குடும்பம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பார்வைக் குறைபாடுள்ள சித்துவின் ஐஏஎஸ் கனவை நினைவாக்க உதவுங்கள்!

0

அந்த மனிதன் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கதையை விவரிக்கும்போது, நான் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் அமேசான் காட்டில் ஒரு கிராமத்தில் இருக்கும்போது, நீங்கள் அங்குள்ள உள்ளூர் மொழியைப் பேசமாட்டீர்கள்.

இப்படி சொல்வது சரிதான், உடல் ஊனமும் வலிமை குறைவும் அகநிலையானது. மாற்றுத்திறனாளிக்கான இந்த விளக்கம், ஐம்புலன்களில் முழு செயல்பாடுகளைச் சார்ந்து இல்லாமல் இருக்கலாம். ஆனாலும்கூட, எந்த அளவுக்கு புலன்கள் செயல்பாட்டில், உற்பத்திமிக்கதாக இருக்கின்றன. இப்படி பரந்த வெளியில் விளக்கம் தரும்போது, சித்து லோட்டே மிகவேகமாக செயல்படுபவராக மற்றவர்களைவிட தயாராக இருப்பவராக பிரகாசமான எதிர்காலம் உள்ளவராக இருக்கிறார்.

பிறப்பிலே அவருக்கு கண் பார்வை இல்லாமல் போனபோது, அவரிடம் மிஞ்சியிருந்த மற்ற திறன்கள் சூப்பர் ஹியூமன் அளவுக்கு இருந்தன. முழுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டபோது, ஐந்தாவது வயதில் அதுவொரு பெரும் சுமையாக இருந்தது. வீடும் இல்லை, இந்த உலகில் உறவினர்களும் இல்லை, ஒரு பருக்கை சோறும் கிடையாது. ஆனால் 31 வயது சித்து, தன்னை ஒரு மனித கால்குலேட்டராக உருவாக்கிக்கொண்டார். சட்டம் படித்திருக்கிறார். தற்போது சிலரின் உதவியுடன் ஐஏஎஸ் அலுவலராகும் முயற்சியில் இருக்கிறார்.

இதுதான் அவரது வார்த்தைகளில் அவரது கதை – அவருடைய சோதனைகள் மற்றும் வெற்றிகளை தக்கவைத்துக்கொள்வதற்கான உற்சாகத்தைப் பெறுகிறார். தனக்குத் தெரிந்த அன்பான ஆங்கிலத்தில் பேசுகிறார் – தன் ஆளுமையின் வண்ணங்களை தக்கவைத்துக்கொள்கிறார்.

நான் பிறப்பிலேயே முழுமையாக பார்வையை இழந்துவிட்டேன். என் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டேன். சமூகத்தில் பாரமாக என்னை அவர்கள் நினைத்தார்கள். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்தார்கள். என்னுடைய வீட்டில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டேன். கர்நாடாக மாநிலம், ஹூப்ளியில் இருந்த ஒரு விடுதிக்கு அனுப்பப்பட்டேன்.

“எனக்கு எந்த ஆதரவும் இல்லை. பள்ளியில் எனக்கு நண்பர்களும் இல்லை. எந்த விளையாட்டைப் பற்றியும் விளையாடுவது எப்படி என்று யாரும் எனக்கு சொல்லித்தரவில்லை. எந்த விளையாட்டிலும் சேரவில்லை. பள்ளியில் எனது சீனியர் மாணவர் ஒருவரைப் பற்றி எனக்குத் தெரியவந்தது. அவர் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு 100 வரை வாய்ப்பாடு தெரியும். அவர் எல்லோரையும் மதிப்பார், எல்லோரையும் ஏற்றுக்கொள்வார். அவரைப்போல நானும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஏனெனில் என்னிடம் யாரும் பேசுவதில்லை. எல்லோரும் என்னை புறக்கணித்தார்கள். ஒரு வருடம் முழுவதும் வாய்பாடுகளை மனப்பாடம் செய்தேன். ஆனால் ஒவ்வொருவரும் நான் வெறுமனே தூங்கி, நேரத்தை வீணடிப்பதாக நினைத்தார்கள். அதில் உறுதியாக இல்லாததால் நான் என்ன செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்லவில்லை. இறுதியில், அந்த தருணம் வந்தது. 56 லட்சம் வரையில் வாய்ப்பாடு படித்திருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது.

அடுத்த வாரத்தில் வகுப்பு தொடங்கியபோது, நாங்கள் பத்து வரையிலான வாய்ப்பாடுகளை சொன்னோம். என்னுடைய ஆசிரியர்கள் என்னை அந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. என்னை எச்சரித்தார்கள். ஒருவேளை நான் சரியாக சொல்லியிருக்க வில்லை என்றால், அவர்கள் என்னை பள்ளியை விட்டே வெளியேறச் சொல்லியிருப்பார்கள். நான் சுமையாக இருந்திருப்பேன்.

