மத்திய பட்ஜெட்’18: இந்திய விவசாயிகளுக்கான மோடி அரசின் திட்டங்கள்...

0

விவசாய வருமானத்தை உயர்த்தும் வகையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பசுமை செயல் திட்டத்தை அறிவித்துள்ளார். 2019 பொதுத்தேர்தல்களுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்களை ஈர்க்கும் வகையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்பவே, விவசாயத் துறை உள்கட்டமைப்பு வசதிக்கான தரவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறைக்கான கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.8.4 லட்சம் கோடியாக இருந்தது.

பட உதவி: பிளிக்கர்/ பருவநிலைமாற்றம், விவசாயம், உணவு பாதுகாப்பு
பட உதவி: பிளிக்கர்/ பருவநிலைமாற்றம், விவசாயம், உணவு பாதுகாப்பு
“மின்னணு தேசிய விவசாய சந்தையில் (இ-என்.ஏ.எம்) அரசு கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் சந்தை விலையை பெறுவது மற்றும் சந்தையை அணுகும் வாய்ப்பு பெறுவது முக்கியம். விவசாய பூங்காக்கள் மூலம் வேளாண் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது நல்ல விஷயம்,”

என்று ஆரின் கேபிடல் தலைவர் மோகன்தாஸ் பை கூறியுள்ளார். சலுகைகளை மட்டும் அறிவிப்பதைவிட, அரசு விவசாயத்துறையின் உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்க விரும்புவதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். விவசாயத்துறைக்கான சலுகைகள் மூலம், இத்துறை ஏற்றுமதி 30 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது.

”இயற்கை வேளாண்மைகான ஆதரவு மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு விலை ஆகியவற்றை வரவேற்கிறோம். பசுமை செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது,”

என்று பார்ம் எகைன் நிறுவனர் பென் ராஜா கூறியுள்ளார். 

பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு இருக்கும்.

* மொத்தமாக 470 ஏ.பி.எம்.சி- கள், விவசாயிகள் விலையை கண்டறியம் மண்டிகளை தொடர்பு கொள்ள உதவும், இ-என்.ஏ.எம்- களுடன் இணைக்கப்படும்.

* விவசாயிகள் நல்ல விலையை பெறும் வகையில், நிதி ஆயோக் மூலம் 22,000 விவசாய மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* மீன் வளர்ச்சி மற்றும் கால்நடை வளர்ச்சிக்காக ரூ.10,000 கோடி நிறுவப்படும்.

* விவசாய ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராக உயர்த்த 42 உணவு பூங்காக்களுடன் தொடர்பு உருவாக்கப்படும்.

* சேமிப்பு வசதியை மேம்படுத்துவதோடு, விவசாயத்திற்கான முன்பேர சந்தையை அரசு உருவாக்கும்.

* 10,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட இயற்கை வேளான் பண்ணைகள் ஊக்குவிக்கப்படும்.

* விவசாயிகளை சந்தையுடன் இணைக்கும் பசுமை செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உள்கட்டமைப்பு சார்ந்த ஒதுக்கீடாக இருக்கும்.

இவற்றின் மூலம் விவசாயத்துறை எந்த அளவு உற்பத்தி செயல்திறன் மிக்கதாக மாறுகிறது என பார்க்க வேண்டும். இத்துறை 65 சதவீத இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தாலும், ஜிடிபியில் 10 சதவீத பங்கு மட்டுமே வகிக்கிறது.