முன்னோக்கிச் செல்லுங்கள், மனசாட்சியை விட்டு விடாதீர்கள் – முரளி கார்த்திக்

0

ஒன்பது வருடங்கள், 16 முறை மீண்டு வந்து.. இப்போதும் கூட அவரால் அனைவரையும் தனது பேச்சால் கட்டிப்போட்டு விட முடிகிறது. முரளி கார்த்திக், இடதுகை சுழற்பந்து வீச்சாளர். ஆற்றல் மிக்கவர். டெக்ஸ்பார்க்ஸ் 2015 நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றினார். கிரிக்கெட் ஆட்டமும் ஒரு தொழிலை நிர்வகிப்பதும் எப்படி ஒரே மாதிரியானவை என்று அவர் விளக்கினார்.

ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று தனது சொந்தப் பயணத்தை விவரித்தார் அவர். முரளி கார்த்திக் குடும்பத்தினர் வங்கித் தொழில் செய்து வந்தனர். அவரது பெற்றோருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதுதான் வேலை. பலருக்கும் அவர்கள் எப்படி வங்கிக் கடன் பெற்றுத் தந்து உதவினார்கள் என்பதைப் பற்றி நினைவு கூர்ந்தார் கார்த்திக்.

அப்போது கார்த்திக் முன்னால் இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று ஜெனிட்டிக் இன்ஜினியர், மற்றொன்று விளையாட்டு வீரர்.

இலக்கு

12 வயதில் முரளி ஒரு விளையாட்டு பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டார். விளையாட்டு ஆர்வம் அங்கே அவரை முழுமையாகத் தொற்றிக் கொண்டது. விளையாட்டுத்தான் தனது தொழில் என்று முடிவு செய்தார். கிரிக்கெட்டைத் தேர்வு செய்தார்.

இதே போலத்தான் தொழில் முனைவோரும் ஒரு இலக்கோடுதான் தொடங்குகின்றனர். “இலக்கு மிக மிக முக்கியம். ஆனால் அதை நீங்கள் எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.” என்கிறார் கார்த்திக்.

அதன்பிறகு அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஒரு பேட்ஸ்மேன் ஆனார். மெலிந்த, உயரம் குறைந்த, ஆனால் வலிமையான இந்த வேகப்பந்து வீச்சாளர் விரைவிலேயே சுழற்பந்து வீச்சாளராக மாற வேண்டியிருந்தது. பேட்டிங் ஆர்டரில் முதலில் த்ரி டவுனில் இருந்த அவர் செவன் டவுனுக்குச் சென்றார். அவருடைய தொழிலை மேம்படுத்திக் கொண்டு போட்டியில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணி ஒரு திறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளரை இப்படித்தான் பெற்றது.

இந்த அனுபவத்தை தொழில் நடத்துவதற்கு ஒப்பிட்டுப் பேசிய அவர்,

மாற்றம் நிலையானது. அது தொழிலாக இருந்தாலும் சரி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி. எனவே சூழலின் தேவைக்கேற்றவாறு என்னை மாற்றிக் கொண்டேன்.” என்றார்.

விடாமுயற்சி

சூழலில் ஏற்படும் மாற்றங்கள் தன்னைப் போன்ற ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை, தனது விளையாட்டு ஆர்வத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவில்லை என்கிறார் கார்த்திக்

“கிரிக்கெட் ஆட்டத்தை நாம் மிடுக்கான ஆட்டம் என்கிறோம். பயிற்சிக்கு நமக்கு அளிக்கப்பட்ட நேரத்திற்குள், நாம் செய்து முடிக்க வேண்டும். எனக்கு பழைய படிப்பை மாற்றி புதிதாக மீண்டும் கற்றுக் கொள்ள நிறைய இருந்தது. கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற விருப்பத்தோடு நின்று விடுவதல்ல. சூழலின் தேவைக்கேற்ப என்னை நான் மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருந்தது.” என்கிறார் அவர்.

இதே போலத்தான் ஒரு தொழில் முனைவோரின் வாழ்க்கையும். இயக்கம் மாறலாம் ஆனால் இலக்கு மாறுவதில்லை.

“120 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் எத்தனை பேர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்? நீங்கள் சரியான பாதையை நோக்கி பயணப்பட வேண்டியிருக்கிறது.” என்று கூறுகிறார் கார்த்திக். அவரைப் பொருத்தவரையில் எந்த ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் அவருக்கு இலக்கும் அதை அடைந்து விட முடியும் என்ற திடநம்பிக்கையும் வேண்டும்.

