தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விசாகப்பட்டினம்-சென்னை தொழில் தாழ்வாரம் 

0

விசாகப்பட்டினம்- சென்னை தொழில் தாழ்வாரத்தின் ( வி.சி.ஐ.சி) இரு முனையங்களுக்கான (நோட்) பிரதான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் மற்றும் யேர்பேடு- ஸ்ரீகாளாஸ்தி ஆகியவை இந்த இரு முனையங்களாகும்.

மக்களவையில் எழுத்துப் பூர்வமான பதிலில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, பிரதான திட்டமிடல் முடிந்த பிறகு, விரிவான முதல்கட்ட பொறியில் மற்றும் தேசிய தொழில் தாழ்வார மேம்பாட்டு மற்றும் செயல்பாட்டு அறக்கட்டளையின் (என்.ஐ.சி.டி.ஐ.டி) அனுமதிக்குப்பிறகு தொழில் தாழ்வாரங்கள் பணிக்கான நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கி, இந்த திட்டத்திற்காக கீழ்கண்ட முறையில் 631 மில்லியன் கடன் மற்றும் நிதியை அனுமதித்துள்ளது.

1. முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்க இரண்டு கட்ட எம்.எப்.எப் 500 மில்லியன் டாலர்

2. மாநிலத்தில் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க இரண்டு கட்ட 125 மில்லியன் டாலர் திட்ட அடிப்படையிலான கடன்

3. விசாகப்பட்டினத்தில் பருவநிலை மாற்றத்தை தாங்கக் கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க நகர்புற பருவநிலை மாற்ற எதிர்ப்பு அறக்கட்டளை நிதி (யூ.சி.சி.ஆர்.டி.எப்) மூலம் 5 மில்லியன் டாலர் நிதி

4. ஆந்திர பிரதேச மாநிலம் சீர்திருத்தங்களை நிறைவேற்ற ஒரு மில்லியன் தொழில்நுட்ப உதவி.

ஏபிபியால் தயாரிக்கப்பட்ட கருத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விசாகப்பட்டினம் – சென்னை தொழில் தாழ்வாரத்தில் விசாகப்பட்டினம், காக்கிநாடா, கான்கிபாடு-ஞானவரம், யேர்பாடு-ஸ்ரீகாளஸ்தி ஆகிய நான்கு முனையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL