பழங்குடி மக்களுக்கான ஐடி நிறுவனம்: ’வில்லேஜ் குவெஸ்ட்’

1

அமிதாப் சோனியின் தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிதயா, பழங்குடி மக்களுக்காக ஐடி நிறுவனம் ஒன்றினை துவக்கியுள்ளது. அதன் பெயர் ’வில்லேஜ் குவெஸ்ட்’. நகரத்திற்கு அம்மக்கள் இடம்பெயர்வதை தவிர்க்கவும், பழங்குடி பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக இருக்கவும் இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய வாழ்வை அர்பணிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் அமிதாப் சோனிக்கு அது மிகவும் எளிதாக அமைந்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டில் சமூக நலத்துறையில் வேலை செய்துவிட்டு, ஜூலை 2014 இந்தியா வந்த அமிதாப், அபிதயாவை துவக்கினார்.

”இங்கிலாந்தில் பணிபுரிந்தது, எவ்வாறு குடியரசு செயலாற்றுகிறது, எவ்வாறு இங்குள்ள அமைப்பு செயல்படுகிறது, மக்களும் அரசும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்காக. எப்போதும் நமது தேசத்திற்கு மீண்டும் வந்து, அதற்காக ஏதேனும் செய்யவேண்டும் என்பதே. ஆனால் கற்பதற்கு அதிகமாக இருந்ததால், இந்தியா வர அதிக காலம் ஆனது,” என்கிறார் அமிதாப். சர்வதேச வணிகத்தில் அவர் மாஸ்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

பிப்ரவரி 2015 ல் நண்பர்களிடம் இருந்து பணம் பெற்று, போபாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேகடியா என்னும் பழங்ககுடி கிராமத்தில் தனது வேலையை துவக்கினார் அமிதாப். அதே மாதம் அபிதயாவை துவக்கி அந்த கிராமத்தையும் அதை சுற்றி இருந்த மற்ற மூன்று கிராமங்களையும் தத்து எடுத்துகொண்டது அபிதயா. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், ஆசிரியர்களோடும், பழங்குடியின இளைஞர்களோடும் இணைந்து நான்கு துறைகளில் கவனம் செலுத்துகின்றனர். படிப்பு, வேலை மற்றும் வாழ்வாதாரம், நீர் மேலாண்மை, அவர்களுக்கான ஆட்சியை மேம்படுத்துதல்.

“எங்களை போன்ற பல தொண்டு நிறுவனங்கள் செய்யும் அடிப்படை தவறு என்ன வென்றால், அனைத்து விஷயங்களையும் பாமர கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இம்மக்களிடம் அதிகமான அறிவாற்றல் உள்ளது. இங்கு குற்றங்களில் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளது. போட்டி இல்லை, பேராசை இல்லை. இவற்றை அவர்களிடத்தில் இருந்து நாம் கற்க வேண்டியவை. இவர்களிடமிருந்து நாங்கள் கற்கவும் இந்த ஏற்பாட்டை ஏற்படுத்தினோம்.”

வில்லேஜ் குவெஸ்ட் : பழங்குடியினருக்கான ஐடி அமைப்பு

இந்த கிராமங்களில் இருந்து நகரத்திற்கு சென்று அங்கு வேலை தேடுவது வளர்ந்து வரும் பழக்கமாக உள்ளது. அதனை இங்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த ஒரு உத்வேகமாக நாங்கள் எடுத்துகொண்டோம். ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் வில்லேஜ் குவெஸ்ட்டை துவக்கினோம். இது இந்த கிராமத்தின் இளைஞர்களால் துவங்கப்பட்ட ஐடி முயற்சியாகும். அதனை 5 இயக்குனர்கள் குழு மேற்பார்வையிடும்.