கொள்கையும் உறுதியும்

சரியான பாதை என்று அவர் குறிப்பிடுவது கொள்கைகளை.

"கொள்கை என்றால் நான் உண்மையில் விளையாட்டின் விதிகளைப் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் மனசாட்சி பற்றிக் குறிப்பிடுகிறேன். உங்கள் மனச்சாட்சிப்படி செயல்பட்டால், இரண்டு நாட்களுக்கு பின், இரண்டு வருடங்களுக்குப் பின் அல்லது 20 வருடங்களுக்குப் பின் எது எப்படி இருந்தாலும் முடிவில் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியான மனிதராக இருப்பீர்கள்.”

எல்லோருக்குமே மனச்சாட்சி இருக்கிறது. ஆனால் அதைத் தவற விடுகிறோம். உங்கள் மனச்சாட்சியைக் கேட்டு வேலை செய்வது உங்களை பின்னடையச் செய்யலாம். ஆனால் அது நீங்கள் குறுக்கு வழியைத் தேடுவதற்கான காரணமாகி விடக் கூடாது.

பார்வையாளர்களைப் பார்த்து, “ ஆப் கிரிக்கெட் தேக்தே ஹே. சப்கோ லக்தா ஹே, ஏ கைசே கேல் ரஹா ஹே டீம் மே?" (நீங்கள் கிரிக்கெட் பார்க்கிறீர்கள். ஒருவர் இந்த அணியில் எப்படி விளையாடுகிறார் என்று கூட நீங்கள் கேட்கலாம்)” என்று கூறினார் கார்த்திக்.

இது வெறுமனே ஒருவரது மெரிட்டில் வருவதல்ல. “ஓ மெரி கிஸ்மேட் கே லியே கேலா! மைன் அப்னே லியே கேலா (நான் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ளேன். நான் விளையாடுகிறேன். எனக்காக விளையாடுகிறேன்.)” என்கிறார் கார்த்திக்.

“நான் விளையாடவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியில்தான் இருக்கிறேன், ஏனெனில் “வேறு யாரோ ஒருவருக்கு நான் குட் மார்னிங் சொல்லிவிட்டேன்” என்ற மகிழ்ச்சிதான்.

தொழில் முனைவோர் தங்களது அடிப்படை நம்பிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கார்த்திக் கேட்டுக் கொண்டார்.

அணி விளையாட்டு

சோதனையான நேரத்தில் ஒருவர் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. அது அவசியம் என்று முரளிகார்த்திக் கூறினார். “ஒரு அணியில் ஒருவர் சரியாக விளையாடா விட்டாலும் அந்த அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்று மோசமான நாள்தான்” என்றார் அவர்.

கிரிக்கெட் அணி என்பது ஒருவருக்கொருவர் தோளோடு தோள் கொடுப்பது என்றார் கார்த்திக். அதே போலத்தான் ஒரு கார்ப்பரேட் டீமும். அங்கும் ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். ஒத்திசைந்த டீமாக வளர வேண்டும்.

மற்ற மிகச்சிறந்த நிறுவனர்களைப் போலவே முரளிக்கும் ஒரு திருப்புமுனையான சம்பவம் நடந்ததா?

நிச்சயமாக நடந்தது. அவர் தனது வழிகாட்டி பிஷன் பேடியுடன் சேர்ந்து லண்டன் சென்ற போது, பழம்பெரும் கிரிக்கெட் வீரர், வெஸ்ட் இண்டியன் பேட்ஸ்மேன் காளி சரனை ஒரு மேட்ச்சில் சந்திக்க நேர்ந்தது.

மேட்ச் முடிந்த பிறகு அவரை கார்த்திக்குக்கு அறிமுகப்படுத்தினார்கள். அந்த மகத்தான விளையாட்டு வீரன் இளம் கார்த்திக்கிடம், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு உங்களுக்கு குறைந்த அளவு திறமை போதும். ஆனால் மனம் முழுக்க ஏராளமான விருப்பம் வேண்டும்” என்றார்.

இந்த பந்து வீச்சாளர் தனது ஓய்வுக்குப் பிறகு கூட அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறார். நம்மிடம் ஏராளமான விருப்பங்களைத் தூண்டுகிறார்.