புகைப்பட கலைஞருக்கான தேடலில் பிறந்த சேவை 'கியூஒய்கே'

0

மொபைல் செயலிகள் உலகில் பண பரிமாற்றம், பில் செலுத்துவது, டாக்டர்களை கண்டறிவது என எல்லாமும் ஒரு கிளிக்கில் சாத்தியமாகிறது. இந்த வகை செயலிகளில் ஒன்றான "கியூஒய்கே" (Qyk) ஓரிடத்தில் எல்லா சேவைகளுக்கமான சந்தையாக விளங்குகிறது. இந்த செயலி சரி பார்க்கப்பட்ட, பொருத்தமான பணியாளர்களை அமர்த்திக்கொள்ள வழி செய்வதாக தெரிவிக்கிறது.

புகைப்படக்கலைஞர்கள் துவங்கி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் என 100 வகையான சேவைகளை இதன் மூலம் பெறலாம். இதன் இணை நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓவான தீபக் சிங்கால் (Deepak Singhal), வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் பொருத்தமான வல்லுனர்களை தேடி தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.

அனுபவ்,தீபக்,சங்கர்ஷ்,ஷோபித்
அனுபவ்,தீபக்,சங்கர்ஷ்,ஷோபித்

பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் போலவே இந்த செயலியும் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து துவங்கியது. தீபக், திருமண புகைப்பட கலைஞரை தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது; அவர் நண்பர்கள் மூலம் தேடிப்பார்த்தும் நிச்சயம் இல்லாமல் இருந்தது.

“ஆன்லைனில் புகைப்பட கலைஞர்களை தேடினேன். ஆனால் முடிவெடுக்க போதுமான தகவல்கள் இல்லாமல் இருந்தன. இறுதியில் மூன்று வார தேடலுக்குப்பிறகு நல்ல புகைப்பட கலைஞரை தொடர்பு கொண்டேன்” என்கிறார் தீபக். இதுவே மக்கள் தேடும் எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் சேவையான கியூஒய்கே செயலிக்கு வித்திட்டது.

குழுவின் பின்னணி கதை

தீபக் மற்றும் ஷோபித், அர்பன் டச்சில் இணைந்து பணியாற்றினர். அந்த காலத்தில் இருவருமே சுயமாக நிறுவனம் துவங்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர். இருவரின் பரஸ்பர நண்பர்களான சங்கர்ஷ் மற்றும் அனுபவ் ஆகியோரும் இவர்களுடன் அடிக்கடி சந்திப்பது வழக்கம். விவாதம் மற்றும் ஆலோசனைக்கு பிறகு 2014லில் கியூஒய்கே நிறுவப்பட்டது.

கியூஒய்கே செயல்பாடு

இந்த செயலி அல்லது வலைவாசலை வாடிக்கையாளர் அணுகியவுடன் அவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் சேவை மற்றும் அஞ்சல் எண்ணை தெரிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு பிறகு ஒரு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. பின்னர் இக்குழு பொருத்தமான தொழில்முறை பணியாளரை தொடர்பு கொண்டு அவரின் கட்டண விவரத்தை தெரிவிக்கிறது. வாடிக்கையாளருக்கு மூன்று விதமான கட்டணம் தெரிவிக்கப்பட்டு தேர்வு செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

"மூன்று மாதங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து தினமும் 100 கோரிக்கைகளுக்கு வளர்ந்திருக்கிறோம்” என்கிறார் தீபக். அடுத்த 12 மாதங்களில் 5 நகரங்களில் இருந்து தினமும் 5,000 கோரிக்கைகளுக்கு வளர இந்தக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது கமிஷன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

கியூஒய்கே செயலியின் பலம் அதன் தொழில்நுட்பம் தான் என்கிறார் தீபக். வாடிக்கையாளர்கள் கோரிக்கைக்கு ஏற்ப சேவை அளிப்பவர்களை சரியாக இணைக்கும் நிரல் மூலம் அனைவரின் நேரத்தையும் மிச்சமாக்குவதாக அவர் சொல்கிறார். "இதை தொழில்நுட்பம் சார்ந்த சேவையாக பார்க்கிறோம். இதற்கு ஏற்ற வகையில் அருமையான குழுவை பெற்றிருக்கிறோம்” என்கிறார் தீபக்.

சந்தை வாய்ப்பு

இப்போதைக்கு இந்த செயலி மெட்ரோக்களில் கவனம் செலுத்தி வருகிறது. பரபரப்பான வாழ்க்கை வாழும் இளம் தொழில்முறையினர் தான் தங்கள் இலக்கு என்கிறார் தீபக். "இவர்கள் ஒரு சில கிளிக்குகளில் தங்கள் தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறவர்கள்- அதை தான் நாங்கள் நிறைவேற்றி நேரம் மற்றும் தேடலை மிச்சமாக்குகிறோம். இரண்டாம் கட்ட நகரங்களிலும் கவனம் செலுத்துகிறோம்” என்கிறார் அவர்.

சவால்களைப்பொருத்தவரை தொழில் முறை பணியாளர்களை சரி பார்க்கும் செயல் கடினமாக இருப்பதாக தீபக் சொல்கிறார். பதிவு செய்யப்படுபவர்களின் தகுதியை உறுதி செய்ய போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பிறகு வாடிக்கையாளர்கள் நலனுக்காக தொழில் முறை பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கின்றனர்.

தொழில் சூழல்

பழுது பார்ப்பது, குழாய் சரி பார்த்தல், சமையல் பணிகள் போன்றவை இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட துறையில் தான் இருக்கிறது. வேலை பலு காரணமாக இத்தகைய பணியாளர்களை தேடிக்கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சிக்கலாக இருக்கிறது.

சர்வதேச அளவில் யெல்ப் (Yelp ), பைண்ட் ஹோம் சர்வீசஸ் (Find Home Services,),ஹோம் இம்பூவ்மண்ட் அண்ட் ரீமாடலிங் (Home Improvement & Remodeling) போன்ற சேவைகள் இருக்கின்றன. இந்தியாவிலும் அர்பன்கிலாப், (UrbanClap)நேனோஜாப்ஸ் (Nanojobs),ஹியர்நவ் (HereNow ) மற்றும் அர்பன் ப்ரோ (Urbanpro.)போன்ற சேவைகள் இருக்கின்றன.

சேவை சார்ந்த நிறுவனங்கள் இந்த பிரிவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்படும் இந்த சந்தையில் முதலீட்டாளர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்செல் பாட்னர்ஸ் மற்றும் எஸ்.ஏ.ஐ.எப் பாட்னர்ஸ் ஆகியவை அர்பன்கிலாப்பில் 1.6 மில்லியன் டாலர் முதலீடு செய்தன. டாஸ்க்ஜாப் நிறுவனம் மேஃபீல்டு மற்றும் ஓரியாஸ் பாட்னர்சிடம் இருந்து ரூ. 8 கோடி நிதி பெற்றுள்ளது.

இணையதள முகவரி: QUK