர் பிஎச்டி முடித்த சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாஹானி, பகுதியளவு வகை சமன்பாட்டு தீர்வுக்கான இணை மென்பொருள் மறுபயன்பாடு சார்ந்த ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் வழக்கமான ப்ரோக்ராம்களான சி, ஜாவா மற்றும் பெர்ல் போன்றவற்றை அறிவியல் கணக்கீட்டிற்கும், கலப்பு சூப்பர் கம்ப்யூட்டர்களின் அறிவியல் மென்பொருளின் அணிதிரட்டியான அட்மின் மாட்யூல்களில் எப்படி பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

சுயமரியாதை வீழ்ச்சி மற்றும் பின்னடைவு

1997ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் ஆராய்ச்சி மையத்தில் ஆலோசகராக சேர்ந்தார். அந்த சமயத்தில் நியூயார்க்கில் உள்ள புதுமுயற்சி நிறுவனங்களெல்லாம் இணைய பங்குவர்த்தகம், கடன் வர்த்தகம் மற்றும் நிதி துறையின் மற்ற தகவல் தொழில்நுட்பங்கள் சார்ந்த மென்பொருள் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். 1999ம் ஆண்டு பி.எச்டி முடித்த பிறகு ஒரு புது நிறுவனத்தில் முக்கியபொறியாளராக ஓராண்டு பணியாற்றினார். இலங்கையில் உள்ள பெண்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்காவில் இருக்கும் பெண்களிடம் படிப்பு சார்ந்தும், வேலை சார்ந்தும் இயங்கும்போது சுயகவுரவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஷாஹானியின் முக்கிய பிரச்சினையே அவருக்கு இலங்கை சார்ந்த முன்மாதிரி பெண்கள் இல்லை என்பதே. இவரின் கணவர் தங்கள் குழந்தைகளுக்கு இலங்கையின் கலாச்சாரத்தை அறிமுகபடுத்த விரும்பினார். எனவே இலங்கை சென்று வாழலாம் என்ற தன் ஆசையை தெரிவித்தார். ஆனால் ஊர் திரும்புவதில் ஷாஹானிக்கு பெரிதாக ஆர்வமில்லை. விர்சுசாவின் தலைமை செயல் அதிகாரியிடம் இலங்கை செல்லும் தன் திட்டத்தை தெரிவித்தார். இலங்கைக்கு சென்று அங்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகளை பார்வையிட சொல்லி பரிந்துரைத்தார். இலங்கை குழுவின் தலைமை கட்டுமானபொறியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாஸ்டனில் சிலகாலம் பணியாற்ற அனுமதியளித்தார்கள்.

2003ம் ஆண்டு விர்சுசா நிறுவனத்தில் பணியாற்றியபோது
2003ம் ஆண்டு விர்சுசா நிறுவனத்தில் பணியாற்றியபோது

நிறுவனத்திலிருந்து மின் ஆளுமையை நோக்கி

ஐந்தாண்டுகள் விர்சுசாவில் பணியாற்றிய பிறகு இலங்கையிலிருந்த இவரின் குழுவின் எண்ணிக்கை 200லிருந்து 1000மாக உயர்ந்தது. ஒரேநேரத்தில் 20 திட்டங்களை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். இவரின் குழுவுக்கான வேலைகளை உருவாக்குவதிலும், அவர்களின் பணித்திறனை அளவிடும் பணியிலும் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் மென்பொருள் உருவாக்கம் மற்றும் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார்.

தன் குழந்தைகள் தன்னை வீட்டில் எதிர்பார்க்கிறார்கள் என்று உணரத்துவங்கினார், ஆனால் வேலையை விட்ட சில நாட்களிலேயே வீட்டிலேயே இருப்பது என்பது தன்னால் முடியாது என்பதை உணர்ந்துகொண்டார்.

ஷாஹானியின் வழிகாட்டியான பேராசிரியர் சமரநாயகே இலங்கை அரசின் சார்பில் நாடுமுழுக்க மின் ஆளுமை அமைப்பை நிறுவும் அமைப்பின் தலைவராக இருந்தார். அது இவரை இலங்கையிலுள்ள ஐசிடி நிறுவனத்தில் சேர அழைப்புவிடுத்தது. இதற்கு முன்பு பார்த்த வேலைகளை விட இந்த வேலை வித்தியாசமானது. எனினும் இந்த அழைப்பை நிராகரிக்க அவருக்கு மனமில்லை.

இலங்கை ஐசிடி ஏஜன்சியில்
இலங்கை ஐசிடி ஏஜன்சியில்

இவரின் பதவிக்காலத்தில் தான் இலங்கையின் எல்லா கணினியையும் இணைக்கும் முயற்சியான லங்காகேட் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிதி உலக வங்கியால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் சேவை சார்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட வேண்டும் என்றே திட்டமிட்டார். ஓபன் சோர்ஸ் மென்பொருளாக வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். காரணம் ஓபன் சோர்ஸ்களை கொள்முதல் செய்வதில் நிறைய சட்டசிக்கல் இருந்தது.

இதை கொள்முதல் செய்வதில் சுறுசுறுப்பாக இருக்கிறோம் காரணம் இப்போது இருக்கக்கூடிய அமைப்பானது நீர்வீழ்ச்சிமுறையில் செயல்படக்கூடியது என்கிறார். இது பற்றிய விவாதம் வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியில் நடந்தது. இடைப்பட்ட நேரத்தில் மிக விரைவாக செயல்படக்கூடிய ஓபன்சோர்ஸ் சார்ந்த மின் ஆளுமை திட்டத்தை வெளியிட்டார். இது மிகபெரிய செலவை மிச்சம் பிடிக்கக்கூடியது ஆகும். உலக வங்கியிடமிருந்து கிடைத்த ஆதரவினால் இந்த திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தினார்.

முதலாண்டின் இறுதியில் பேராசிரியர் சமரநாயகே காலமானார். இது அலுவலகத்தில் இருக்கும் அரசியலில் வேலை பார்க்க முடியாத நெருக்கடியை உண்டு பண்ணியது. இதன்காரணமாக இரண்டாவது ஆண்டின் இறுதியில் ஐசிடி நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

பேராசிரியர் அளித்த ஊக்கத்தால் விளைந்த புதுநிறுவனம்

ஷாஹானி மொராடுவா பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றினார். இந்த பல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஆகும். இங்கு தொடர்பியல், மென்பொருள் கட்டமைப்பு மற்றும் பொறியியல் பாடங்களை முதுநிலை மாணவர்களுக்கு கற்பித்தார்.

கேப்ஸ்டோன் ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை ஒரு குழுவாக பிரித்து பயிற்சியளித்தார். இந்த குழு பின்னாளில் நிறுவனம் துவங்கி இவரின் சிந்தனைகளை செயல்படுத்தும் வகையில் அவர்களை தயார் செய்தார். யாரெல்லாம் அடுத்த கட்டத்துக்கு நகருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நல்ல ஒரு சம்பளம் இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் என சத்தியமளித்தார்.

இப்போது குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்காகவே ஒரு இடைவெளி எடுத்திருக்கிறார். 2011ம் ஆண்டு கல்லூரியில் முழுநேர வேலையிலிருந்து வெளியேறியினார். சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் ஆலோசகராக தொடர்ந்தார். எனினும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்தித்ததால் உடனடியாக வேலைக்கு சேரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நிறுவனம் துவங்கும் முடிவு

இவர் பாடம் நடத்துபவராகவும், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவராகவும் இருந்ததால் ஐடி துறை இவரை தகுதிக்கு மீறிய திறன் பெற்றவராக(overqualified) கருதியது. எனவே ஆக்செண்டா(Auxenta) என்ற நிறுவனத்தை துவங்கினார். நிறுவனங்களின் எரிவிகிதத்தை (burn-rate)குறைக்கும் வேலையில் இயங்கினார்கள்.

இவரிடமிருந்த இரட்டை குடியுரிமை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறுவதில் இவருக்கு எந்த சிக்கலுமிருக்கவில்லை. ஜனவரி 2014ம் ஆண்டு இவரின் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது. இதனிடையே மார்ச் 2014 ஆம் ஆண்டு மொராடுவா பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற நான்கு மாணவர்கள், காப்ஸ்டோன் திட்டம் மூலமாக பேச்சுமொழியை கிரகித்து ஆராயும் மென்பொருள் சார்ந்து பணியாற்றினார்கள். அவர்களின் பட்டமளிப்பு விழாவின் போது அவர்கள் நான் நிறுவனம் துவங்குவேனா என்று கேட்டார்கள், நிச்சயம் துவங்குவேன் என்று சொன்னதை நினைவுகூர்ந்தார்.

