உங்களுடைய பிற்கால வாழ்க்கையை செலவிட நல்ல ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்துடுங்கள்: ஃபிளிப்கார்ட் நிகேத் தேசாய்

0

“நீங்கள் பத்து நாட்கள் வாழப் போகிறீர்கள். உங்களால் சில நபர்களைத் தேர்ந்தெடுத்து, யோசிக்காமல் அவர்களுடன் நேரம் செலவழிக்க உங்களால் முடியுமா” கேட்பவர் நிகேத் தேசாய், முன்னணி அலுவலர், ஃபிளிப்கார்ட். டெக்ஸபார்க் நிகழ்வின் முக்கியமான பேச்சாளர். அவருடைய அமர்வை, 24,564.5 என்ற எண்ணைக் காட்டி பேச்சைத் தொடங்கினார்.

இது ஓர் இந்தியனின் சராசரி வாழ்நாட்கள், அதில் 10,000 நாட்களை மட்டுமே அவன் வேலைபார்ப்பதற்காக செலவழிக்கிறான்.

“என்ன வேலை பார்க்கிறீர்கள், யாருடன் வேலை பார்க்கிறீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். உங்களைச் சுற்றி 10 ஆயிரம் நாட்கள் இருக்கின்றன. அதில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று நிகேத் கூறுகிறார்.

பன்முகத்தன்மையே திறவுகோல்

அவர் முன்னாள் தொடக்க நிறுவனத்தை ஓர் உதாரணமாகக் காட்டினார். அது சிலிக்கான் வேலியை சார்ந்து தொடங்கப்பட்டது. பல தரப்பட்ட நபர்களைக் கொண்டு 2008/ 200 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

“ஒரு நல்ல குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் திறனைப் பயன்படுத்தும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள். பஞ்ச்டு நிறுவனத்தில் நாங்கள் தனித்துவமான திறமைவாய்ந்த மூன்று நிறுவனர்கள், அவரவர்களுடைய திறமையைப் பயன்படுத்திக்கொண்டோம்” என்றார் நிகேத்.

பஞ்ச்டு இறுதியில் கூகுளால் சுவீகரிக்கப்பட்டது. அப்போது கூகுள் வேலட் திட்டம் நடந்துகொண்டிருந்தது. 2013ல் பஞ்ச்டு நிறுவனம் மூடப்பட்டது. அது நிகேத்துக்கு கவலையாக இல்லை. அவர் ஒரு குழுவை திரட்டினார். அது நீடித்த நட்பை அவருக்கு வழங்கியது.

சிறந்த குழுவை உருவாக்குதல்

“சிறந்த குழுவை உருவாக்கவேண்டும். அவர்கள் உலகை மாற்றமாட்டார்கள். ஆனால் அவர்கள் அதனை வரையறுப்பார்கள்” என்று பேசுகிறார் நிகேத். அவர்களுடைய வலிமையான திறமையான குழுவை உருவாக்க நிறுவனர்கள் தேவை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

ஒரு குழுவை உருவாக்குவதற்கு முன்பு மிக முக்கியமான கேள்வியை கேட்டுக்கொள்ளவேண்டும் என்பதை அவர் நம்புகிறார்: “இந்த நபர்களுடன் சேர்ந்து நீங்கள் 10 ஆயிரம் நாட்கள் வேலைபார்க்க விரும்புகிறீர்களா?”

ஒரு சிறந்த குழுவுக்கு கூகுளை மிகச் சிறந்த உதாரணமாகக் காட்டுகிறார் நிகேத். நிறுவிய குழுவினர் ஒற்றுமையாக 17 ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் கூடவே இருந்திருக்கிறார்கள்.

சாதாரணம் அசாதாரணமாக மாறும்

“நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நபர்களைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் தொடங்கும்போது சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் அனுபவம் அவர்களை அசாதாரணமானவர்களாக மாற்றிவிடும்” என்று விளக்கம் அளிக்கிறார் நிகேத்.

நிறுவனர்கள்தான் 10 ஆயிரம் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்பதை விரைவாக முடிவு செய்கிறார்கள் என்று தன் உரையை முடித்தார் அவர்.