இளம் தொழில் முனைவோர்களை 'ஸ்டார்ட அப் விக்கெண்ட்' அழைக்கிறது!

1

உங்களிடம் தொழில்முனைவோருக்கான துடிப்பு இருக்கிறதா? மகத்தான நிறுவனமாக உருவாகக்கூடிய வர்த்தகத்திற்கான அடிப்படையான கருத்தாக்கம் உங்கள் மனதில் இருக்கிறதா? சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய வகையில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு ஒன்று உங்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறதா? ஆம், எனில் 'ஸ்டார்ட் அப் விக்கெண்ட்’ உங்களுக்கான நிகழ்வாக இருக்கும்.!

ஸ்டார்ட் அப் கனவுகளுடன் இருக்கும் தொழில்முனைவு ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான மேடையாக விளங்கும் இந்த நிகழ்ச்சி மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறது. தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்நோக்கும் 'ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்' வரும் 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த அமைப்பு, சென்னையின் வடிவமைப்பாளர்கள், தொழில்முனைவோர், வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை இணைக்கும் மேடையாக இது அமைகிறது.

வருடாந்திர நிகழ்வான 'ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்' இந்த ஆண்டு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங்) நடத்தும் தொழில்நுட்ப விழாவான குருஷேத்திராவின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இதன் மீடியா பங்குதாராராக தமிழ் யுவர்ஸ்டோரி பெருமையுடன் இணைகிறது.

அறிமுகம்:

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான மேடையாக ஸ்டார்ட் அப் வீக்கெண்ட் நிகழ்ச்சி அமைகிறது. இது சர்வதேச அளவிலான இயக்கமாக வலுப்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 120 நாடுகளில் 1800 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சக தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டிகளைச் சந்தித்து உரையாடி ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

செயல்படும் விதம்

உங்களைப்போன்ற ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, விவாதித்து, ஒராணியாக செயல்பட்டு, புதிய பொருட்கள், சேவைகளை மற்றும் நிறுவனங்களை உருவாக்க வழி செய்வது தான் இதன் நோக்கம்.

  • வெள்ளிக்கிழமை; பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து மற்றவர்களுடன் இணைந்து செயல்படலாம். சிறந்த கருத்துக்களின் அடிப்படையில் அணிகள் உருவாகும்.
  • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை; உங்கள் கருத்துக்களை விவாதித்து அதை தீர்மானமான எண்ணமாக முன்வைத்து ஆதரவு திரட்டலாம். கருத்தின் அடிப்படையில் முன்னோட்ட சேவை அல்லது தயாரிப்பை உருவாக்கலாம். வாடிக்கையாளர் உருவாக்கம், கருத்துக்களின் செயல்பாட்டுத்தன்மை, அதிக சாத்தியம் உள்ள பொருளை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
  • ஞாயிற்றுக்கிழமை; மாலையில் முன்னோட்ட பொருளை காண்பித்து அது தொடர்பான பயனுள்ள கருத்துக்களை பெறலாம்.

யார் பங்கேற்கலாம்?

இதை ஒரு புதிய முயற்சிக்கான சோதனைக்களமான ஹேக்கத்தான் போல நினைத்துக்கொள்ளுங்கள். வர்த்தகம் மற்றும் அதற்கான டிசைனில் கவனம் செலுத்தப்படும். உங்கள் கல்வித்தகுதி போன்றவை பிரச்சனை அல்ல. புதுமைக்கான ஆர்வம் ஒன்றே தகுதி. பொதுவாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய சக பங்கேற்பாளர்கள்:

* ஹேக்கர்கள், தொழில்நுட்ப பித்தர்கள் (நெர்ட்கள்)

* சந்தையின் தேவையை விரல் நுனியில் வைத்திருக்கும் துறை வல்லுனர்கள்.

* தொழில்நுட்பத் திறன் படைத்த டிசைனர்கள்.

* அருமையான கருத்தை முன்வைத்து அதனை மையமாகக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க விரும்புகிறவர்கள்.

இந்த அம்சங்களை கொண்டவர்கள் ஒன்றிணைந்து ஸ்டார்ட் அப்களுக்கான குழுவை உருவாக்குகின்றனர்.

நீங்கள் ஏன் வரவேண்டும்?

நம்ம சென்னையில் தொழில்முனைவு சங்கமத்திற்கான அருமையான வாய்ப்பு இது;

  • ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், சி.இ.ஓக்கள், மற்றும் முதலீட்டாளர்களுடன் கைகுலுக்கலாம். எண்ணங்கள் மூலம் வலைப்பின்னல் அமைக்கலாம்.
  • உங்கள் கருத்தை முன்வைத்து சேவை அல்லது பொருளை உருவாக்கிக் காட்டும் வாய்ப்பு. இந்த சூழல் உங்கள் செயல்திறனை முடுக்கும்.
  • ஸ்டார்ட் அப் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்திக்கலாம். உள்ளூர் நிறுவனர்கள் நடுவர்களாகவும், பயிற்றுனர்களாகவும் இருப்பார்கள்.
  • முந்தைய நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை உலகம் முழுவதில் இருந்து சந்திக்கலாம்.

பரிசுகள்

ஒவ்வொரு குழுவுக்கும் செயலி மற்றும் இணையதளம் உருவாக்க 300 டாலர் மதிப்புள்ள கூகுள் கிளவுட் சேவை வசதி. இணைய முகவரி வழங்கப்படும்.

உணவு பற்றியும் கவலை வேண்டாம்.

தொழில்முனைவோர், நிறுவனர்-இணை நிறுவனர்கள், ஆர்வலர்கள் என எல்லாத் தரப்பினருமே தங்களுக்கான பலனை பெறும் வகையில் நிகழ்ச்சி அமையும். நீங்களும் தொழில்முனைவு ஆர்வம் உள்ளவர் எனில் பதிவு செய்து கொண்டு பங்கேற்க வாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு: Startup Weekend Chennai

பதிவு செய்ய: Startup Weekend

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரை:

மாணவர்களை தொழில்நுட்பத்தில் ஊக்குவிக்கும் அண்ணா பல்கலையின் 'குருக்ஷேத்ரா' விழா அறிவிப்பு!