இந்த அணி பயன்படுத்திய கணினிகளை வாங்கி, அலுவலக அமைப்பிற்கு தேவையான மரச்சாமான்களில் முதலீடு செய்தது. தற்போது எங்கள் ஐடி அலுவலகம் ஒரு தரமான தொழில்முறை ஐடி நிறுவனம் போல காட்சி அளிக்கின்றது. விவசாயக் குடும்பத்தில் இருந்து வரும் இந்த இளைஞர்கள், கடினமான உடல் உழைப்பு கொடுத்தவர்கள். கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வது இவர்களுக்கு சர்வ சாதாரணம். அவர்களுக்கு தேவையான அறிவை அளித்து, அவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிவிட்டால், முழுகவனத்தோடு, வேலை செய்யத் துவங்கி விடுகின்றனர்.

இந்த இளைஞர்கள் பெரும்பாலும் படித்தவர்களாகவும், எம்எஸ் ஆபீஸ் போன்ற அடிப்படை மென்பொருள் அறிந்தவர்களாகவும் உள்ளனர். கல்லூரியில் மட்டுமே அவர்கள் கணினி பயன்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு தகவல் பதிவிடும் வேலையை போப்பாலில் இருந்து வரும் படித்து முடித்த அல்லது படித்து கொண்டிருக்கும் தன்னார்வ இளைஞர்கள் கற்பிக்கின்றனர். மேலும் மூவர், டெல்லியில் இணைய தொழில்நுட்பத்திலும், கோடிங்கிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சரியான மார்க்கெட்டிங் அணியின்றி, அபிதயா அவர்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் நடத்தும் ஐடி நிறுவனங்களை அணுகுகின்றனர். வில்லேஜ் குவெஸ்ட் அவர்கள் கிராமத்திலேயே இருப்பதால், அதில் 16 பேரும் வேலை வரும்பொழுது வேலைக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் இந்த அலுவலக வசதிகளை பயன்படுத்தலாம்.

ஐடி துறையில் தகவல்களை பதிவிடுதல் என்பது ஒரு சிறிய முயற்சியாகும் . தற்போது இவர்களது மிகப்பெரிய சவால், மின்சாரம் துண்டிக்கபடுவதை தவிர்ப்பது. இதனை எதிர்கொள்ள கிரௌட் ஃபண்டிங் முறையில் ஒரு பிரச்சாரம் துவக்கியுள்ளனர். அதில் பெறப்படும் நிதி மூலம் சூரிய தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் பெறப்படும்.

அபிதயா செய்யும் வேலைகள் :

அபிதயா அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மரப்பலகை மேஜை நாற்காலி, மதிய உணவுத்திட்டம், கழிப்பறை, மின்சார வசதிகள் என அனைத்தையும் செய்துள்ளது. பஞ்சாயத்து மூலம் எவ்வாறு பலனடைவது என்பதை அங்குள்ள இளைஞர்களுக்கு விளக்கவும் செய்கின்றனர். இந்நிறுவனத்தின் தலையீடு காரணமாக பஞ்சாயத்தின் கல்வி மற்றும் சுகாதரா பணிகளில் அந்த கிராம இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

17 பெண்கள் 1 ஆண் என பதினெட்டு பேர் தனியார் பள்ளிகளில் பயில பதினெட்டு குடும்பங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. அதில் ஒரு மாணவர் போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிடுட்ல் பயில தேர்வாகியுள்ளார். மற்றொருவர் டெல்லியில் உள்ள ஸ்ரீஜன் என்ற ஐடி நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் செய்து வருகின்றார். 

”எங்களது முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாக இவற்றை நாங்கள் கருதுகின்றோம்” என்கிறார் அமிதாப்.

இந்த கிராமத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் கணினி அடிப்படைகளான தட்டச்சு, எம்எஸ் ஆபீஸ் மென்பொருள், எம்எஸ் பெயிண்ட் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றது. அதனை 200 குழந்தைகள் வரை தற்போது கற்கின்றனர்.

கிராமத்தில் தற்போது பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சிறிய அளவில் தடுப்பணைகள் மற்றும் குளங்கள் அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

“அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க நாங்கள் முயன்று வருகின்றோம். அதே சமயம் இந்த கிராமமும் மாறிவிடாது காப்பதில் கவனம் செலுத்துகின்றோம். என முடித்துக்கொண்டார் அமிதாப்.

கட்டுரையாளர் : சிரிஷா |  தமிழில் : கெளதம் தவமணி.