-35 டிகிரி குளிரில், உறைந்த பனி நடுவே நடந்து சென்று குழந்தையை பெற்றெடுத்த தாய்!

0

ஒரு குழந்தையை சுமந்து, பெற்று, வளர்ப்பதென்பது சாதரண விஷயம் இல்லை. அது ஒரு புதிய அனுபவமே. இங்கே லடாக்கில் வாழும் ஒரு தாய், தன் குழந்தைக்காக, அதன் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பயணத்தை பார்த்தால் நாம் வியப்பில் ஆழ்வது நிச்சயமே.

2014-ல் வட இந்தியா லடாக் பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பம், 45 மைல்கள் அப்பால் இருந்த மருத்துவமனைக்குச் செல்ல -35 டிகிரி செல்சியஸ் குளிரில் பயணிக்க வேண்டி இருந்தது. அவர்கள் உறைந்த பனி படர்ந்த சதார் ஆறை நடந்து கடந்தனர். 11,123 அடி உயரத்தில் இது போல் காலாற ஒன்பது நாட்கள் நடந்தனர். 

 பட உதவி: DailyMail
 பட உதவி: DailyMail

அதேப்போல் வீடு திரும்ப, மீண்டும் அதே தூரம் நடந்தவாறு திரும்பினர். ஆனால் இதை செய்தவர் அந்த குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண். இவர் தன் டெலிவிரிக்காக இத்தனை தூரம் நடந்து சென்று, மருத்துவமனையில் குழந்தையை பெற்றுவிட்டு மீண்டும் பிறந்த குழந்தையுடன் கடும்குளிரில் நடந்தே வீடு திரும்பியுள்ளார்.

பச்சைக்குழந்தையை ஒரு துணியில் நன்றாக சுற்றி, அதற்கு இதத்தை அளித்தவாறே லடாக் பகுதியில் நடந்து சென்றாள் அக்குழந்தையை பெற்ற தாய். அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரம் நடந்தனர். இதே போல் 9 நாட்கள் நடந்து மருத்துவமனையை அடைந்துள்ளனர்.

மெயில் ஆன்லைன் என்ற ப்ளாகில் குறிப்பிட்டுள்ள இக்கட்டுரை மற்றும் அதன் புகைப்படங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்துவிடும். லடாக் மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செய்து கொண்டிருந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் இக்குடும்பத்தினை வழியில் கண்டுள்ளார். 

டிம் வால்மர் என்ற ஐஸ்லாந்தை சேர்ந்த அந்த கலைஞர், கையில் குழந்தையுடன் ஒரு பெண் தன் குடும்பத்துடன் நடந்து செல்வதை பார்த்து, அவர்களின் பயணத்தை புகைப்படம் மூலம் கவர்ந்தார். அவர்கள் பிள்ளை பெற்று திரும்பியதையும் தன் கேமராவில் பதிவு செய்த டிம் தன் வலைத்தளத்தில் பதிவிட்டார். இது பற்றி கூறும் அவர்,

“ஒரு நாள் நான் ஒரு குடும்பத்தை கையில் ஒரு பிறந்த குழந்தை மற்றும் ஒரு சிறிய பிள்ளையுடன் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் நடந்து சென்று பிள்ளை பெற்றுவிட்டு மீண்டும் நடந்தே திரும்பி வருவதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். லடாக்கை சேர்ந்த ஒரு தாய் தன் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க எடுத்த துணிவான பயணத்தை கண்டு ஊக்கமடைந்தேன்,” என்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்களுக்கும் இங்கே வாழும் பலரில் வாழ்க்கையை பார்க்க நேரிட்டதும் ஒரு சிறந்த அனுபவமே என்கிறார் டிம். 

லடாக்கில் இருந்த புறப்பட்ட அந்த குடும்பம், தங்கள் மூத்தக் குழந்தைக்கு தேவையான உணவு, மலையில் தங்குவதற்கான டெண்ட் மற்றும் இதர சாமான்களையும் தங்களுடன் எடுத்துச்சென்றுள்ளனர். 

 பட உதவி: DailyMail
 பட உதவி: DailyMail

உறைந்த பனி ஓடையில், சிரமமான நடைப்பயணத்திடையே தங்களின் மகனை இவ்வுலகில் ஜனனிக்க வைத்த அந்த பெற்றோரை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

கட்டுரை: Think Change India