நான் சிரித்துக்கொண்டே அவர்களிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்றேன். பத்து வரையில் மட்டுமல்ல 56 லட்சம் வரையில். அந்த ஆசிரியை அதை நம்பவில்லை. அவர் என்னிடம் 38,976 ன் வாய்ப்பாட்டை கேட்டார். நான் பதில் அளித்தேன். எனக்கு ஏதோ திறமை இருக்கிறது என்று உணர்ந்தார்கள். மற்ற பாடங்களில் எனக்கு நல்ல ரேங்க் கொடுத்தார்கள்.

ஆனால் அவர்கள் என்னை வெற்றிக்கோப்பைகள் பெற்றுத்தரும் மாணவனாகப் பயன்படுத்தினார்கள். திறனை வெளிக்காட்டும் போட்டிகள் மற்றும் விருது விழாக்களில் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் அந்த தருணத்தில் விருந்தினர்கள் போனதும், என்னை அவமானப்படுத்துவார்கள். என்னுடைய பரிசுப் பணம் அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள். என் பள்ளி என்னால் 15 – 20 லட்சம் ரூபாய் சம்பாதித்தது. ஆனால் ஒரு நயாபைசா கூட எனக்குக் கொடுக்கவில்லை.

இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு ஹாஸ்டலில் தங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. முற்றிலும் என்னிடம் பணம் இல்லை. நான் எங்கேயும் போகமுடியவில்லை. நான் சாப்பிடுவதற்காக பிச்சை கேட்கும் அளவுக்குப் போனேன். பெல்காமில் உயர்நிலைப்பள்ளியில் சேர்வதற்கும் இப்படித்தான் இரண்டு மாதங்கள் கடந்தன.

புதிய பள்ளியில் சேர்வது எனக்கு மிகப்பெரிய அடுத்த சவாலாக இருந்தது. அனைத்து முதலிடம் வகிக்கும் மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டேன். படிப்பில் சிறப்பாக இருந்தேன். அதுவே என் பெயர் மற்றும் புகழின்மீது பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அந்த ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். என் வளர்ச்சியின்மீது பொறாமை கொண்டவர்கள் அவற்றை அழித்துவிட்டார்கள். இப்போதும் நான் 85 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். ஆனாலும் சான்றிதழ்கள் இல்லை.

அடுத்து என்ன?

பத்தாம் வகுப்புக்குப் பிறகு, எனக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கும் குறைவாகவே சாப்பாடு கிடைத்தது. மீண்டும் நான் பிச்சை எடுக்கத் தொடங்கினேன். ஆனால், நான் சில தகுதிகளையும் சில சான்றிதழ்களையும் மீண்டும் பெற்றேன். அப்போது எனக்கு கர்நாடாக அரசு பேருந்து இலவச பயண அட்டை கொடுத்திருந்தார்கள். அதை வைத்துக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்றேன். நான் அங்கு சென்றிருந்தது ஒரு வெள்ளிக்கிழமையில், ஏதோ காரணத்துக்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தது. நான் போக வேண்டிய கம்ப்யூட்டர் மையம் பூட்டிக்கிடந்தது. அடுத்து சில செய்தித்தாள்களை வாங்கி, அதனை விரித்து பேருந்து நிலையத்தில் தூங்கினேன். அப்போது எனக்கு மிகவும் பசியாக இருந்தது. பணத்திற்காக பிச்சையெடுத்தேன்.

இறுதியில், திங்களன்று அந்த மையத்திற்கு சென்றேன். அங்கிருந்த பெண்மணி, சரளமாக கன்னடம் தெரிந்தும் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார். என்னிடம் கன்னடத்தில் பேசுமாறு கூறினேன். அவர் கத்தினார். நான் பதில் ஏதும் சொல்லவில்லை. நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். பதினைந்து நாட்களுக்குள் அவர் கேட்கும் எந்த மொழியிலும் பதிலளிப்பேன் என்று சவால் விட்டேன்.

ஆங்கில வகுப்புகளில் சேர்ந்தேன். எல்லோரிடமும் ஆங்கிலத்தில் பேசி வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன். ஒரு நாள் வகுப்புக்குப் போக தாமதமாகிவிட்டது. அதற்கு அனுமதி கேட்டு போகவேண்டும். இதுதான் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு. ஆங்கிலத்தில் பேசினேன். “ஹலோ, வணக்கம் மேடம். நான் உள்ளே வரலாமா”. அவருக்கு ஆச்சரியம். “சித்து, எப்படி ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்” என்று கேட்டார். “உங்களுக்கு அந்த சவால் நினைவில் இல்லையா. நான் கற்றுத் தேர்ந்திருக்கிறேன். நன்றி” என்றேன். 

