ஐஐஎம் சீட், அமெரிக்க வேலை இரண்டையும் உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர முடிவெடுத்த கூலித்தொழிலாளியின் மகன்!

0

பர்னானா குனய்யா ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவர் ஹைதராபாத்தில் சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து தினமும் 100 ரூபாய் மட்டுமே ஈட்டுகிறார். அவரின் மனைவி போலியோ பாதிக்கப்பட்டவர். அதோடு அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிபுரிகிறார். வாழ்க்கையை ஓட்ட இவ்விருவரும் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மகன் பர்னானா யாதகிரி, ஐஐஐடி ஹைதராபாத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார். 

அதுமட்டுமல்ல, அவருக்கு இப்போது அமெரிக்க நிறுவனமான யூனியன் பசிபிக் ரெயில் ரோடில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தவிர ஐஐஎம் நுழைவுத்தேர்வில் 93.4 சதவீதம் எடுத்து ஐஐஎம், இண்டோரில் எம்பிஏ படிக்க தேர்வாகியுள்ளார். 

பட உதவி:  MensXP
பட உதவி:  MensXP

ஆனால் இத்தனை வாய்ப்புகள் அவர் முன்பிருந்தும் யாதகிரி தேர்ந்தெடுத்திருப்பது இந்திய ராணுவத்தில் சேர்வது. இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறிய அவர்,

”என் அப்பா ஒரு சாதரண மனிதர். நான் ராணுவத்தில் ஒரு வீரனாக சேர்வதாக அவர் நினைத்துள்ளார். அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைவிட்டு ராணுவத்தில் சேர்வது அபத்தமான செயல் என அவர் கருதினார்.”

யாதகிரியின் அப்பாவிற்கு அவர் என்ன பொறுப்பில் ராணுவத்தில் சேரவிருக்கிறார் என்று செய்தியில் பார்க்கும் வரை தெரியவில்லை. இந்திய ராணுவ அகாடமியில், தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் பெற்று ராணுவத்தில் சேர தேர்வாகி உள்ளார் என்பது டெராடூனில் நடைப்பெற்ற விழாவில் கலந்துகொண்ட போதே தெரிந்தது. மகனை அப்போது ராணுவ சீருடையில் பார்த்து கண்கள் குளமாகியுள்ளார் யாதகிரியின் அப்பா.  

மேலும் பேசிய யாதகிரி,

“கடும் உழைப்பு என்பது எங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. கார்ப்பரெட்டில் நல்ல பணியில் கைநிறைய சம்பளத்தோடு வாழ்வதை என் இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை. தாய் நாட்டிற்கு பணிபுரிவது என்பது வேறெந்த பணத்திற்கும் ஈடாகாது,” என்கிறார் இந்த மாவீரன். 

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL