2010 முதல் பலரை காதலில் விழவைத்த இந்திய டேட்டிங் தளம்!

0

உலக மக்கள் தொகையில் அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்கிறது ஐ.நாவின் அண்மை அறிக்கை. இது இளைஞர்களைக் குறி வைக்கும் "இணைய வழி டேட்டிங்" (online dating) வர்த்தகத்திற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. இணைய வழி டேட்டிங்கில் தன்னுடைய ஜோடியைத் தேடுவது அபத்தமானதாக கருதப்பட்ட நிலை மாறி, தற்போது உலக அளவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சாதாரண விஷயமாகி விட்டது.

சர்வதேச அளவில் டேட்டிங் தளங்கள் தோராயமாக அமெரிக்க டாலர் மதிப்பில் 1.6 பில்லியன் டாலர் லாபம் பெறுகிறது, ஆனால் இந்தியாவில் அந்த அளவு வாய்ப்பை பயன்படுத்துவதில்லை. 2015 மார்ச்-ல் இந்தியாவின் ட்ரூலிமேட்லீ (TrulyMadly ) என்ற செயலி, முதல்கட்டமாக ரூபாய்.35 கோடி நீதியை முதலீடாக பெற்றது. அதே வேளை, 2015 ஜுலையில் ஐடிஜி வென்ச்சர்ஸ் டேட்டிங் செயலியான "ஐகிரஸ்ஐஃபிளஸ்" (iCrushiFlush) வெளியிடப்படாத நிதியை முதலீடு செய்துள்ளது. 

அந்த சந்தையை மையப்படுத்தி வந்தது தான் "குவாக்குவாக்.இன்" (QuackQuack.in). ரவிமிட்டல், 2010ல் இதைத் தொடங்கினார், இது வரை 1 மில்லியன் பதிவுகளை இந்த இணையதள முகவரி கடந்துள்ளது. ரவி, 16 வயது முதலே பணியாற்றத் தொடங்கிவிட்டார், தனது தந்தையின் பேட்டரி தயாரிப்பு தொழிலை அவர் நிர்வகித்து வந்தார். அவருடைய சமூக வட்டம் சுருங்கத் தொடங்கிய போது அவர் 2010ல் தனக்கான நண்பர்கள் மற்றும் ஜோடியை இணையவழியில் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அந்த சமயத்தில் இந்தியர்களுக்கென்ற பிரத்யேக டேட்டிங் தளம் இல்லாததைக் கண்டு வியப்படைந்தார். அவருக்குத் தெரிந்த பெரும்பாலான மக்கள் தங்களது ஜோடியை ஃபேஸ்புக் (Facebook ) அல்லது ஷாதி.காம் (Shaadi.com) மூலமே தேர்ந்தெடுத்தனர்.

ரவி, ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்தத் தருணம் அது. அவருடைய ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி இந்தியாவில் திருமணமாகாமல் இருப்பவர்களை மையப்படுத்தி ஒரு டேட்டிங் தளத்தை தொடங்க திட்டமிட்டார். இரு படுக்கை வசதி கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்ததோடு, குவாக் குவாக்.இன் உருவாக்க ஒரு சிறிய மேம்பாட்டுக்குழுவையும் அமைத்துக்கொண்டார். இது போன்றதொரு நிறுவனத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதா என்பதை அறிய விரும்பிய ரவி, முதலில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன விளம்பரங்களில் போலி விளம்பரத்தை வெளியிட்டார். அந்த விளம்பரத்தின் ஒவ்வொரு 100 கிளிக்கிற்கும் 20 உள்நுழையீடுகள் இருந்தது அவருக்கு ஆச்சரியமளித்தது. இது ஒரு தெளிவான மற்றும் சரியான அறிகுறி என அவர் நம்பினார்.

வடிவமைபப்பாளர்கள், நடுநிலையாளர்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனைக் குழு என 15 பேர் கொண்ட குழுவோடு இந்த நிறுவனம் நியாயமாகவும் ஒழுக்கமாகவும் நடைபெற்று வருகிறது. குவாக் குவாக்.இன், கடந்த 12 மாதத்தில் 5 லட்சம் பயனாளர்களைப் பெற்றது. அடுத்த 3 ஆண்டுகளில் 5 மில்லியன் பயனாளர்களை ஈர்ப்பதே அவர்களின் இலக்கு.

குவாக்குவாக்.இன் குழு
குவாக்குவாக்.இன் குழு

தன்னை எது ஈர்த்தது என்று ரவி நம்மிடம் சொல்கிறார் :

வாடிக்கையாளர்களின் இணையதள பக்கத்தில் எதையாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். டேட்டிங்குக்கான எண்ணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது – குறிப்பாக, பயனாளர்கள் எங்களுடைய செயலி வழியே இணையத்தில் இணையும் போதும், பயனாளர்கள் தங்களுடைய ஜோடியை சந்தித்துவிட்டு எங்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷமே எங்களை ஊக்குவிக்கிறது.

ரவிமிட்டல், நிறுவனர், குவாக்குவாக்.இன்
ரவிமிட்டல், நிறுவனர், குவாக்குவாக்.இன்

லாபத்திற்கான முன்னோடி

இந்த நிறுவனத்துக்கான வருமானம் பெரும்பாலும் உறுப்பினர்களின் தவணைக் கட்டணத்தில் இருந்து கிடைக்கிறது. புதிய உறுப்பினர்கள் இலவசமாக உள்நுழையலாம், மற்றவர்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம் ஆனால் அவர்களுக்கு தகவல்களை அனுப்ப முடியாது. தகவல்களை அனுப்ப விரும்பினால் பயனாளர்கள், தள்ளுபடி விலையில் உள்ள வெவ்வேறு வகையான சந்தா வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த தளத்தில் உரையாட மாதக்கட்டணம் ரூ.1000; மூன்று மாதங்களுக்கு ரூ.2500, ஆறு மாதங்களுக்கு ரூ.4400 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.6400 என கட்டணத்தை வசூலிக்கிறது. 15 முதல் 20 சதவீதம் வரையிலான உறுப்பினர்கள் தங்களை புதுப்பித்துள்ளனர். குவாக்குவாக்.இன், 2013-2014 நிதிஆண்டில் ரூ.91 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது, 2014-15ல் இறுதியில் ரூ.1 கோடியே 81 லட்சமாக வளர்ச்சிபெறும் என நம்புகிறது.

வேறுபாட்டாளர்

பயனாளர்கள் தங்களது கருத்தை பதிவேற்றம் செய்யும் விஷயத்தில் குவாக்குவாக்.இன் மிகவும் கண்டிப்பாக இருக்கும் என்கிறார் அதன் நிறுவனர் ரவி.

“நாங்கள் இரண்டு ஷிப்ட் நேரங்களில் பணியாற்றும் நான்கு பேர் கொண்ட நடுநிலையாளர்கள் குழுவை வைத்துள்ளோம். அக்குழு பயனாளர்கள் பதிவேற்றம் செய்யும் கருத்தின் உண்மைத்தன்மையை அறியும். பல நேரங்களில், தங்களுடைய வயது 26 என்று சொல்பவர்கள் புகைப்படத்தில் மிகவும் வயதானவராக இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பலர் தங்களைப்பற்றிய அர்த்தமற்ற விவரங்களை பதிவேற்றம் செய்வர். சில நேரங்களில் நாங்கள் அது போன்ற கருத்துகளைத் தடை செய்து விடுவோம். பயனாளரின் நேரத்தை வீணடிக்காமல் நல்ல பிரதிபலனை பெறுவதே இதன் நோக்கம்".

தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளியின் வாழ்க்கைக்குறிப்பும் சரிபார்க்கப்படும் – தரம் குறைந்த புகைப்படம் மற்றும் கருத்துகள் அழிக்கப்படும், தவறாக பயன்படுத்துவது மற்றும் ஸ்பாம்களை கண்டுபிடித்து உடனடியாக பயனாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்கள் தானியங்கி நெறிமுறைகளையும் அமைத்துள்ளனர்.

ஆண்-பெண் விகிதாசாரத்தை சமன்படுத்தும் வகையில், பெண்களை அதிக அளவில் இந்த தளத்திற்கு கொண்டு வர வேண்டும் என்னும் முனைப்போடு குவாக்குவாக்.இன் கடுமையாக செயல்படுகிறது. தற்போது அந்த விகிதாச்சாரம் குறைவாகவே உள்ளது : டேட்டிங் தளத்தில் 70 ஆண்களுக்கு 30 பெண்களே உள்ளனர்.

வியாபார யுக்தி

கடந்த மாதம் குவாக்குவாக்.இன் பக்கத்தை 5.1 மில்லியன் பேர் இணையதளம் வழியே கண்டுள்ளனர். சராசரியாக 1.41 மில்லியன் தகவல் பரிமாற்றங்கள் செயலி மூலம் நடைபெற்றுள்ளது. இதை பயன்படுத்துவோரின் சராசரி வயது 27. அவர்கள் ஒரு நாளைக்கு 10 -12 நிமிடங்களை எங்கள் இணையதள பக்கத்தில் செலவிடுகின்றனர். டெல்லி, பெங்களூர், ஐதராபாத் மற்றும் மும்பை நகரங்களில் அதிக பயனாளர்கள் உள்ளனர். இரண்டாம் நிலை சந்தையை பொருத்த வரை நகரங்களான அகமதாபாத், சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவில் இந்தத் தளம் அதிக அளவு ஈர்ப்பை பெற்றுள்ளது.

எதிர்கால திட்டம்

எதிர்காலத்தில், காலத்திற்கேற்ப மாற்றங்களைப் புகுத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து இந்நிறுவனம் மேலும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. பயனாளர்களின் தேவைக்கேற்ப அவர்களின் நடவடிக்கைகளை அதிக அளவில் உற்று நோக்கி அதற்கேற்ப மாற்றங்களை செய்கிறது. பயனாளர்களின் போக்கு மற்றும் மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டு தனி நபர் பொருத்தம் அல்லது பிடித்த சுயகுறிப்புகளை வெளியிட இது வழிவகுத்துள்ளது. பயனாளரின் அடிப்படையை விரிவாக்கும் வகையில், விரைவில் ஆப்பின் ஐஓஎஸ் பதிவை (iOS version) வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொருந்திய பயனாளர்களுக்காக இன்-ஆப் காலிங்( in-app calling) என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அனுபவங்கள்

ரவி தனக்கு இதுவரை கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானது என்கிறார். தான் செய்யும் பணியை வயது மூத்தோருக்கு புரிய வைப்பது கடினமாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். நாங்கள் திருமணத்திற்கான தளம் வைத்துள்ளோம், ஆனால் திருமணம் என்ற பந்தமின்றி என்று பலருக்கு புரிய வைப்பது சவால் என கண்ணம் சிவக்கிறார் ரவி.

இணையதள முகவரி: QuackQuack

Stories by Gajalakshmi Mahalingam