'SaaS மையமாக சென்னை திகழ்கிறது'- சிஐஐ கருத்தரங்கில் சுரேஷ் சம்பந்தம் பேச்சு...

0

ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பிட்ட பிரிவுகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். அதுபோல சென்னை, 'சாஸ்’ SaaS (Software as a service) மையமாக செயல்பட்டு வருகிறது என ஆரஞ்ச் ஸ்கேப் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கூறினார். தொழில் முனைவோர்களுக்காக இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

”சாஸ்’ பிரிவின் மூலம் கிடைக்கும் வருமானம், இந்த பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் இந்த பிரிவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள நிதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சென்னை சாஸ் மையகாக திகழ்கிறது என்னும் முடிவுக்கு வரமுடியும்.

”சென்னையில் செயல்பட்டு வரும் SaaS நிறுவனங்களின் வருமானம் 100 கோடி டாலர் (ரூ.7,000 கோடி) என்னும் அளவில் இருக்கிறது. அதேபோல சென்னையில் மட்டும் இப்பிரிவில் 10,000 பணியாளர்கள் உள்ளனர். இந்த துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு 50 கோடி டாலர் அளவுக்கு நிதி கிடைத்திருக்கிறது. மற்ற துறைகளை எடுத்துக்கொண்டால் கிடைக்கும் முதலீட்டை விட வருமானம் குறைவாக இருக்கும். ஆனால் சென்னையில் உள்ள `சாஸ்’ நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள முதலீட்டை விட வருமானம் அதிகமாக ஈட்டுகின்றன,” என்றார்.

ஜோஹோ, பிரஷ்வொர்க்ஸ், சார்ஜ்பீ, கிளவுட் செரி உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜோஹோ முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவு சிறப்பாக இருக்கிறது என்னும் பட்சத்தில் அங்கு திறமையான பணியாளர்கள், முதலீடு, சூழல் என அனைத்தும் இருக்கிறது. இதேபோல பல தொழில்மையங்களை உருவாக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் செயல்படும் SaaS நிறுவனங்களின் வருமானம் 1,000 கோடி டாலரை எட்டும் வாய்ப்பு இருக்கிறது என சுரேஷ் குறிப்பிட்டார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தென் இந்தியாவில் வென்ச்சர் கேபிடல் முதலீடுகளுக்கு உள்ள வாய்ப்புகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு உள்ள உறவு, கல்வி நிறுவனங்களில் செயல்படும் தொழில்முனைவோர் மையம் மற்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில்முனைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முதலீடுகள் குறித்து ஸ்பார்க் கேபிடல் ராமகிருஷ்ணன் கூறியதாவது,

“தற்போது சந்தையில் முதலீடுகளுக்குக் குறைவில்லை. போதுமான முதலீடுகள் உள்ளன. ஆனால் அனைத்து முதலீடுகளுக்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்றவையா என்பது முக்கியமான கேள்வி. முதலீட்டாளர்களின் தேவை வேறு, தொழில்முனைவோர்களின் தேவை வேறு. விரிவடையும் வாய்ப்பு இல்லாத தொழிலுக்கு வென்ச்சர் கேபிடல் முதலீடு கிடைக்காது. தவிர முதலீடுகள் என்றால் வென்ச்சர் கேபிடல் முதலீடுகள் மட்டும் கிடையாது,” என்றார்.

வென்ச்சர் டெட், அரசாங்க கொடை, பியர் டு பியர் லெண்டிங் உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ளன. இதை விட முக்கியம் தொழில் நடத்துவது என்பது முதலீட்டை பெறுவதற்கு கிடையாது என்பதை தொழில்முனைவோர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.

வென்ச்சர் ஈஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரத் நாரு கூறும்போது, 

வென்ச்சர் கேபிடல் முதலீடு சமயங்களில் தொழில்முனைவோர்களுக்கு பிரச்சினையாகவும் மாறலாம். அதனால் சரியான, தேவையான முதலீட்டினை பெற வேண்டும்,” என கூறினார்.

கிளவுட்செக் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சசி கூறியதாவது, நான் கல்லூரியில் இணையும் போதே இங்கு புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியாது என தெரிந்துவிட்டது. அதனால் பெரும்பாலான நேரங்களில் இணையம் வழியாக கற்றுக்கொள்ள ஆரம்ப்பித்தேன். மூன்றாம் ஆண்டு முடிவுல் பூனேவில் உள்ள நிறுவனத்தில் பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்து. அதனால் கல்லூரி படிப்படை விட்டுவிட்டு பூனேவுக்கு சென்றேன். டிகிரி இல்லாமல் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அந்த ரிஸ்கினை அப்போது எடுத்துதான் ஆக வேண்டும். 

பயிற்சிக்கு சென்ற நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன். அந்த நிறுவனத்தை வேறு நிறுவனம் கையகப்படுத்தியது. அதனை தொடர்ந்து வேறு நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றேன். அங்கு வேலை செய்யும் தகுதி இருந்தாலும், என்னிடம் டிகிரி இல்லை. இருந்தாலும் எனக்காக பிரத்யேக அனுமதி பெற்று எனக்கு அங்கு வேலை வாய்ப்பினை வழங்கினார். அங்கு சில ஆண்டுகள் இருந்த பிறகு கிளவுட்செக் நிறுவனதை தொடங்கி இருக்கிறேன்.

“தற்போது எங்கள் நிறுவனத்துக்கு முதலீடு கிடைத்திருக்கிறது. நான் சொல்ல வருவது ஒவ்வொரு கட்டத்தில் ஒரு ரிஸ்கினை எடுத்திருக்கிறேன். ஆனால் அந்த ரிஸ்க் தீர ஆராயப்பட்டு எடுத்தவையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

சிறு நகரங்களில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து ஆந்திர அரசின் உயரதிகாரி வின்னி பட்ரோ கூறியதாவது,

”தொழில்முனைவு என்றாலே பெரிய நிறுவனங்களில் மட்டும்தான் செய்ய முடியும் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த நிலைமை விரைவில் மாறும் என நினைக்கிறேன்.” 

ஆந்திராவை எடுத்துக்கொண்டால் பெரிய நகரமே கிடையாது. புதிதாக நகரங்களை உருவாக்கி வருகிறோம். இதில் தொழில்முனைவினையும் நாங்கள் கவனமாக எடுத்துகொண்டிருக்கிறோம். தொழில்முனைவு என்பதே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான். பெரிய நகரங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இனி சிறு நகரங்களில் உள்ள பிரச்சினைகளைதான் தீர்ப்பதன் மூலமே தொழில்முனைவு அடுத்தகட்டத்துக்கு செல்லும். தவிர பெரிய நகரங்களில் பணி, குடும்பத்துக்கு சரி சமமான நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் சிறு நகரங்களில் work life balance பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும் சிறு நகரங்கள்தான் முக்கிய சந்தையாகவும் இருக்கும்.

ஆந்திராவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற உயரதிகாரிகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வந்திருக்கின்றனர். ரிவெர்ஸ் மைகிரேஷன் தொடங்கி இருக்கிறது. இதேபோல இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு இடம்பெயர்வதும் நடக்கும் என வின்னி பட்ரோ கூறினார்.

கட்டுரையாளர்: வாசு கார்த்தி

Related Stories

Stories by YS TEAM TAMIL