இன்று நான் ஆங்கிலத்தை போதிக்கிறேன். 60 நாட்களில் ஆங்கிலத்தில் பேச கற்றுத்தருகிறேன்.

பெங்களூருவில் உள்ள விஷ்வா சேத்னா ஜூனியர் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இரண்டு மாதங்கள் பிச்சையெடுத்து கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டேன். எனக்கு விடுதி வசதி கிடைக்கவில்லை. எனக்கு வீடும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக பேருந்து இலவச பயண அட்டை இருந்தது. வகுப்புகளை முடித்துவிட்டு பெங்களூருவில் இருந்து ஹூப்ளி செல்வதற்கு 10 மணி நேரம் ஆகிவிடும். பேருந்திலேயே தூங்கிவிடுவேன். பிறகு எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பெங்களுருவுக்குப் புறப்படுவேன். இதனால் கல்லூரியில் ஒருசில நாள் வகுப்புகளை விட்டுவிடுவேன். வருகைப் பதிவில் மிகவும் குறைவாக இருந்தேன். நான் தேர்ச்சி பெறமாட்டேன் என்று கல்லூரியில்கூட சொன்னார்கள்.

தோல்வி என்பது என் அகராதியில் கிடையாது என்று அவர்களிடம் கூறினேன். ஆறு நாட்களில் தேர்வுக்காக படித்து 65 சதவீதம் பெற்றேன். எனக்கு ஐஏஎஸ் அலுவலர் ஆவதுதான் இலட்சியக் கனவு. எந்த நிலையிலும் அந்த இலக்கை அடைந்து, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வேன்.

இந்த நேரத்தில், நான் 99 கோடி வரையில் வாய்ப்பாடுகளை கற்றிருந்தேன். என்னுடைய அறிவை எல்லாம் எங்கே சேகரித்து வைத்திருக்கிறேன் என்று ஒவ்வொருவருக்கும் அறிந்துகொள்வதில் ஆர்வம். ஆனால் இது என்னுடைய சொந்தமாக வகுத்துக்கொண்ட முறை.

எனக்கும் சகுந்தலா தேவிக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் கரும்பலகையில் கணக்கிடுவார், ஆனால் நான் சொல்வேன். என்னுடைய நினைவில் 45 ஆயிரம் தொலைபேசி எண்கள் இருக்கின்றன. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியைச் சொன்னால், அது எந்த நாள் என்று சொல்லிவிடுவேன்.

நான் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரியத் தொடங்கியிருக்கிறேன். பார்வையற்ற ஒருவர் காட்சி ஊடகத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறையாக இருக்கும். அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் சித்து ஸ்விட்ச்.

தற்போது சட்டம் படித்துவிருகிறேன். சோதிடராகவும் ஆலோசகராகவும் விளங்குகிறேன். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன். சட்டப்படிப்பில் இறுதியாண்டில் இருக்கிறேன். ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளுக்கு டெல்லி செல்லவேண்டும். ஆனால் அதற்கு நிதியுதவி தேவைப்படுகிறது. என்னுடைய முயற்சிகள் உயர்வானவை, என் எண்ணங்களும் அப்படித்தான். என்னுடைய முழு கவனத்தையும் அடுத்த ஆண்டு தேர்வுக்குக் கொடுக்கப்போகிறேன்.

சாதாரண மனிதர்கள் வேகமாக படித்துவிடுவார்கள். எனக்கு நேரம் பிடிக்கும். எனக்கு பிரத்யேக கருவி தேவைப்படுகிறது. தற்போது சிலர் உதவுகிறார்கள். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் படிப்பதற்கு கருவிகள் இருக்கின்றன. அந்தக் கருவிகள் மற்றும் பிரெய்லி பிரிண்டர் அல்லது தட்டச்சு எந்திரம் வாங்குவதற்கும் பணம் திரட்டிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு எந்தவித இரக்கமும் தேவையில்லை. எனக்கு படிப்பதற்கான வாய்ப்புகள் வேண்டும் அவ்வளவுதான். நாட்டிற்காக நான் சேவை செய்வேன். எல்லோரும் இந்தியாவின் சுதந்தரத்திற்காக உழைக்கவேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து பொது மக்களுக்கு உதவவேண்டும்.

கூட்டு நிதி திரட்டல் தளம் 'இம்பாக்ட் குரு' எனும் தளம் மூலம், சித்து பிரத்யேக கருவிகளை வாங்குவதற்காக 1.5 லட்சம் ரூபாய் சேகரிக்கும் முயற்சியில் இருக்கிறார். வாய்ப்பிருந்தால் நீங்கள் அவருக்கு உதவலாம். 

உதவி செய்ய க்ளிக் செய்யுங்கள்

ஆக்கம்: BINJAL SHAH |தமிழில்: தருண் கார்த்தி