நால்வரில் இருவர் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தனர், மற்ற இருவர் எமோஜாட் இன்க், என்ற நிறுவனம் மூலமாக தங்கள் திட்டத்தை செயல்படுத்தினர். மஞ்சுலா திசநாயகே என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் பிஎச்டி முடித்தவர், நிறுவனம் நடத்திய அனுபவம் உள்ளவர், இவர் நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்தார்.

கேபாக்சஸ் என்ற நிறுவனத்தில் ஷாஹானி இணை நிறுவனரானார். இந்நிறுவனம் இலங்கையின் மிகப்பெரிய பங்குச்சந்தை நிறுவனத்தின் பங்குதாரர் ஆகும்.

எமோஜாட் : உணர்வுகளும் தொழில்நுட்பமும் இணையுமிடம்

எமோஜாட் என்பது ஊடகத்தின் பார்வையாளர்கள் சார்ந்த தொழில்நுட்பம். குறிப்பாக டிஜிட்டல் மீடியா மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் முக்கிய பங்காற்றக்கூடியது. எட்டுமாதத்திற்கு முன்பே இந்த நிறுவனம் காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவில் பணியாற்றும் மற்ற எல்லோரையும் விட இவர்கள் ஒரு படி முன்னிலையில் இருப்பதாக ஷாஹானி தெரிவிக்கிறார்.

பார்வையாளர்களின் மறுமொழி அமைப்பான மைக்ரோசாஃப்டின் - பிங்க் பல்ஸ் தான் இவர்களின் போட்டியாளர்கள், இருப்பினும் இவர்கள் எமோஜாட்டை விட ஒரு படி பின் தங்கியுள்ளதாகவே தெரிவிக்கிறார். எமோஜாட் சமகால உணர்வுகளை பதிவு செய்து ஆராயக்கூடிய திறன் கொண்டது. இந்த தகவல்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு விளம்பரங்களை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலைகளுக்கு மக்களின் உணர்வுகள் மாறுவதை எமோஜாட் மூலம் அறிந்துகொள்ள முடியும் என ஷாஹானி நம்புகிறார்.

இந்த மென்பொருளை ஏற்கனவே இலங்கையில் ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி சேனலில் செயல்படுத்தி பார்த்திருக்கிறார்கள். எமோஜாட் முழுக்க முழுக்க ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கக்கூடியது. இது உணர்ச்சிகளை உள்வாங்கும் தொழில்நுட்பத்தால் ஆனது. ஒரு நொடியில் லட்சகணக்காணோரின் முகபாவனைகளை பதிவு செய்து அமேசான் க்ளவுடில் சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த தகவல்களை அவ்வப்போது பார்க்க முடியும். எமோஜாட் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி விற்பனையை அதிகரிக்கவும், விளம்பரம் செய்யவும் தேவையான நிதித்தேவைக்காக முதலீட்டாளர்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

தவறுகளிலிருந்து கற்றுகொண்டது

ஷாஹானி இப்போது பல பெண்களை சந்தித்து உரையாடுகிறார், அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகவும் ஆலோசகராகவும் இருக்கிறார். ஐடி தொழில்நுட்பத்தின் சக்தி மீதும் மின் ஆளுமையின் எதிர்காலத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுவது என்பதே அதற்கு காரணம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்பது பெண்கள் பணியாற்ற ஏற்ற இடம் என்கிறார் ஷாஹானி. காரணம் இந்த தொழிலில் வீட்டிற்கும் நேரம் ஒதுக்க முடிவதே, இது ஒரு மருத்துவராலோ, சட்டவல்லுனராலோ முடியாத காரியம் என்கிறார்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதில் பணியாற்றும் குழுவை பொறுத்தே அமையும் என நம்புகிறார். அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதே வெற்றியை தீர்மானிக்கும். ஒருவர் விரைவில் வெற்றிபெற வேண்டுமானால் தன்னுடைய வழிகாட்டிகளிடம் உரையாட வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்கிறார். அவர்களே உங்களை அனுபவத்தை நோக்கியும், சவால்களை நோக்கியும் உந்தித்தள்ளுவார்கள் என்பதே ஷாஹானியின் கருத்து.

இணைய இணைப்பு - http://emojot.com/