விளையாட்டாக, விளையாடிற்காக பிறந்த செயலி - 'ஹூ வின்ஸ்'

0

ஒரே மாதிரியான உடை, இடம் முழுதும் உண்ண உணவு, மற்றும் தொலைகாட்சி முன்பு குழுமி இருக்கும் நண்பர்கள் குழு. விளையாட்டு பிரியர்கள் அனைவர்க்கும், இந்த காட்சி எதை பற்றியது என்று தெளிவாக தெரியும்.மேலும் இது போன்ற தருணங்களில், அங்கு மிக சகஜமாக நிகழும்,விவாதங்கள் பற்றியும் நீங்க அறிவீர்கள், எந்த வீரர் நன்றாக விளையாட வேண்டும், யார் மேலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், இப்படி அதன் நீளம் மிக அதிகம்.

Team @ Who Wins
Team @ Who Wins

அனைத்தையும் துவக்கிய ஒரு விவாதம்

மேலே கூறியது போன்ற ஒரு விவாதத்தில் தான், விவேகானந்த கோராய், அபினவ் ஆனந்த், மற்றும் அமித் கைத்தான், ஈடுபட்டிருந்தனர். கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு ஒரு மாதம் இருந்த நிலையில், இந்த விவாதம் நடைபெற்றது. அந்நிலையில், கிரிக்கெட் பற்றி அனைத்து இடங்களிலும், விவாதங்கள் தொடங்கி விட்டன.

ஒரு விடுதியில் அமர்ந்து, இந்தியா கோப்பையை கைப்பற்றுமா இல்லையா என இவர்கள் மூவர் விவாதித்த வண்ணம் இருந்தனர். அதை பற்றி விவேகானந்த் கூறுகையில் "இந்தியாவில் அனைவரும் தங்களை, ஒரு விளையாட்டு வல்லுனராக கருதுகின்றனர். மற்றவர்கள் அனைவரை விடவும் தாம் அறிந்தது அதிகம் என்பது அவர்கள் கருத்து.

சில நேரங்களில், அங்கு விளையாடும் நபரைக் காட்டிலும், நமக்கு அதிகம் தெரியும் என்ற மனப்பான்மை உள்ளது. விராத் கோலி, ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டாமல், ஏன் மெதுவாக தட்டுகிறார், 5 ஓவர் மட்டுமே உள்ள நிலையில் ஏன் தோனி தனது ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை?" இவ்வாறான கேள்விகள் நமக்கு புதிதல்ல.

செயலி உருவாக்கம்

இப்படி பட்ட பேச்சுக்கள், எங்களை சிந்திக்க வைத்தது. ஒரு செயலியில், மக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் வாய்ப்பு அமைந்தால்? தங்களுக்கு பிடித்த விளையாட்டில், தாங்கள் தான் சிறந்தவர் என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தால்? அதோடு, அவர்கள் முயற்சிக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு பரிசுகளும் கிடைத்தால்?

இக்கேள்விகளுக்கு பதில் தேடியும், சந்தை பற்றி அறிந்து கொள்ளவும், ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், வினாடி வினா செயலிகளும், விளையாட்டை பற்றி கணிக்கும் செயலிகளும் இருந்தாலும், அவற்றில் தேவையான அளவு கேளிக்கை இல்லை என்பதை உணர்ந்தனர்.

விவேகானந்த் கூறுகையில், "ஒரு போட்டியை ரசிக்கும் பொழுது, மெதுவாக சுவாரஸ்யத்தை கூட்டுவது, நண்பர்களோடு கேளிக்கை கொள்வது, மேலும், அத்தனை நேர முயற்சிகளுக்கான பாயிண்ட்டுகள் சேர்த்து, சிறந்த பரிசுகள் பெறுவது போன்றவை இல்லாமல் இருந்தது.

இதுவே "ஹூ வின்ஸ்" (WhoWins) செயலியை நாங்கள் துவக்க காரணமாக அமைந்தது. அது தற்போது, உபயோகிப்பவர், அவரை போன்ற மற்ற விளையாட்டு பிரியரிடம் கேள்விகள் கேட்கவும், முடிவுகளை கணிக்கவும், போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கவும், பாயிண்ட்கள் வாங்கவும், ஸ்கோர் பற்றி தகவல் அறியவும் ஒரு தளமாக செயல்படுகிறது.

செயலியின் வளர்ச்சி மற்றும் தாக்கம்

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்று, ஹூ வின்ஸிலும், மக்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். காரணம், பரிசுகள் தான். போட்டிகளை ரசிப்பது மட்டுமல்லாது, அதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிவது, அனைத்திற்கும் மேலாக, நண்பர்களோடு, விளையாட முடிவது போன்றவை தான் என்கிறார் விவேகானந்த்.

ஆன்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி இதுவரை, 5 தொடர்கள், 125 போட்டிகள், 250,000 வினாடி வினா கேள்விகள், 50,000 போட்டி கணிப்புகள், ஆகியவற்றை கடந்துள்ளது. மேலும் 50,000 ருபாய் வரை பரிசாக அளித்துள்ளது. இதுவரை 6000 முறை பதிவிறக்கம் செயப்பட்டுள்ளது. தற்போது மேலும் நிதி திரட்டுவதன் மூலம், 5 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

யுவர்ஸ்டோரியின் நிலைப்பாடு

ப்ளே ஸ்டோரில் 1.4 மில்லியன் செயலிகள் மற்றும், ஆப் ஸ்டோரில் 1.5 மில்லியன் செயலிகள், இருக்கையில், ஒரு செயலியை, தேடி கண்டுபிடிப்பது எப்படி, என்பது தான் தற்போது, சந்தை நிபுணர்கள் கேள்வி. மேலும் 2020யில், 650 மில்லியன் மக்கள் ஆன்லைனில் இருப்பார்கள் என்றும், இந்தியாவில் கைபேசி மூலம் அதிக செயல்பாடுகள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

செயலி பதிவிறக்கம் செய்ய: WhoWins