'வில்க்ரோ' நடத்தும் சமூக நிறுவனங்களுக்கான 'Unconvention|L' சென்னை மாநாடு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கான பரிசுப்போட்டி!

0

'வில்க்ரோ' (Villgro) மற்றும் 'டை' (TiE) சென்னை இணைந்து, சமூக நிறுவனங்களுக்கான வருடாந்திர மாநாட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சமூக நோக்குடன் தொழில்முனையும் நிறுவனர்களை ஊக்குவித்து அதே சமயம் நாட்டில் சமூக நிறுவன இயக்கங்களை வளர்ப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இக்விட்டாஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பி.என்.வாசுதேவன், சம்முனாட்டி நிறுவனத்தின் நிறுவனர் அனில் குமார் போன்றோர்களின் எழுச்சியூட்டும் கதைகள், வில்க்ரோ நிறுவனர் பால் பேசில், எலேவர் ஈக்குவிடி ஆர் ராமராஜ், RTBI நிறுவனத்தின் சுமா பிரஷாந்த் போன்ற நிபுணர்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் இணை நிறுவனர் உமேஷ் மல்ஹோத்ரா மற்றும் சமூக தொழில்முனைவு அமைப்பான கமல் கிஷனின் நிறுவனர் தேவி மூர்த்தி போன்றோரின் தொழில்முனை முன்னோக்கு பார்வை ஆகியவைகளைக் கொண்டது இந்த மாநாடு. இதைத் தவிர பலதரப்பட்ட முதலீட்டாளர்கள், அடைகாக்கும் நிறுவனங்கள் நடத்துபவர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

'Impact-a-preneur Quest' என்ற விருது வழங்கும் நிகழ்வும் இம்மாநாட்டில் இடம்பெறும். சமூக மற்றும் மாற்று சிந்தனையுடன் தொழில்முனைபவர்களுக்கான போட்டியும் உள்ளது. இந்த போட்டியில் வெல்பவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை மட்டுமின்றி வில்க்ரோ அமைப்பின் ஆதரவும் பெற வாய்ப்பு உள்ளது. வெற்றியாளருக்கு வில்க்ரோ அமைப்பு வழிகாட்டுதலும், அறுபத்தைந்து லட்சம் ருபாய் நிதி உதவியும் அளிக்க உள்ளது.

"முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் எங்களைப் போன்ற இன்கூபேடர் முயற்சியால் இந்தியாவில் சமூக நிறுவனதிற்கான அமைப்பு வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தொழில் முனைதலுக்கான சூழல் நம்பிக்கையூட்டும் அளவில் இருப்பதால், 'Unconvention|L' (அன்கன்வன்ஷன் | எல்) போன்ற நிகழ்ச்சியின் மூலம் சமூக தொழில்முனை நிறுவனங்களுக்கான சூழலை உருவாக்க எண்ணுகிறோம்." என்கிறார் வில்க்ரோ அமைப்பின் இந்திய தலைவர் பி.ஆர்.கணபதி.

சி டைட்ஸ், எலேவர் ஈக்குவிடி, டீச் ஃபார் இந்தியா, விஐ டி, அசீஸ்ட் போன்ற நிறுவனங்கள் இந்த நிகழ்சியின் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர். தமிழ் யுவர்ஸ்டோரி ஊடக பார்ட்னராக இம்மாநாட்டில் இணைந்துள்ளது.

சென்னையில் நடக்கும் இந்த 'அன்கன்வன்ஷன் | எல்', இந்தியா முழுவதும் வில்க்ரோ நிறுவனம் நடத்தும் எட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகும். 2012 ஆண்டு முதல் இந்தியா முழுவதும் இது வரை 38 நிகழ்சிகளை 22 நகரங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட பார்ட்னர்களின் துணையோடு நடத்தியுள்ளது வில்க்ரோ. நாலாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கொண்ட இந்நிகழ்ச்சிகளில் 34 வெற்றியாளர்களும் இருப்பதியைந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் இதுவரை இதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி சென்னை  ஆள்வார் க்ரெளன் ப்ளாசா சென்னை அடையாறு பார்க்கில் இந்த  நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

மேலும் விவரத்திற்கு இணையதள முகவரி: Unconvention|L 

தொடர்பு கொள்ள: Aditi Seshadri +91-9867552332 | aditi@villgro.org mohan@villgro.org